சன்வே தைஹுலைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சன்வே தைஹுலைட்
இடம்சீனா
கட்டமைப்புசன்வே ரைஸ் 2.0.5 லினக்ஸ் இயங்குதளம்
சக்தி15 MW (24 MW with cooling)
நினைவகம்1.31 PB
வேகம்93 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு
நோக்கம்தொழில்துறை வடிவமைப்பு,மருத்துவ & வானிலை ஆராய்ச்சி
இணையம்http://demo.wxmax.cn/wxc/index.php

சன்வே தைஹுலைட் (English :Sunway TaihuLight, Chinese:神威·太湖之光) என்பது 93 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு கொண்ட சீனாவின் மீத்திறன் கணினியாகும்[1].அதாவது ஒரு வினாடியில் 93 ட்ரில்லியன் கணித்தல்களைச் செய்யக்கூடியது. [2] ஒரு குவாட்ரில்லியன்  என்பது ஓராயிரம் டிரில்லியன்களைக் (1000 X 1000 X 1000 X 1000 X 1000) குறிக்கும். இம் மீத்திறன் கணணியானது 40,960 ப்ரோசெசர் இணைப்புகளை கொண்டுள்ளது. இதன் நினைவகம் 1.31 Peta Byte (10005 PB) கொண்டு செயல்படுகின்றது. இது சன்வே ரைஸ் 2.0.5 (Sunway RaiseOS 2.0.5) என்ற லினக்ஸ் இயங்குதளத்தின் முலம் இயக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இதற்கு முன்னர் உலகின் அதிவேகக் கணணியாக இருந்த சீனாவின் தியான்கே-2 மீத்திறன் கணணியை போல் ஏறத்தாழ இரண்டு மடங்கு வேகமுடையதாகவும் ,மும்மடங்கு திறமையாகவும் செயல்படுகிறது.எடுத்துக்காட்டாக உலகிலுள்ள 7.2 பில்லியன் மக்கள் மின்னணு கால்குலேட்டர்களை 32 ஆண்டுகள் பயன்படுத்தி அல்லது இரண்டு மில்லியன் டெஸ்க்டாப் கணினிகள் ஒன்றாக ஒரு நிமிடம் பயன்படுத்தி செய்யும் ஒரு வேலையை இது 60 வினாடியில் முடித்துவிடும் வல்லமை கொண்டது. இது சீனாவில் ஜியாங்க்சு மாகணத்திலுள்ள தேசிய மீத்திறன் கணினி மையத்தில் (National Research Centre of Parallel Computer Engineering and Technology (NRCPC)) உள்ளது.

அமெரிக்க சக்திவளத்துறையினரால் பயன்படுத்தப்படும் டைட்டான் மீத்திறன் கணனியின் உச்சபட்ச செயற்பாட்டு திறன் 17.59 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு ஆகும். சன்வே தைஹுலைட் மீத்திறன் கணனியானது சீன தேசிய மீக்கணினிப் மையத்தில் வக்ஷி(wuxi) புகைப்பட சேர் ஜியாங்சு(Jiangsu) மாகாணத்தில் உள்ளது. இதன் மதிப்பு 270 மில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 18170851500. இது தேசிய மீத்திறன் கணனி நிறுவகத்தில் நிறுவப்பட்டு தென்சீனாவின் கல்வி மற்றும் ஆய்வுகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.இது உலகின் மிக வேகமான கணினியாக ஜூன் 2016-ல் அறிவிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

பயன்பாடுகள்[தொகு]

  • தொழில்துறை வடிவமைப்பு
  • மருத்துவ ஆராய்ச்சி
  • வானிலை ஆராய்ச்சி
  • எண்ணெய் வள மேம்படுத்துதல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "June 2016". TOP500. பார்த்த நாள் June 2016.
  2. "Visit to the National University for Defense Technology Changsha, China" (June 2016). பார்த்த நாள் June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்வே_தைஹுலைட்&oldid=2084659" இருந்து மீள்விக்கப்பட்டது