சனாதன ஒழிப்பு பேச்சு வழக்கு
சனாதன ஒழிப்பு பேச்சு வழக்கு, 2 செப்டம்பர் 2023 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகத் துணை முதல்வர் மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதனை எதிர்க்காமல்; ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.[1].
எதிர் விளைவுகள்
[தொகு]பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா என்பவர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் ஒழிப்பு குறித்த பேச்சை வட இந்தியாவில் உள்ள சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை திரித்து சமூக ஊடகங்களில் பரப்பியது, இரு சமூக மக்களிடையே வெறுப்பை தூண்டும் செயல் எனக்கூறி, அமித் மாளவியா மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கே. ஏ. வி. தினகரன் என்பவர் திருச்சிராப்பள்ளி நகர மத்திய குற்றப் பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் அமித் மாளவியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அமித் மாளவியா தன் மீதான தமிழ்நாடு அரசு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதியரசர் எஸ். ஸ்ரீமதி அமர்வில் விசாரணை செய்யப்பட்டடது. இவ்வழக்கின் வாதப் பிரதி வாதங்கள் முடிந்த நிலையில் 20 சனவரி 2026 அன்று நீதியரசர் எஸ். ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில் அமித் மாளவியா மீதான தமிழ்நாடு அரசு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.[2][3]
தீர்ப்பின் சாராம்சங்கள்
[தொகு]சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் நீதியரசர் எஸ். ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பின் சுருக்கும் பின்வருமாறு[4][5]:
- உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு தொடர்பான வழக்கில் அமித் மாளவியா மீதான முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதியரசர் எஸ். ஸ்ரீமதி ரத்து செய்தார்.
- "வெறுப்புப் பேச்சைத் தொடங்குபவர்கள் தண்டனையின்றி விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த வெறுப்புப் பேச்சுக்கு எதிர்வினையாற்றியவர்கள் சட்டத்தின் கோபத்தை எதிர்கொள்கிறார்கள் என்ற தற்போதைய நிலையை இந்த நீதிமன்றம் வேதனையுடன் பதிவு செய்கிறது. உதயநிதியின் கருத்துக்கள் வெறுப்புப் பேச்சுக்குச் சமம் என்றும், அதைக் கேள்வி எழுப்புவது ஒரு எதிர்வினை என்றும் நீதிபதி கூறினார். மேலும் வெறுப்புப் பேச்சைத் தொடங்கிய உதயநிதிக்கு எதிராக சட்டம் செயல்படவில்லை.
- அமித் மாளவியாவின் கருத்துக்கள் திரிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
- காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் மனுதாரருக்கு (அமித் மாளவியா) ஈடுசெய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் சந்திப்பார் என்றும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மனுதாரர் கோர உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் கருதுகிறது.
- இந்த வழக்கை தொடர்வது சட்ட செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் என்று நீதியரசர் கூறினார்.
- 2023-இல் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதை ஒழிக்க' வேண்டும் என்று பேசிய கருத்து, சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80% மக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பது போன்றது என்று நீதியரசர் எஸ். ஸ்ரீமதி கருத்து தெரிவித்தார்.
- இந்த வழக்கில் துணை முதலமைச்சரின் வெறுப்புப் பேச்சுக்காக அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறையிடம் நீதியரசர் கேள்வி எழுப்பினார்.
- "அரசு அதிகாரிகள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது" என்று கருத்து தெரிவித்தார்.
- ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமைச்சரின் பேச்சு 80% இந்துக்களுக்கு முற்றிலும் எதிரானது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது, இது வெறுப்புப் பேச்சு என்ற வரம்பிற்குள் வருகிறது
- ஒரு சனாதனியான மனுதாரர் (அமித் மாளவியா), துணை முதலமைச்சரின் வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்டவர். மனுதாரரின் பதில் பதிவு இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவுகளையும் ஈர்க்காது என்பது தெளிவாகிறது. மாறாக துணை முதலமைச்சரின் பேச்சு மேற்கூறிய பிரிவுகளை ஈர்க்கிறது.
விமர்சனங்கள்
[தொகு]துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியின் விளக்கம் மிகவும் அபத்தமானது என இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Udhayanidhi’s remarks on Sanatana Dharma
- ↑ உதயநிதி கருத்து ‘வெறுப்புப் பேச்சு’; அமித் மாளவியா மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட் உத்தரவு
- ↑ சனாதன ஒழிப்பு பேச்சு வழக்கின் தீர்ப்பு விவரம்
- ↑ 'Clear Attack On Hinduism By Dravida Kazhagam' : Madras High Court Quashes FIR Against Amit Malviya For Post Against Udhayanidhi Stalin
- ↑ உதயநிதியின் ‘சனாதன பேச்சு’ 80% இந்துக்களுக்கு எதிரானது: உயர் நீதிமன்ற நீதிபதி கூறியது என்ன?
- ↑ “சனாதன பேச்சு குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதியின் விளக்கம் மிகவும் அபத்தமானது” - பெ.சண்முகம்?