சபா மாநிலப் பண்
| இசை | எச்.பி. எர்மன் |
|---|---|
| சேர்க்கப்பட்டது | 1963 |
| இசை மாதிரி | |
சபா தானா ஆயர் அக்கு (இசை) Sabah Tanah Airku | |
சபா தானா ஆயர் அக்கு (ஆங்கிலம்: Sabah, My Homeland; மலாய்: Sabah Tanah Airku) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மாநிலப் பண் ஆகும். இந்தப் பண் சிங்கப்பூரைச் சேர்ந்த எச்.பி. எர்மன் (HB Hermann) என்பவரால் இசையமைக்கப்பட்டது. சபா மாநிலப் பண்ணைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு போட்டிக்காக அவர் அந்தப் பண்ணுக்கு இசையமைத்தார்.
அந்தப் பண் 1963 மே 16 அன்று போட்டியில் வென்றது. மேலும் அதே ஆண்டு சூலை 18 அன்று முதன்முதலாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 16 அன்று மலேசியக் கூட்டமைப்பில் சபா இணைந்தவுடன், அந்தப் பண் சபா மாநிலப் பண்ணாக மாறியது.[1][2] 1996 சனவரி 1 அன்று, சபா மாநில பண்ணிற்கு துரிதமான தாளம் இணைக்கப்பட்டது.[3]
பாடல் வரிகள்
[தொகு]| தமிழ் மொழி | மலாய் மொழி | ஆங்கிலம் |
|---|---|---|
சபா, என் தாய்நாடு |
Sabah, tanah airku |
Sabah, my homeland |
மேற்கோள்
[தொகு]- ↑ JIFFAR, SUZIANAH (2018-09-14). "'Sabah Tanah Airku' on air for the first time 55 years ago". NST Online (in ஆங்கிலம்). Retrieved 2020-02-16.
- ↑ "Lagu Sabah Tanah Airku sinonim usia pembentukan Malaysia" [Sabah My Homeland Song synonymous with age of Malaysian Formation]. bharian.com.my. 14 September 2017.
- ↑ "Faster tempo of state anthem launched" (in en). New Straits Times: pp. 8. 1996-01-01. https://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19960101&printsec=frontpage&hl=en.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Sabah.org.my - State Flag, Crest, and Anthem பரணிடப்பட்டது 5 சூலை 2006 at the வந்தவழி இயந்திரம்
