சனா சயீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சனா சயீத்
Sana Saeed.jpg
2013 சனா ஒரு நிகழ்ச்சியில்
பிறப்பு22 செப்டம்பர் 1988 (1988-09-22) (அகவை 32)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்வித்யா விஹார் பள்ளி
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998 முதல் தற்போது வரை

சனா சயீத் (Sana Saeed) 1988 செப்டம்பர் 22 அன்று பிறந்த [1] பாலிவுட் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார்.[2] 'குச் குச் ஹோத்தா ஹை' (1998) திரைப்படம் "ஹார் தில் ஜோ பியார் கரேகா]]" (2000) மற்றும் "பாதல்"(2000) ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் "பாபுல் கா ஆங்கன் சோட்டே நா" (2008) மற்றும் "லோ ஹோ கய் பூஜா இஸ் கர் கி" (2008) போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் தோன்றினார். 2012 ஆம் ஆண்டில், கரண் ஜோஹரின் "ஸ்டூடன்ட் ஆப் தி இயர்" திரைப்படத்தில் துணை நடிகையாக சனா நடித்தார், இது வணிக ரீதியான வெற்றி பெற்றது.[3] 2013இல் "நாச் பாலியே" மற்றும் 2015இல் "ஃபியர் ஃபேக்டர்: கத்ரோன் கே கிலாடி" உட்பட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றினார்.

தொழில்[தொகு]

விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றத் திரைப்படங்களான குச் குச் ஹோத்தா ஹை (1998) திரைப்படம் "ஹார் தில் ஜோ பியார் கரேகா" (2000) மற்றும் "பாதல்"(2000) ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஸ்டார் பிளஸ்ஸில் பிரபலமான குழந்தைகள் நிகழ்ச்சியான "ஃபாக்ஸ் கிட்ஸ்" என்ற நிகழ்ச்சியை இவர் நடத்தினார், அதில் சாதுர் சாச்சியின் பாத்திரத்தில் நடித்தார். "சோனி தொலைக்காட்சி"யின் "பாபுல் கா ஆங்கன் சோட்டே நா" என்ற நிகழ்ச்சி மற்றும் "சாப் தொலைக்காட்சி"யின் "லோ ஹோ கய் பூஜா இஸ் கர் கி" போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றினார். சனா "ஜலக் திக்லா ஜா" என்ற நடன நிகழ்ச்சி நிகழ்ச்சியில் ஆறாவது இடம் பிடித்தார், நடனமாடும் தன் ஆற்றலுக்காக வெகுவாக புகழப்பட்டார்.[4]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சனா சயீத்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனா_சயீத்&oldid=2701248" இருந்து மீள்விக்கப்பட்டது