உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தௌலி

ஆள்கூறுகள்: 25°16′N 83°16′E / 25.27°N 83.27°E / 25.27; 83.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தௌலி
சந்தோலி
சந்தௌலி is located in உத்தரப் பிரதேசம்
சந்தௌலி
சந்தௌலி
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°16′N 83°16′E / 25.27°N 83.27°E / 25.27; 83.27
நாடிஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்தௌலி மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்2,484.70 km2 (959.35 sq mi)
ஏற்றம்
70 m (230 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்23,020
 • அடர்த்தி9.3/km2 (24/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • கூடுதல் மொழிகள்உருது
 • வட்டார மொழிபோச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
232104
வாகனப் பதிவுUP-67
இணையதளம்https://chandauli.nic.in/

சந்தௌலி (Chandauli), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த சந்தௌலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் பேரூராட்சியும் ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கில் 360.4 கிலோ சந்தௌலி மக்களவைத் தொகுதிமீட்டர் தொலைவிலும்; வாரணாசிக்கு தெற்கே 42.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் சந்தௌலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மக்கள் தொகைப் பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வார்டுகளும், 3,520 குடியிருப்புகளும் கொண்ட சந்தௌலி பேரூராட்சியின் மக்கள் தொகை 23,020 ஆகும். அதில் 11,931 ஆண்கள் மற்றும் 11,089 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.33% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.15% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 20.23% மற்றும் 2.01% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.16%, இசுலாமியர் 12.54% மற்றும் பிற சமயத்தினர் 0.29% வீதம் உள்ளனர்.[1] இந்நகர மக்கள் போச்புரி மொழி, இந்தி மொழி மற்றும் உருது பேசுகிறார்கள்.

போக்குவரத்து

[தொகு]

நெடுஞ்சாலைகள்

[தொகு]

தில்லி-கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 19 சந்தௌலி நகரம் வழியாகச் செல்கிறது..

தொடருந்து நிலையம்

[தொகு]

தில்லி-கொல்கத்தா நகரங்களை இணைக்கும் இருப்புப்பாதை சந்தௌலி-மச்வார் தொடருந்து நிலையம்[2] வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தௌலி&oldid=4242971" இலிருந்து மீள்விக்கப்பட்டது