சனசாது வருமதேவன்
சனசாது வருமதேவன் (ஆங்கிலம்: Janasadhu Warmadewa; இந்தோனேசியம்: Sang Ratu Sri Janasadhu Warmadewa; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், ஐந்தாம் அரசர் ஆவார்.[1] இவர் 10-ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் ஆட்சி செய்ததாக செம்பிரான் கல்வெட்டின் (Sembiran inscription) வழி அறியப்படுகிறது.[2]
செம்பிரான் A II கல்வெட்டில், ஜூலா கிராமம்; மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களான இந்திரபுரா, பூவுன் டாலாம் மற்றும் ஈலிரான் கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள்[3] தர்மகூட துறவி இல்லம் (Dharmakuta Hermitage) என்று அழைக்கப்படும் புரா மேரு தலத்தை (Pura Meru) பழுதுபார்ப்பதில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று எழுதப்பட்டு உள்ளது.[4]
செம்பிரான் கல்வெட்டு
[தொகு]அத்துடன், ஆயுதம் ஏந்திப் போர் செய்ய வேண்டும்; மற்றும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து தப்பிக்க ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்று மன்னர் சனசாது வருமதேவன் கட்டளையிட்டதாகவும் செம்பிரான் கல்வெட்டில் எழுதப்பட்டு உள்ளது.[2]
இதன்வழி, பூர்வீகப் பாலினிய அகா மக்களின் (Bali Aga) கிராமங்கள், வடக்கு பாலி கடற்கரைப் பகுதியில் நீண்ட காலமாக இருந்தன என்பதை அறியலாம். மேலும், அந்தப் பகுதியின் வழிபாட்டுப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும்; மற்றும் வணிகத் துறைமுகங்களைப் பாதுகாப்பதற்கும்; மன்னர் சனசாது வருமதேவன் ஆணையிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.[5]
செரி விஜய மகாதேவி
[தொகு]மன்னர் சனசாது வருமதேவன் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார் என்பதைப் பற்றி சரியாகத் தெரியவில்லை; ஆனால் 905 சக ஆண்டு (கி.பி 983) தேதியிட்ட கோப்லெக் கல்வெட்டில் (Gobleg inscription), புதிய ஆட்சியாளரான அரசி செரி விஜய மகாதேவி (Sri Wijaya Mahadewi) என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[6][7][8]
அரசி செரி விஜய மகாதேவியின் கல்வெட்டு; மன்னர் சனசாது வருமதேவனின் கல்வெட்டில் உள்ளதைப் போலவே, புனா (Punah) என்ற சொல்லுடன் தொடங்குகிறது. புனா என்றால் 'மறைந்துபோன' என்று பொருள்படும்.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Raharjo, Supratikno; Munandar, Agus Aris (1998-01-01). Sejarah Kebudayaan Bali: Kajian Perkembangan dan Dampak Pariwisata. Direktorat Jenderal Kebudayaan.
- 1 2 Hauser-Schäublin, Brigitta; Ardika, I. Wayan (2008). Burials, Texts and Rituals: Ethnoarchaeological Investigations in North Bali, Indonesia (in ஆங்கிலம்). Universitätsverlag Göttingen. ISBN 9783940344120.
- ↑ Shastri, Narendra Dev Pandit (1963-01-26). Sejarah Bali Dwipa. Bhuvana Saraswati.
- ↑ Reuter, Thomas A. (2005). Custodians of the sacred mountains: budaya dan masyarakat di pegunungan Bali. Yayasan Obor Indonesia. ISBN 9789794615331.
- ↑ Riemenschneider, Christian (2006). " -- yang hidup di sini, yang mati di sana": upacara lingkaran hidup di Desa Sembiran, Bali (Indonesia) (in இந்தோனேஷியன்). LIT Verlag Münster. ISBN 9783825892005.
- ↑ Shastri, Narendra Dev Pandit (1963-01-26). Sejarah Bali Dwipa. Bhuvana Saraswati.
- ↑ Mustopo, M. Habib (2005). Sejarah: Untuk kelas 2 SMA. Yudhistira. ISBN 9789796767076.
- ↑ Poesponegoro, Marwati Djoened; Notosusanto, Nugroho (1984). Sejarah nasional Indonesia: untuk SMP. Departemen Pendidikan dan Kebudayaan.
சான்றுகள்
[தொகு]- Poesponegoro, Marwati Djoened; Notosusanto, Nugroho (2008). Sejarah Nasional Indonesia II: Zaman kuno. PT Balai Pustaka. ISBN 9789794074084.
- Setiawan, I Ketut (2008). Brigitta Hauser-Schäublin, I Wayan Ardika. ed. "Socio-Political Aspect of Julah". Burials, Texts and Rituals: Ethnoarchaeological Investigations in North Bali, Indonesia (Bali: Universitätsverlag Göttingen). doi:10.17875/gup2019-1239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783940344120. https://books.google.com/books?id=K7AcwO4jxFIC&pg=PA219.
- Shastri, Narendra Dev. Pandit (1963). Sejarah Bali Dwipa. Denpasar, Bali: Bhuana Saraswati.