உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தீப் ரெட்டி வாங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தீப் ரெட்டி வாங்கா
2023 இல் வாங்கா
பிறப்பு25 திசம்பர் 1981 (1981-12-25) (அகவை 44)
வாரங்கல், தெலங்காணா, இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மோனிஷா ரெட்டி (தி. 2014)
பிள்ளைகள்2

சந்தீப் ரெட்டி வாங்கா (Sandeep Reddy Vanga) (25 டிசம்பர் 1981) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்படுகிறார். இருண்ட உளவியல் கருப்பொருள்கள், சிக்கலான கதாபாத்திரங்களின் கலவையுடன் இவரது முரட்டுத்தனமான, தீவிரமான திரைநாடகங்களுக்காக இவர் அறியப்படுகிறார்.

வாங்கா 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழி காதல் நாடகத் திரைப்படமான அர்ஜுன் ரெட்டி மூலம் திரைக்கதை எழுதுவது, திரைப்படம் இயக்குவது ஆகிய துறைகளில் அறிமுகமானார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று இவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. கபீர் சிங் என்ற இந்தி மொழி மறு உருவாக்கத்தில் தனது வெற்றியைத் தொடர்ந்தார். இத்திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்திப் படங்களில் ஒன்றாக மாறியது. கபீர் சிங் இந்தியாவில் 300 கோடிக்கு மேல் வசூலித்த முதல் ஏ-சான்றளிக்கப்பட்ட இந்தியத் திரைப்படமாகவும் மாறியது.[1]

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

சந்தீப் ரெட்டி வாங்கா தெலங்காணாவின் வாரங்கலில் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியை வாரங்கலில் உள்ள பிளாட்டினம் ஜூபிலி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். மேலும் 8 ஆம் வகுப்பிற்குப் பிறகு தனது மேலதிக கல்விக்காக ஐதராபாத்து சென்றார். இவர் உடலியக்க மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஆத்திரேலியாவின் சிட்னியில் உள்ள சர்வதேச திரைப்படப் பள்ளியில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான பணியினைப் பற்றி அறிந்து கொள்ள சென்றார்.[2][3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

2005-2012: தொடக்க கால தொழில்

[தொகு]

2005 ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்தின் ருசிகொண்டா கடற்கரையில் 25 நாட்கள் மனசு மாதா வினது திரைப்படத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றினார். கேடி (2010) என்ற திரைப்படத்தில் கிரண் குமாருடன் உதவி இயக்குநராகவும், மல்லி மல்லி இதி ராணி ரோஜு (2015) திரைப்படத்தில் கிராந்தி மாதவுடன் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் இயக்குநராக அறிமுகமாவதற்காக சர்க்கரை தொழிற்சாலை என்ற படத்திற்கான திரைக்கதையை எழுதத் தொடங்கினார். ஆனால், இறுதியில் இவர் அதை நிறுத்திவிட்டு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கான திரைக்கதையைத் எழுதத் தொடங்கினார்.

2013-2017: இயக்குநராக அறிமுகமும் அங்கீகாரமும்

[தொகு]

