உள்ளடக்கத்துக்குச் செல்

சன்னத் சூபைர் ரகுமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்னத் சூபைர் ரகுமானி
ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி
தாய்மொழியில் பெயர்ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி
பிறப்பு29 ஆகஸ்ட் 2001
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008 – தற்போது
அறியப்படுவதுபுல்வா; து ஆசிக்; காற்றோன் கி கில்லாடி 12

சன்னத் சூபைர் ரகுமானி (ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி; பிறப்பு: 29 ஆகஸ்ட் 2001) என்பவர், முக்கியமாக இந்தி மொழித் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை ஆவார். காசி – அப் நா ரகா தேரா ககாச் கோரா என்ற தொடரில் காசி, புல்வா என்ற தொடரில் புல்வா, தூ ஆசிக் என்ற தொடரில் பங்க்தி ஆகிய கதா பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இவர் பெயர்பெற்றார். 2022ஆம் ஆண்டில், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாகச விளையாட்டு அடிப்படையிலான நிகழ்ச்சியான ஃபியர் ஃபேக்டர்: காற்றோன் கி கில்லாடி 12-இல் கலந்துகொண்டு, 4ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

சன்னத் சூபைர் ரகுமானி, 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி, மும்பை நகரில், சூபைர் அகமது ரகுமானி மற்றும் நாஸ்னீன் சூபைர் ரகுமானி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். 2019ஆம் ஆண்டில், பன்னிரண்டாம் வகுப்பு வாரியத் தேர்வில் 81% மதிப்பெண்களைப் பெற்றார். மும்பையிலுள்ள கன்டிவலி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.


நடிப்பு வாழ்க்கை

[தொகு]

ஆரம்ப காலம் (2008–2016)

[தொகு]

சன்னத் சூபைர் தனது நடிப்பு வாழ்க்கையை 2008ஆம் ஆண்டில், என்.டி.டி.வி. இமேஜின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாந்த் கெ பார் சலோ என்ற தொடரின் மூலம் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, ஸ்டார் ஒன் (Star One) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மருத்துவத்துறை சார்ந்த காதல் தொடரான டில் மில் கயீ-இல், இளம் நோயாளி தமன்னா என்ற சிறு பாத்திரத்தில் நடித்தார்.

2010இல் இமேஜின் தொலைக்காட்சியின் காசி – அப் நா ரஹெ தெரா ககாச் கொரா மற்றும் 2011இல் கலர்ஸ் தொலைக்காட்சியின் புல்வா ஆகிய தொடர்களின் மூலம் குழந்தை நடிகையாக அங்கீகாரம் பெற்றார். பின்னர் பாரத் கா வீர் புத்ரா–மகாராணா பிரதாப் என்ற தொடரில் இளம் பூல் கன்வார் என்ற பாத்திரத்தில் நடித்தார்.

முக்கிய பாத்திரங்கள் (2017–தற்போது)

[தொகு]

2017ஆம் ஆண்டில், கலர்ஸ் தொலைக்காட்சியின் காதல் கதைத் தொடரான தூ ஆசிக்-இல், பங்க்தி ஷர்மா தன்ராஜ்கீர் என்ற முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். 2018ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான ஹிச்கி-இல் ஒரு மாணவியாக நடித்தார்.

2022ஆம் ஆண்டில், கலர்ஸ் தொலைக்காட்சியின் ஸ்டண்ட் அடிப்படையிலான ரியாலிட்டி நிகழ்ச்சியான ஃபியர் ஃபேக்டர்: காற்றோன் கி கில்லாடி-இல் கலந்துகொண்டு, இறுதியில் 4ஆவது இடத்தைப் பெற்றார். அதே ஆண்டில், திலராஜ் க்ரேவாலுடன் இணைந்து நடித்த குல்ச்சே சோலெ என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் பஞ்சாபி சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படம் 2022 நவம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.

2025 ஜூன் மாதத்தில், ப்ரைம் வீடியோ ஒளிபரப்பான தி ட்ரைடர்ஸ் இந்தியா என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். 9ஆவது நாளில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, 8ஆவது இடத்தைப் பிடித்தார்.

விளம்பரத் தூதுவர் பணி

[தொகு]

2020 ஜனவரியில், இந்தியாவின் மின்னணு பொருள் நிறுவனமான யூ.பி.ஒ.என் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக சன்னத் சூபைர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 பட்டியலில் "ஊடகம், சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம்" பிரிவில் இடம்பெற்றார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்பு
2011ஆகா : தி வார்னிங்முஸ்கான்இந்திசிறுபாத்திரம்
2011லவ் கா தி எண்ட்மிண்டிஇந்தி
2017வாட் வில் பீபுள் சேசலீமாஉருது/நார்வேஜியன்
2018ஹிச்கிநடாஷாஇந்தி
2022குல்ச்சே சொலேஹர்லீன்பஞ்சாபி

தொலைக்காட்சித் தொடர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)

[தொகு]
ஆண்டுதொடர்பாத்திரம்குறிப்பு
2008–2009சாந்த் கி பார் சலோ
2010காசி – அப் நா ரஹெ தெரா ககாச் கொராஇளம் காசி
2010–2011மட்டி கி பன்னோஇளம் அவந்தி
2011புல்வாஇளம் புல்வா
2014பாரத் கா வீர் புத்ரா–மகாராணா பிரதாப்இளம் பூல் ராதோர்
2017–2018தூ ஆசிக்பங்க்தி ஷர்மா தன்ராஜ்கீர்
2019ஆப் கி ஆ ஜானே செபங்க்தி சிங்
2022ஃபியர் ஃபேக்டர்: காற்றோன் கி கில்லாடி 12போட்டியாளர்4ஆவது இடம்
2024லாஃபர் செஃப் - அன்லிமிடட் என்டர்டாய்ண்மென்ட்தான் (பருவம் 1 – முதன்மை)
2025தி ட்ரைடர்ஸ் இந்தியாபோட்டியாளர்8ஆவது இடம்

விருதுகள்

[தொகு]
ஆண்டுவிருதுபிரிவுபடைப்புமுடிவு
2011கோல்ட் விருதுகள்சிறந்த குழந்தை நடிகை (பெண்)புல்வாவென்றார்
2012இந்தியன் டெல்லி விருதுகள்சிறந்த குழந்தை நடிகை (பெண்)பரிந்துரை
2018கோல்ட் விருதுகள்முதன்மைப் பாத்திரத்தில் அறிமுகம் (பெண்)தூ ஆசிக்வென்றார்
2020கோல்ட் கிளாம் அண்ட் ஸ்டைல் விருதுகள்பெரிதும் விரும்பப்படும் இன்ஃப்ளுயன்சர் (பெண்)வென்றார்
2023பாலிவுட் ஹங்காமா ஸ்டைல் ஐகான்ஸ்ஸ்டைலான டிஜிட்டல் கலைஞர் (பெண்)பரிந்துரை

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னத்_சூபைர்_ரகுமானி&oldid=4547088" இலிருந்து மீள்விக்கப்பட்டது