சன்னா பங்டேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்னா பங்டேட்டா
உயிரியல் வகைப்பாடு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: ஆக்டினோப்டெர்ஜி
வரிசை: அனாபேண்டிபார்மிசு
குடும்பம்: சன்னானிடே
பேரினம்: சன்னா
இனம்: ச. பங்டேட்டா
இருசொற் பெயரீடு
சன்ன பங்டேட்டா
பிளாச்சு, 1793
வேறு பெயர்கள் [2]
  • ஒபியோசெபாலசு பங்டேட்டசு பிளாச்சு, 1793
  • ஒபிசெபாலசு காருவே லாசெபெடெ, 1801
  • ஒபியோசெபாலசு லேட்டா ஆமில்டன், 1822
  • ஒபிசெபாலசு இண்டிகசு மெக்கிளிலேண்ட், 1842
  • ஒபியோசெபாலசு அபினிசு குந்த்தர், 1861

சன்னா பங்டேட்டா (Channa punctata), புள்ளிப் பாம்புத் தலை மீன் என்பது விரால் மீனின் ஓர் வகையாகும். இது இந்தியத் துணைக்கண்டம் அருகிலுள்ள பகுதிகளான, ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், வங்களாதேசம், மியான்மர் மற்றும் திபெத் முழுவதும் காணப்படுகிறது.[2] இதன் இயற்கை வாழிடங்கள் சதுப்பு நிலங்கள், குளங்கள் மற்றும் உவர் நீர் நிலைகளாகும்.[2] இது மிக அதிக உணவு மதிப்பினைக் கொண்டுள்ளது.

விளக்கம்[தொகு]

சன்னா பங்டேட்டா பொதுவாக 15.0 cm (5.9 அங்) நீளம் வரை வளரக்கூடியது. ஆனால் 31.0 cm (12.2 அங்) நீள ஆண் மீனும் பிடிக்கப்பட்டுள்ளன.[2] இந்த மீன் இனத்திற்கு பெரும் அச்சுறுத்தல்கள் இல்லாததால், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

இந்தச் சிற்றினம் மாமிச உண்ணி வகையினைச் சார்ந்தது. இந்த இனத்தின் பிடித்த உணவு மற்ற சிறிய மீன்கள், மஞ்சள் கரு, மற்றும் மீன் இளம் உயிரிகள். இதன் இயற்கையான வாழிடத்தில், இது ஓட்டுமீன்கள், மெல்லுடலிகள், பூச்சிகள், சிறிய மீன்கள், அரை செரிமான பொருட்கள் மற்றும் சில நேரங்களில் தாவரங்களையும் உட்கொள்கிறது. இதன் உணவுப் பழக்கம் பருவகால மாறுதலுக்கு உட்பட்டது. முட்டையிடும் காலத்தில் முதிர்ந்த மீன்களில் உணவின் தாகம் குறைவாக இருக்கும். இளம் மீன்கள் தொடர்ந்து உண்ணும் பழக்கமுடையது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Chaudhry, S.; de Alwis Goonatilake, S.; Fernado, M.; Kotagama, O. (2019). "SPOTTED SNAKEHEAD". IUCN Red List of Threatened Species 2019: e.T166437A60584432. https://www.iucnredlist.org/species/166437/60584432. பார்த்த நாள்: 24 December 2019. 
  2. 2.0 2.1 2.2 2.3 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2014). Channa punctata in FishBase. February 2014 version.
  3. AS Bhuiyan, S Afroz, T Zaman (2006). "Bhuiyan, A.S., Afroz, S. and Zaman, T., 2006. Food and feeding habit of the juvenile and adult snake head, Channa punctatus (Bloch)". J. Life Earth Sci 1 (2): 53–54. https://www.researchgate.net/publication/237307751. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னா_பங்டேட்டா&oldid=3203413" இருந்து மீள்விக்கப்பட்டது