சந்தோஷ் நாராயணன் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தோஷ் நாராயணன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் கலைடாஸ்கோப், அஞ்ஞான சிறுகதைகள் என இரு நூல்களை எழுதியுள்ளார். இவர் புத்தக அட்டை வடிவமைப்பு, மினிமலிச ஓவியங்கள் போன்றவைகளுக்காக அறியப்படுகிறார்.[1]

இவர் சென்னை அரசு கவின் கலை ஓவியக்கல்லூரியில் படித்தார். சந்தோஷ் நாராயணனின் முதல் அட்டைப்படம் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சுந்தர ராமசாமியின் புதியபதிப்பாகும்.[2]

சச்சின் ஓவியம்[தொகு]

இவர் மட்டைப்பந்து வீரர் சச்சினின் 100 செஞ்சுரிகளைக் கொண்டு ஓவியம் வரைந்தார்.[3] அதில் ஒவ்வொரு செஞ்சுரிகளைப் பற்றிய தகவல்கள் இருந்தன. இந்த ஓவியம் ஸ்போர்ட் ஸ்டார் பத்திரிகையின் ஆசிரியரால் சச்சினுக்கு பரிசாக வழங்கப்பட்டது.[4]

விருதுகள்[தொகு]

2018 க்கான ஆனந்தவிகடன் டாப்10 இளைஞர் விருது [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. இந்த வலையில் ஒரு கண்ணி தான் சந்தோஷ் நாராயணன்
  2. [விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன் -சக்தி தமிழ்ச்செல்வன். விகடன் 05/01/2018 ]
  3. சச்சின் ரசித்த சந்தோஷ் ஓவியம் இந்து தமிழ் நாளிதழ்
  4. சச்சினை வியக்க வைத்த தமிழரின் ஓவியம்!- சக்தி தமிழ்ச்செல்வன் 16 நவம்பர் 2018
  5. ஆனந்த விகடன் இதழ் - இது தமிழ் ஓவியவெளிக்கான அங்கிகாரம் -பிப்ரவரி 2019 பக்கம் 48

வெளி இணைப்புகள்[தொகு]