சபானா சபானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபானா சபானா
Sapana Sapana
தனிநபர் தகவல்
பிறப்பு2 சனவரி 1988 (1988-01-02) (அகவை 35)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
29 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது.

சபானா சபானா (Sapana Sapana) ஓர் இந்திய மகளிர் நடைப்போட்டி வீரராவார். இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் 1988 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதி சபானா பிறந்தார். 2015 இல் சீனாவின்[1] பெய்சிங் நகரில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன் போட்டியில் மகளிருக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் இவர் பங்கேற்றார்[2][3]. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் 20 கிலோமீட்டர் தொலைவை 1:40:35.70 நேரத்தில் நடந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன்மூலம் பிரேசில் நாட்டின் இரியோடி செனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தகுதி பெற்றார்[4][5].

இராசத்தான் மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக சபானா சபானா பணிபுரிகிறார்[2][3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபானா_சபானா&oldid=2719686" இருந்து மீள்விக்கப்பட்டது