உள்ளடக்கத்துக்குச் செல்

சனையா இராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனையா இராணி
பிறப்பு17-09-1983
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்சானு, சன்னி, டின்டின்
பணிநடிகை, டான்சர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2006 – அறிமுகம்
உயரம்1. 67மீட்டர் (5 அடி 6 அங்குலம்)
சமயம்சரத்துஸ்திர சமயம்

சனையா இராணி 17ம் திகதி செப்டம்பர் மாதம் 1983ஆம் ஆண்டு மும்பை மகாராட்டிரத்தில் பிறந்தார். இவர் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பாலிவுட்டில் (ஃபனா) என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் இது காதலா? என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிசியமானார். இது காதலா? இந்த தொடர் ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிபரப்பான இஸ் பார் கோ கய நாம் டூன்? என்ற தொடரின் தமிழ் மொழி மாற்று தொடர் ஆகும்.

தற்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சி யில் ரங் ரசியா என்ற தொடரில் பார்வதி என்ற வேடத்தில் நடிக்கின்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் மும்பைகர்ரில் பிறந்தார். இவர் பெர்சியன் வம்சத்தினர். இவருக்கு ஒரு சகோதர் மற்றும் ஒரு சகோதரி உண்டு. இவர் தனது பள்ளி படிப்பை 7 ஆண்டுகள் உதகமண்டலம்தில் (உண்டி) போர்டிங் ஸ்கூல் படித்தார். தனது கல்லூரி படிப்பை Sydenham காலேஜ்ல் படித்தார்.

மிலே ஜப் ஹம் தும் என்ற தொடரில் இவருடன் நடித்த துணை நடிகர் மொஹிட் செஹ்கல் இவர் காதலித்து வருகின்றார்.

தொழில்

[தொகு]

இவர் முதலில் விளப்பர படங்களில் நடித்துவந்தார். அதை தொடர்ந்து 2006ம் ஆண்டு பானா என்ற திரைபடத்தில் நடித்தார். 2007ம் ஆண்டு லெப்ட் ரைட் லெப்ட் என்ற தொடரில் கேடட் சமீரா ஷெராப் என்ற கதாபத்திரத்திலும் 2008ம் ஆண்டு ராதா கி படியான் குச் கற் டிக்ஹஎங்கி என்ற தொடரில் சனையா என்ற கதாபத்திரத்தில் நடித்தார். 2008ம் ஆண்டு ஸ்டார் ஒன் தொலைக்காட்சியில் 3வரில் ஒரு கதாநாயகியாக நடித்தார்.

ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இஸ் பார் கோ கய நாம் டூன்? என்ற தொடரில் இவர் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடர் மாபெரும் வெற்றி தொடர் ஆகும், இந்த தொடரில் நடித்ததற்காக இவர் பல விருதுகளை வென்றார். இந்த தொடரின் மூலம் சின்னத்திரை நடிகைகளில் இவர் ஒரு பிரபல்யமான நடிகை ஆனார். இவர் கலர்ஸ் தொலைக்காட்சி யில் ரங் ரசியா என்ற தொடரில் நடித்துள்ளார்.

சின்னத்திரை

[தொகு]
ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம்
2008 லெப்ட் ரைட் லெப்ட் கேடட் சமீரா ஷெராப்
2008 ராதா கி படியான் குச் கற் டிக்ஹஎங்கி சனையா
2008–2010 மிலே ஜப் ஹம் தும் குஞ்சன் பூஷன்
2011–2012 இது காதலா? சுருதி
2013 ச்ஹன்ச்ஹன் ச்ஹன்ச்ஹன் ஸரப்ஹை-போரிசகர்
2013 ரங் ரசியா பார்வதி

திரைப்படம்

[தொகு]
  • 2006 - பானா

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனையா_இராணி&oldid=3755770" இலிருந்து மீள்விக்கப்பட்டது