சபீதாஜோசப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சபீதாஜோசப் 1989 இல் பத்திரிக்கையாளராக வாழ்வை தொடங்கினார். "குமுதம்", "குங்குமம்", "ராணி", "கல்கி" போன்ற முன்னணி இதழ்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவர். தமது இருபது வருட பத்திரிக்கைத் துறை அனுபவத்தைப் பயனுள்ள நூல்களாக எழுதி வருகிறார். "பெரியார் 100", "அண்ணா 100", "காமராஜர் 100", "கலைஞர் 100" எனும் வரிசையில் வாழ்க்கை வரலாற்றை புதிய கோணத்தில் எழுதிப் புகழ் பெற்றவர்.

எழுத்து பயணம்[தொகு]

எந்த கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்-என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்லில் அதை தேய்த்துப் பார்-என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு. இவற்ரை உறுதிமொழியாகக் கொண்டு தமது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் சபீதாஜோசப்.

எழுத்து நடை[தொகு]

எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி.

நூல்கள்[தொகு]

2006 இல் 10 நூல்கள் 2007 இல் 20 நூல்கள் 2008 இல் 22 நூல்கள் 2009 இல் 16 நூல்கள் 2010 இல் இன்னும் பல அரிய நூல்கள்.

சான்றாதாரம்[தொகு]

அறிஞர் அண்ணா மாணவர்களுக்குச் சொன்னது(2010).சபீதாஜோசப்(ஆசிரியர்).நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 014.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபீதாஜோசப்&oldid=2801753" இருந்து மீள்விக்கப்பட்டது