சபா. குகதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபா. குகதாஸ்
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
சனவரி, 2018 – அக்டோபர் 24, 2018
முன்னவர் இம்மானுவேல் ஆர்னோல்ட்
தலைவர், இளைஞரணி தமிழீழ விடுதலை இயக்கம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 8, 1980 (1980-08-08) (அகவை 42)
பண்ணாகம்,இலங்கை
குடியுரிமை இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி தமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில் ஆசிரியர்

சபா. குகதாஸ் (saba.kugathas, பிறப்பு: ஆகத்து 08, 1980) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் ஆவார்.[1]

அரசியலில்[தொகு]

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வாக்குப் போதாமையால் வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் 2017 ஆம் ஆண்டு யாழ் மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்கு, சபா. குகதாசிற்கு வடமாகாண சபை உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது.[2] 2018 ஆம் ஆண்டு அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானத்தின் முன்னிலையில் வடமாகாண சபை உறுப்பினராக சேர்ந்து கொண்டார்.[3]

தேர்தல் வரலாறு[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2013 மாகாணசபை யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 11,256 தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேற்கோள்கள்[தொகு]

  1. https://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/
  2. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Filling of a Vacancy in the Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary (Colombo, Sri Lanka) 2055/34. 24 January 2018. http://www.documents.gov.lk/files/egz/2018/1/2055-34_E.pdf. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-07-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-14 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா._குகதாஸ்&oldid=3552926" இருந்து மீள்விக்கப்பட்டது