வாங்கா 2013 ஆம் ஆண்டில் அர்ஜுன் ரெட்டி என்ற தலைப்புடன் ஒரு திரைக்கதையை எழுதத் தொடங்கினார், அதை இரண்டு ஆண்டுகளில் முடித்தார். தயாரிப்பாளர் சுவப்னா தத் மற்றும் சர்வானந்த் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்து நடிக்க ஆர்வம் காட்டினர், இருப்பினும், சர்வானந்திடம் அந்த நேரத்தில் பல திரைப்படங்கள் வரிசையில் இருந்ததால் அது எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. விஜய் தேவரகொண்டா என்பவருக்கு இவரது பொது நண்பர் ஒருவர் அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி என்ற தான் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கச் செய்தார். இத்திரைப்படம் 25 ஆகத்து 2017 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு மாபெரும் திரைப்படமாக வெற்றியைப் பெற்றது. இது ₹4-5 கோடி என்ற சிறிய ஆக்கச் செலவில் தயாரிக்கப்பட்டு, ₹50 கோடிக்கும் (US $8 மில்லியன்) அதிகமாக வசூலித்தது.[4][5][6] இருப்பினும், வெளியீட்டின் போது, திரைப்படத்தில் புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்பாட்டுக் காட்சிகளைச் சித்தரித்திருந்ததற்காக தணிக்கைக் குழுவினரிடம் தொடர்ந்து சிக்கலில் சிக்கியது. தணிக்கைக் குழுவினர் இத்திரைப்படத்தின் முத்தக் காட்சிகள், சுவரொட்டிகள் குறித்து கோபத்தை உருவாக்கியது, அவை இறுதியில் தெலுங்கானா திரைப்பட சபையால் அங்கீகரிக்கப்பட்டன. மூத்த அரசியல் தலைவர் வி. ஹனுமந்த ராவ், படம் பார்வையாளர்களிடம் வெற்றி பெற்றதைப் பற்றிக் கோபமடைந்தார். அவர் படத்தின் சுவரொட்டிகளை பகிரங்கமாகக் கிழித்தெறிந்து, இதுபோன்ற திரைப்படங்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று இரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

2019-தற்போது வரை: மாபெரும் வெற்றி

[தொகு]

அர்ஜுன் ரெட்டி (2017) திரைப்படத்தின் இந்திப் பதிப்பை கபீர் சிங் (2019) என்ற பெயரில் இயக்க வாங்கா ஒப்புக்கொண்டார்.[7] சாஹித் கபூர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார், கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். முராத் கேத்தானி மற்றும் அஸ்வின் வார்டே ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்ததோடு, அசல் படத்தின் உரிமையை 15 மில்லியன் ரூபாய்க்கு வாங்கினர். படப்பிடிப்பு அக்டோபர் 2018 இல் தொடங்கி, மார்ச் 2019 இல் முடிவடைந்தது, அதே ஆண்டு சூன் 21 அன்று படம் வெளியிடப்பட்டது. அளவிற்கதிகமான போதைப்பொருள் பயன்பாடு, கள்ள உறவுகள் பற்றிய சர்ச்சைக்குரிய சித்தரிப்புகள் இருந்தபோதிலும், இது உலகளவில் ₹379 கோடிக்கும், இந்தியாவில் உள்நாட்டில் ₹278 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தது, இது 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த பாலிவுட் படமாகவும், சாகித் கபூரின் அதிக வசூல் கொண்ட தனி முன்னணி வெளியீடாகவும் மாறியது.

