சந்தையில் மாட்டு வணிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தையில் மாட்டு வணிகம் என்பது வாரச் சந்த்தையில் மாடுகளை வாங்குதல் விற்றல் ஆகியவற்றைக் குறிப்புது ஆகும். இந்த வணிகமானது தமிழ்நாட்டில் சில கோயில் திருவிழாக்களை ஒட்டி ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கால்நடை சந்தைகளிலும் நடத்தப்படுகிறது.

மாடுகளை அதன் நிறம், கொம்பு, சுழி, பல் எனப் பலவற்றையும் பார்த்துத்தான் ஒருவர் சந்தையில் இருந்து மாட்டை வாங்குவார். அதைப் பொறுத்துஏ விலையும் மாறுபடும். மாட்டுச் சந்தைகளில் மாட்டுத் தரகர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் மாடுகளை வாங்குபவர்களுக்கும், விற்ப்பவர்களுக்கும் இடையில் தரகராக இருந்து பேசி முடிப்பர். சந்தையில் மாடுகளை விலை பேசும்போது அது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக குழுவுக் குறி, கையசைப்பு போன்றவை மூலம் விலை பேசுவர். பெரும்பாலும் மேல் துண்டை எடுத்து இருவரது கைகளையும் முடியபடி கை விரல்களைக் கொண்டு விலை பேசுவர். மாட்டின் தரத்தைப் பொறுத்து விலை மாறும். தரகர் ஐந்து விரல்களை ஒன்றாக பிடித்தால் ஐந்தாயிரம் என்று பொருள். மோதிர விரலையும் சுண்டு விரலையும் சேர்த்து பிடித்தால் ஏழாயிரம் என்று பொருள்.[1] ஐந்து விரல்களையும் இருமுறை அழுதிப் பிடித்தால் பத்தாயிரம் என்று பொருள். இவ்வாறு பலவகையில் குழுவுக் குறிகளை தரகர்கள் பயன்படுத்துவர். மேலும் இந்த வணிகத்தில் பரிபாசை சொற்களும் பயன்படுத்தபடுவதுண்டு. பரிபாசை சொறுகளும் அதன் மதிப்பும் பின்வருமாறு; சலகம் = 25, முறி 50, முறி = 250, வாச்சி = 1000, காளை = 2000, தொழுவு = 3000, பனை = 4000, தட்டை = 5000, பொருத்து = 6000, சூழி = 7000, வழு = 8000, தாயம் = 9000, தூருவம் 10000 என்பவையாகும் இந்தச் சொற்களில் பெரியமதிப்பையும் சிறிய மதிப்பையும் சேர்த்து பேசி தொகைகளை கூட்டி குறைப்பர் காட்டாக வழு முறி என்றால் 8250 என்பது பொருளாகும்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. ``சுழி பாரு துண்டு போடு... விலையை முடி!’’ - மாட்டுச் சந்தையின் கதை, துரை நாகராஜன், ஆனந்த விகடன், 8, நவம்பர் 2018
  2. இது மாட்டுத்தரகர்கள் போடும் கணக்கு, கட்டுரை, இரா மணிகண்டன், பக்கம் 66- 67 குமுதம் (இதழ்) பொங்கல் சிறப்பிதழ் 13 சனவரி 2003,
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தையில்_மாட்டு_வணிகம்&oldid=3106958" இலிருந்து மீள்விக்கப்பட்டது