சந்தோசு சுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோசு சுக்லா
Santosh Shukla
மாநில அமைச்சர் (உத்தரப் பிரதேசம்)
பதவியில்
2000–2001
தனிப்பட்ட விவரங்கள்
இறப்புஅக்டோபர் 2001
சிவ்லி காவல் நிலையம், இராமாபாய் நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

சந்தோசு சுக்லா (Santosh Shukla) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரத்தை சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியை சேர்ந்த இவர்[2] 2000 ஆம் ஆண்டு முதல் முதல் 2001 ஆம் ஆண்டு வரை முதல்வர் ராச்நாத் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பணியாற்றினார்.

1996 ஆம் ஆண்டு, சௌபேபூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் சந்தோசு சுக்லா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 43,418 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தொழிலாளர் ஒப்பந்த வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.[1]

2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பகுசன் சமாச்சு கட்சியைச் சேர்ந்த தலைவர் மற்றும் குண்டர்கள் எனக் கூறப்படும் விகாசு துபே மற்றும் அவரது 7 உதவியாளர்களுடன் சிவ்லி காவல் நிலையத்திற்குள் துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3][1] சந்தோசு சுக்லா கொலையில் விகாசு துபே முதன்மை குற்றவாளியாக இருந்தார்.[4] துபே கைது செய்யப்பட்டார் ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக பின்னர் விடுவிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோசு_சுக்லா&oldid=3500455" இலிருந்து மீள்விக்கப்பட்டது