சனவரி 1,2021 அன்று, ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தண்ணா பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவாக இருந்த அனிமல் என்ற அதிரடி திரைப்படத்தை வாங்கா இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை டி-சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ், சினீ 1 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தன.[8] அனிமல் திரைப்படம் 1 டிசம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது, இது தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் வாங்காவை அனைவரிடத்திலும் கொண்டு சென்றது. அனிமல் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான பதிவுகளைப் பெற்றது, திரைப்படத்தில் நடிகர்களின் நடிப்பு, இசை, தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பாராட்டப்பட்டது. இத்திரைப்படமும் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது, உலகளவில் ₹900 கோடிக்கு மேல் வசூலித்தது, 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது இந்தியத் திரைப் படமாகவும், எட்டாவது அதிக வசூல் செய்யப்பட்ட இந்தியத் திரைப்படமாகவும், எல்லா காலத்திலும் அதிக வசூல் கொண்ட ஏ-சான்றளிக்கப்பட்ட இந்தியத் திரைப்படமாகவும் மாறியது.[9] 69வது பிலிம்பேர் விருதுகளில், அனிமல் சிறந்த படம், சிறந்த இயக்குநர், அனில் கபூர், பாபி தியோலுக்கு சிறந்த துணை நடிகர் உட்பட 19 பரிந்துரைகளைப் பெற்றது. ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகர், ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வருக்கு சிறந்த பின்னணி இசை மற்றும் பூபிந்தர் பாபலுக்கு சிறந்த பின்னணி பாடகர் உட்பட ஆறு பிரிவுகளில் இத்திரைப்படம் விருதுகளை வென்றது.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சந்தீப் ரெட்டி மணீசா ரெட்டியை மணந்தார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[10] தனது மகனுக்கு அர்ஜுன் ரெட்டி என்று தனது வெற்றிப்படத்தின் பெயரைச் சூட்டியிருப்பதாக சந்தீப் ரெட்டி அறிவித்தார்.[11][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kabir Singh enters 200 crore club, first A-rated film to achieve the feat". சினிமா எக்ஸ்பிரஸ். 4 July 2019. Archived from the original on 5 July 2019. Retrieved 5 July 2019.
  2. . 
  3. "Animal: Who Is Sandeep Reddy Vanga, Whose Film Starring Ranbir Kapoor Has Sparked HUGE Debate". News18 (in ஆங்கிலம்). 2023-12-12. Archived from the original on 20 April 2024. Retrieved 2024-04-20.
  4. "Telugu film 'Arjun Reddy' reaches the Rs 50 crore club". தி நியூஸ் மினிட். 16 October 2017 இம் மூலத்தில் இருந்து 6 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180206162933/https://www.thenewsminute.com/article/telugu-film-arjun-reddy-reaches-rs-50-crore-club-70057. 
  5. "Arjun Reddy box office collection week 2: Vijay Devarakonda starrer collects Rs 41.5 crore worldwide". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 September 2017 இம் மூலத்தில் இருந்து 2 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180402084629/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/box-office/arjun-reddy-box-office-collection-week-2-vijay-devarakonda-starrer-collects-rs-41-5-crore-worldwide/articleshow/60449785.cms. 
  6. "Three hours and a huge hit later". தி இந்து. 9 September 2017 இம் மூலத்தில் இருந்து 2 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180402084431/http://www.thehindu.com/entertainment/movies/three-hours-and-a-huge-hit-later/article19643308.ece. 
  7. "Vidya defends Kabir Singh". Asian Age. 17 February 2020 இம் மூலத்தில் இருந்து 20 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200220162219/https://www.asianage.com/entertainment/bollywood/170220/vidya-defends-kabir-singh.html. 
  8. "Ranbir Kapoor to star in Sandeep Reddy Vanga's crime drama Animal". The Indian Express (in ஆங்கிலம்). 2 January 2021. Retrieved 2 January 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Animal box office collection Day 8 early report: Ranbir Kapoor-starrer becomes highest grossing 'A' rated film". The Indian Express (in ஆங்கிலம்). 8 December 2023. Archived from the original on 9 December 2023. Retrieved 9 December 2023.
  10. "Animal: Who Is Sandeep Reddy Vanga, Whose Film Starring Ranbir Kapoor Has Sparked HUGE Debate". News18 (in ஆங்கிலம்). 2023-12-12. Archived from the original on 20 April 2024. Retrieved 2024-04-20.
  11. Lohana, Avinash. "Kabir Singh director Sandeep Vanga: I named my son Arjun Reddy". Mumbai Mirror (in ஆங்கிலம்). Archived from the original on 5 February 2021. Retrieved 11 December 2023.
  12. "Sandeep Reddy Vanga showed Animal's edited version to 7-year-old son, had 'ideological battles' with wife: 'She felt there was too much bloodshed'". The Indian Express (in ஆங்கிலம்). 2024-02-06. Archived from the original on 20 April 2024. Retrieved 2024-04-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_ரெட்டி_வாங்கா&oldid=4281835" இலிருந்து மீள்விக்கப்பட்டது