சனபி
| சனபி | |
|---|---|
| இயக்கம் | அரிபம் சியாம் சர்மா |
| தயாரிப்பு | தூர்தர்ஷன்இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
| கதை | எம். கே. பினோதினி தேவி |
| இசை | அரிபம் சியாம் சர்மா |
| நடிப்பு | காரோங்பம் தேபென் மற்றும் ஆர். கே. சுசீலா |
| ஒளிப்பதிவு | சன்னி சோசப் |
| படத்தொகுப்பு | உசால் நான்டி |
| கலையகம் | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
| விநியோகம் | தூர்தர்ஷன் |
| வெளியீடு | 1995 |
| ஓட்டம் | 88 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | மணிப்புரியம் |
சனபி (Sanabi) என்பது 1995-ஆம் ஆண்டு வெளியான ஒரு மணிப்பூரித் திரைப்படமாகும். இதனை எம். கே. பினோதினி தேவி என்பவர் எழுதியுள்ளார். அரிபம் சியாம் சர்மா என்பவர் இயக்கியுள்ளார்.[1][2][3] இந்த திரைப்படத்தில் காரோங்பம் தேபென் மற்றும் ஆர். கே. சுசீலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.[4][5] இது தூர்தர்சன் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்பட்டது ஆகும்.[6] 43-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், மணிப்பூரி மொழியில் வெளியான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை இப்படம் வென்று இருகின்றது.[7][8] 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் எகிப்தில் நடைபெற்ற கெய்ரோ சர்வதேசத் திரைப்பட விழா ஆகியவற்றில் 'சனபி' திரைப்படம் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[9][10][11]
சனாபி கதை எம். கே. பினோதினி தேவியால் 'சகோல் சனாபி' என்ற தலைப்பில் ஒரு சிறுகதையாக எழுதப்பட்டது.[12] It was later made into a radio play named as Shriban Chinggi Tamnalai. பின்னர், இது 'சிரிபன் சிங்கி தம்னலை' என்ற பெயரில் ஒரு வானொலி நாடகமாக உருவாக்கப்பட்டது.
கதைக்களம்
[தொகு]தனது பால்ய தோழியான சகி தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் எரிச்சலடைந்த மங்கி இவளைச் சம்மதிக்க வைப்பதற்காக, இவளுக்கு மிகவும் பிரியமான சாம்பல் நிறப் பெண் குதிரையைத் திருடிச் செல்கிறான்.
நடிகர்கள்
[தொகு]மங்கியாக கவ்ரோங்பாம் டிபென்
ஆர்.கே. சகியாக சுசீலா
சாகியின் தந்தை பீர்ச்சந்திராவாக தகெல்லம்பம் நபகுமார்
சகியின் தாயாக இளங்பம் இந்து
தோச்சோம் ஓங்பி ஜாமினி
மங்கியின் பாட்டியாக லூரம்பம் பிசாக்
குருமாயும் தொம்பா
ஒய். குமார்சித்
லாலா
வாங்கேம் லலித்குமார்
படத்திற்கான வரவேற்பு
[தொகு]இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படத்தை விமர்சித்த 'தி இந்து' நாளிதழின் எஸ். ஆர். அசோக் குமார், "87 நிமிடங்கள் ஓடும் இப்படம் விறுவிறுப்பாகவோ அல்லது ரசிக்கும்படியாகவோ இல்லை. இதன் கதையில் பல தொங்கிக்கொண்டிருக்கும் இழைகள் போன்று உள்ளன," என்று எழுதியுள்ளார்.[13]
'வெரைட்டி' இதழின் டெபோரா யங், "கதை எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும், சர்மா அதைச் சித்தரித்துள்ள விதம் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் அமைந்துள்ளது," என்று எழுதியுள்ளார்.[14]
விருதுகள்
[தொகு]43-வது தேசிய திரைப்பட விருது விழாவில், 'சனாபி' திரைப்படம் மணிப்பூரி மொழிக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்று இருக்கிறது. இவ்விருதுக்கான பாராட்டுரையில், "பாரம்பரிய மற்றும் நவீன விழுமியங்களுக்கு இடையிலான முரண்பாட்டை, ஒரு குதிரையை மையக் குறியீடாகக் கொண்டு, மிகச் சிறப்பாகவும் கவித்துவமாகவும் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S Balakrishnan. "A tryst with Manipuri movie Sanabi in Madras". e-pao.org.
- ↑ "Sanabi - Manipuri Movie :: eRang Classic". www.e-pao.net.
- ↑ Laithangbam, Iboyaima; Kongbam, Meghachandra (8 February 2019). "Indigenous people will become strangers in their own lands: Aribam Syam Sharma". The Hindu – via www.thehindu.com.
- ↑ "Manipuri Cinema : Multiple Facets". communicationtoday.net. 31 March 2014.
- ↑ Irom, Bit. "Manipuri Cinema In The Last Three Decades". e-pao.net.
- ↑ "Official Poster of 'Sanabi' - Aribam Syam Sharma Archives". archive.org. 29 July 2016.
- ↑ "Golden Jubilee celebration of Manipuri cinema from December 11". The Sangai Express.
- ↑ The Sangai Express / Manipur Info Centre (7 March 2012). "59th National Film Awards 2011: Phijigee Mani bags best regional film award". e-pao.net. Retrieved 15 June 2021.
- ↑ "The North-East Enthrals". Outlook India Magazine.
- ↑ Bit Irom. "Manipuri cinema in the last three decades". e-pao.net.
- ↑ Rajkumar Sanatomba Singh. "50 years of Manipuri Cinema 1972-2022". www.esamskriti.com.
- ↑ "Sagol Sanabi (Aribam Syam Sharma) – Info View – Indiancine.ma". indiancine.ma.
- ↑ Kumar, S. R. Ashok (12 January 1996). "The cream of Indian cinema". [The Hindu]. p. 73. Archived from the original on 21 December 1996.
- ↑ "The Gray Mare on Variety - Film Reviews". Variety. 12 February 1996. Retrieved 2021-06-18.