சபல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபல்கர், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முரைனா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 கணக்கீட்டின்படி, சபல்கரின் மக்கள் தொகை 40,333. இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் உள்ளனர். சபல்கரின் சராசரி கல்வியறிவு விகிதம் 68% ஆகும். இது தேசிய சராசரியான 74% ஐ விட குறைவாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 74% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 52% ஆகவும் இருந்தது.[1] மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டவர்கள்.

பட்டியல் சாதியினர் மக்கள் தொகையில் சுமார் 16.6%, மற்றும் மற்றொரு பட்டியல் பழங்குடியினர் மக்கள் தொகையில் சுமார் 8.6% உள்ளனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 7,091 குடியிருப்புகள் பதிவாகியுள்ளன. இப்பகுதியின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 11,360 ஆக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில், 10,262 பேர் முறையான தொழிலாளர்களாகவும், மீதமுள்ள 1,098 பேர் முறையற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய இடங்கள்[தொகு]

சபல்கர் கோட்டை: இடைக்கால வயது நினைவுச் சின்னங்களில் இக்கோட்டை குறிப்பிடத்தக்கது. கோட்டையின் பின்னால் சிந்தியா காலத்தில் ஒரு 'அணை' கட்டப்பட்டது. சபல்கரின் அடித்தளத்தை சப்லா என்ற குஜார் அமைத்தார். கரோலியின் ராஜா கோபால் சிங்கால் ஒரு குன்றின் மீது இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை கைப்பற்ற சிக்கந்தர் லோதி ஒரு இராணுவத்தை அனுப்பினார். மராட்டியர்கள், வட இந்தியா வழியாக தங்கள் திட்டத்தினால், கோட்டையை மீண்டும் கைப்பற்றி, கரோலியின் ராஜாவுக்கு திருப்பி கொடுத்தனர். கி.பி 1795 இல், இது மீண்டும் ராஜாவிடமிருந்து காண்டே ராவ் என்பவரால் கைப்பற்றப்பட்டது. லார்ட் வலேஜலி தவுலத் ராவ் சிந்தியா (1764-1837) தனது ஆட்சியின் போது இந்தக் கோட்டையில் வாழ்ந்தார். இந்தக் கோட்டை 1804 இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. கோட்டையைச் சுற்றியுள்ள பகுதி 1809 இல் சிந்தியா இராச்சியத்தில் சேர்க்கப்பட்டது.

அலகியா கோ: சபல்கரில் உள்ள மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இது காளி (இந்து கடவுள்) தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பழங்கால கோயில், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தில் ஒன்பது நாட்களுக்கு திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

அக்னி ஏவுகணை மேம்பாட்டு ஆலை: [2] மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் தலைமைச் செயலாளர் 2017 ஆகஸ்டில் டி.ஆர்.டி.ஓ. புதுடெல்லி குழுவுடன் இந்த ஊருக்கு வருகை தந்து சபல்கரில் அக்னி ஏவுகணை ஆலை நிறுவப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 1500 ஹெக்டேர் நிலத்தை அரசு ஒதுக்கியுள்ளது.

ராவ் காட்: சபல்கருக்குள் ஒரு அற்புதமான சுற்றுலா பகுதி. [3]

போக்குவரத்து இணைப்பு[தொகு]

இரயில்வே[தொகு]

சபல்கர் குவாலியருடன் ஒரு குறுகிய இரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரயில்வே "குவாலியர் லைட் இரயில்வே" என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு அடி (610 மிமீ) குறுகிய பாதை, ஜி.எல்.ஆர் 199.8 கிலோமீட்டர் (124.1 மைல்) நீளம் கொண்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் முதல் சியோப்பூர் காலன் வரை ஓடுகிறது. இந்திய இரயில்வேயின் மத்திய இரயில்வே துறை நிர்வகிக்கும் இந்த பாதையை மகாராஜா இரண்டாம் மாதவ் ரோவா தொடங்கி 1909 இல் நிறைவு செய்யப்பட்டது. இது குவாலியர், சியோப்பூர் காலன், கைலாரஸ், ஜூரா போன்றவற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில், 2010 இரயில்வே நிதி ஒதுக்கீட்டில் திருமதி மம்தா பானர்ஜி (முன்னாள் ரயில்வே மந்திரி) குவாலியர்-சியோப்பூர் காலன் பாதை கோட்டா வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்றுவரை அதற்கான பணி தொடங்கவில்லை. தற்போதைய என்.டி.ஏ அரசாங்கத்தால் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக பெரும்பாலும் செய்தித்தாட்களில் வெளிவந்தது. இந்தச் செய்தி அப்பகுதிவாழ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கோபத்தையும் வேதனையையும் உண்டாக்கியது.

சாலைகள்[தொகு]

சபல்கர் மத்திய பிரதேசத்தின் பல நகரங்களுடன் மாநில நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. குவாலியர், மோரினா, சியோப்பூர், சிவ்புரீ, ஜெய்ப்பூர், கோட்டா, ஆக்ரா, மதுரா மற்றும் தில்லி போன்றவற்றுக்கு தினசரி பேருந்துகள் கிடைக்கின்றன.

வான்வழிகள்[தொகு]

அருகிலுள்ள விமான நிலையம் சபல்கரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாலியரில் அமைந்துள்ளது. குவாலியர் விமான நிலையத்திலிருந்து புது தில்லி மற்றும் இன்னும் பல நகரங்களுக்கு தினசரி விமானங்கள் கிடைக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "Sabalgarh Population". ourhero.in. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
  2. "Agni Missile" (in Hindi). DainikBhaskar. Bhaskar News Network. 29 August 2017. https://www.bhaskar.com/news/MP-MUR-MAT-latest-morena-news-042503-3291595-NOR.html. 
  3. https://www.patrika.com/morena-news/if-you-go-to-this-tourist-spot-in-sabargadh-you-will-be-stunned-1529361/
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபல்கர்&oldid=2886078" இலிருந்து மீள்விக்கப்பட்டது