சபஹார்

ஆள்கூறுகள்: 25°17′31″N 60°38′35″E / 25.29194°N 60.64306°E / 25.29194; 60.64306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபஹார்
چابهار
துறைமுக நகரம்
Skyline of சபஹார்
சபஹார் is located in ஈரான்
சபஹார்
சபஹார்
ஈரானின் தென்கிழக்கில் சபஹார் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°17′31″N 60°38′35″E / 25.29194°N 60.64306°E / 25.29194; 60.64306
நாடுஈரான்
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு)
 • மொத்தம்106,739 [1]
நேர வலயம்ஈரானிய சீர் நேரம் (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)கோடைக்காலம் (ஒசநே+4:30)
இணையதளம்http://chabahar.ir/

சபஹார் (Chābahār),(மொழிபெயர்ப்பு:|நான்கு ஊற்றுகள்);[2] ஈரான் தென்கிழக்கில் அமைந்த சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் சபஹார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது ஓமன் வளைகுடாவில் அமைந்த சிறப்பு பொருளாதார மண்டல துறைமுக நகரம் ஆகும். பாகிஸ்தான் நாட்டின் குவாதர் துறைமுக நகரத்திற்கு மேற்கில் சபஹார் நகரம் 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சபஹார் துறைமுக நகரத்தில் பெரும்பான்மையாக பாரசீக மொழியுடன் பலூச்சி மொழி பேசும்சுன்னி இசுலாமியர்கள் பாரசீக மொழியுடன் பலூச்சி மொழி பேசும் சுன்னி இசுலாமிய மக்கள் வாழ்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

சபஹார் நகரத்தின் துறைமுகம், ஈரான் நாட்டின் சுதந்திர பொருளாதார மண்டலமாக திகழ்கிறது. இந்தியப் பெருங்கடலுடன் ஈரானின் மிக நெருக்கமான மற்றும் சிறந்த தொடர்பு மையமாக சாபஹார் நகர துறைமுகம் உள்ளது. இக்காரணத்திற்காக இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய ஆசியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளிடையே போக்குவரத்து வழிகளை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துவதன் மூலம் ஈரானின் கிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்கு மையப் புள்ளியாக சாபஹார் நகரம் உள்ளது.[3]

துறைமுகம்[தொகு]

இரவில் சபஹார் துறைமுகம்

ஆழ்கடல் சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வகையில் பெரிதும் உதவுகிறது.[4][5]சபஹார் துறைமுகம் வழியாக ஈரானின் எரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. 2014-இல் இந்திய அரசு சபஹார் துறைமுக மேம்பாட்டிற்கு $85 மில்லியன் டாலர் அளவிற்கு செலவு செய்துள்ளது. 2016-இல் சபஹார் துறைமுக வளர்ச்சிக்கு இந்தியா $500 மில்லியன் டாலர் அளவிற்கு நிதியுதவி செய்துள்ளது.[6]இதன் மூலம் சபஹார் துறைமுகம் ஆழ்கடல் துறைமுகமாக மேம்பட்டுள்ளது. சபஹார் நகர துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தான், நடு ஆசியா, உருசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகள் மூலம் சரக்குகளை கொண்டு செல்ல வசதி பெற்றுள்ளது. மேலும் பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் பந்தர் அப்பாஸ் நகர துறைமுகத்துடன் இணைப்பு கொண்டுள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், சபஹார்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 31.0
(87.8)
33.0
(91.4)
38.0
(100.4)
42.0
(107.6)
46.0
(114.8)
45.2
(113.4)
47.0
(116.6)
42.4
(108.3)
42.0
(107.6)
41.4
(106.5)
37.0
(98.6)
32.0
(89.6)
47
(116.6)
உயர் சராசரி °C (°F) 24.5
(76.1)
25.0
(77)
28.1
(82.6)
31.0
(87.8)
34.0
(93.2)
35.0
(95)
33.8
(92.8)
32.4
(90.3)
32.2
(90)
32.4
(90.3)
29.5
(85.1)
26.3
(79.3)
30.35
(86.63)
தினசரி சராசரி °C (°F) 20.4
(68.7)
21.3
(70.3)
24.2
(75.6)
27.1
(80.8)
30.4
(86.7)
31.9
(89.4)
31.1
(88)
29.8
(85.6)
29.1
(84.4)
28.2
(82.8)
25.0
(77)
22.0
(71.6)
26.71
(80.08)
தாழ் சராசரி °C (°F) 15.0
(59)
16.0
(60.8)
19.0
(66.2)
22.3
(72.1)
25.2
(77.4)
28.0
(82.4)
28.1
(82.6)
26.9
(80.4)
25.4
(77.7)
22.7
(72.9)
18.8
(65.8)
16.2
(61.2)
21.97
(71.54)
பதியப்பட்ட தாழ் °C (°F) 7.0
(44.6)
7.0
(44.6)
9.6
(49.3)
14.0
(57.2)
16.0
(60.8)
22.0
(71.6)
21.0
(69.8)
19.0
(66.2)
19.0
(66.2)
13.2
(55.8)
9.0
(48.2)
7.0
(44.6)
7
(44.6)
மழைப்பொழிவுmm (inches) 29.4
(1.157)
37.9
(1.492)
14.9
(0.587)
6.1
(0.24)
0.1
(0.004)
0.5
(0.02)
6.2
(0.244)
2.1
(0.083)
1.2
(0.047)
0.0
(0)
4.4
(0.173)
13.7
(0.539)
116.5
(4.587)
ஈரப்பதம் 61 66 69 70 72 75 77 77 76 73 67 61 70.3
சராசரி மழை நாட்கள் 3.6 3.4 2.0 1.3 0.1 0.1 1.3 0.8 0.2 0.0 0.5 1.7 15
சூரியஒளி நேரம் 240.2 234.1 263.8 278.2 330.2 284.8 244.6 241.4 260.9 295.5 272.5 249.2 3,195.4
ஆதாரம்: NOAA (1963–1990)[7]


படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபஹார்&oldid=3704716" இருந்து மீள்விக்கப்பட்டது