சனா மசாலா
| தொடங்கிய இடம் | இந்தியத் துணைக்கண்டம் |
|---|---|
| பகுதி | வட இந்தியா[1] |
| முக்கிய சேர்பொருட்கள் | கொண்டைக் கடலை, வெங்காயம், தக்காளிes, கொத்தமல்லி, வெள்ளைப்பூண்டு, மிளகாய், இஞ்சி, எண்ணெய், மசாலா |
சனா மசாலா (Chana masala) என்பது (சோலே மசாலா அல்லது சோலே என்று அழைக்கப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய தக்காளி சாசில் கொண்டைக்கடலை சேர்த்து சமைக்கப்படும் ஒரு குழம்பு ஆகும். [1][2][3] இந்த உணவானது இந்தியா (குறிப்பாக வட இந்திய) மற்றும் பாகித்தானிய சமையலில் ஒரு முக்கிய உணவாகும்.[3] [1] இந்த சனா மசாலாவானது பெரும்பாலும் ரொட்டியுடன் சேர்த்து உண்பதற்கு ஏற்றதாகும். இதில் எண்ணெயில் பொரித்த பத்துரா (இந்தக் கலவை சோலே பத்துரா என்று அழைக்கப்படுகிறது).[4] பூரி அல்லது குல்சா போன்ற தட்டையான ரொட்டிகள் போன்றவற்றிற்கு ஏற்றதாகும்.[3][5]
தேவையான பொருட்கள் மற்றும் தயாரிக்கம் முறை
[தொகு]சனா மசாலா செய்வதற்கு தேவையான முக்கிய பொருட்கள் கொண்டைக்கடலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவையாகும். தக்காளி சாசு தயாரிக்க நறுக்கிய தக்காளி; மற்றும் ஆம்சூர், கொத்தமல்லி, சீரகம், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் போன்ற மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்.[3][6]T
சனா மசாலா தயாரிக்க, பச்சை கொண்டைக்கடலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்னர் தண்ணீர் வடிக்கட்டப்பட வேண்டும். புதிய தண்ணீரில் கழுவப்பட்டு, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களு் சேர்த்து சமைக்கப்படுகிறது. [2]தயாரித்த முடித்த பின்னர் அலங்கரிப்பதற்காக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை துண்டுகளால் மேலே அழகாக வைக்கப்படுகிறது.[7]
-
மூலப் பொருட்கள் சனா மசாலா
-
சேலெ குல்ச்சா (சனா மசாலா தட்டையான ராெட்டி)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Singla, Anupy (2010). The Indian Slow Cooker: 50 Healthy, Easy, Authentic Recipes. Agate Publishing. p. 77. ISBN 978-1-57284-670-8. Archived from the original on 2023-03-14. Retrieved 2023-04-19.
- ↑ 2.0 2.1 Singh, Manali (2018). Vegetarian Indian Cooking with Your Instant Pot: 75 Traditional Recipes That Are Easier, Quicker and Healthier. Page Street Publishing. pp. 13–14. ISBN 978-1-62414-645-9. Archived from the original on 2023-03-14. Retrieved 2023-03-14.
- ↑ 3.0 3.1 3.2 3.3 López-Alt, J. Kenji. "Channa Masala Recipe". Serious Eats (in ஆங்கிலம்). Retrieved 2025-03-29.
- ↑ Honawar, Vaishali (2025-11-02). "Cholé Bhaturé (Chana Bhatura) Recipe". Holy Cow Vegan (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-11-03.
- ↑ Kitchen, Hebbars (2020-12-23). "chole bhature recipe | chhole bhature | chana bhatura | chola batura". Hebbar's Kitchen (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2024-09-04. Retrieved 2024-06-04.
- ↑ Pitre, Urvashi (September 19, 2017). Indian Instant Pot® Cookbook: Traditional Indian Dishes Made Easy and Fast. Rockridge Press. p. 54. ISBN 978-1939754547.
- ↑ Shah, Khushbu (January 28, 2021). "The Caregiver Who Makes Chana Masala for Everyone". Food & Wine (in ஆங்கிலம்). Retrieved 2025-03-29.