உள்ளடக்கத்துக்குச் செல்

சபா மாநில பூங்காக்கள் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான கினபாலு பூங்கா (26 சனவரி 2026)

சபா மாநில பூங்காக்கள் துறை (ஆங்கிலம்: Sabah Parks; மலாய்; Taman-Taman Sabah) என்பது மலேசியாவின், சபா மாநிலத்தில் உள்ள இயற்கை, அறிவியல் மற்றும் வரலாற்று மரபுகளை பாதுகாப்பதற்காக 1964-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சட்டப்படியான அமைப்பாகும்.

போர்னியோ தீவில் அமைந்துள்ள இந்த அமைப்பு, சபா மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட பல்வேறு இடங்களை; குறிப்பாக தேசியப் பூங்காக்களாக நியமிக்கப்பட்ட காட்டுயிர் காப்பகங்களை நிருவகிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பொறுப்பு வகிக்கிறது.[1] மேலும், அந்தப் பூங்காக்களின் சுற்றுச்சூழல் அடிப்படைத் தனமையில் எந்த ஓர் உடன்பாடும் செய்யப்படாமல் உறுதிசெய்து; சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு வசதிகளை மேம்படுத்துவதும் சபா மாநில பூங்காக்கள் துறையின் பொறுப்புகளில் ஒன்றாகும்.

சபா மாநில பூங்காக்கள் அமைப்பில் முதன்முதலில் சேர்ப்பதற்காக கினபாலு மலை தேர்வு செய்யபட்டது.[2] இதன் விளைவாக, 1964-இல் கினபாலு பூங்கா, சபா மாநில அரசிதழில் வெளியிடப்பட்டது. கினபாலு பூங்கா தற்போது உலகப் பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3][4]

அறங்காவலர்கள்

[தொகு]

சபா பூங்காக்கள் அமைப்பு ஓர் அறங்காவலர் குழுவால் (Sabah Parks Trustees) நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் குழு, சபா பூங்கா அறங்காவலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இக்குழுவில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், மூன்று அரசுசார் உறுப்பினர்கள், நான்கு இதர உறுப்பினர்கள் மற்றும் ஓர் இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேசியப் பூங்காக்கள்

[தொகு]

சபா பூங்காக்கள் வாரியத்தால் நிர்வகிக்கப்படும் ஒன்பது பாதுகாக்கப்பட்ட பூங்காக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. ↑ ""Sabah Parks is responsible for the management and promotion of the various protected reserves in Sabah"". Sabah Parks. Retrieved 1 August 2026.
  2. ↑ "Kinabalu Park". Sabah Parks. Archived from the original on 4 August 2008. Retrieved 1 November 2008.
  3. ↑ "Kinabalu Park". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). Retrieved 9 August 2021.
  4. ↑ Sutherland, Duncan. "E. J. H. Corner". www.nlb.gov.sg. Retrieved 8 January 2026.

வெளி இணைப்புகள்

[தொகு]