சந்தீப் சர்மா
சந்தீப் சர்மா Sandeep Sharma | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2023 | |
| முன்னையவர் | ஓம் பிர்லா |
| தொகுதி | கோட்டா சட்டமன்றத் தொகுதி |
| பதவியில் 2014–2018 | |
| பதவியில் 2018–2023 | |
சந்தீப் சர்மா (Sandeep Sharma) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோட்டா மாவட்டத்தில் உள்ள கோட்டா தெற்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய சனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சந்தீப் சர்மா இராசத்தானின் கோட்டாவைச் சேர்ந்தவர். 1968 ஆம் ஆண்டில் விச்சய் சங்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 1989 ஆம் ஆண்டில் காகதியா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4]
அரசியல்
[தொகு]2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியில் சர்மா வெற்றி பெற்றார். 95,393 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இராக்கி கௌதமை 11,962 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[6] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2023 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ english. "Kota South Election Result 2023 Live, Kota South Elections Vote Counting, Rajasthan Results 2023 | ABP News". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-14.
- ↑ "Kota South Assembly Election Results 2023: Kota South Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2025-01-14.
- ↑ "Live: Kota South Election Results 2023 | Rajasthan Election Results | Elections 2023". NDTV (in ஆங்கிலம்). Retrieved 2025-01-14.
- ↑ "Sandeep Sharma(Bharatiya Janata Party(BJP)):Constituency- KOTA SOUTH(KOTA) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2025-01-14.
- ↑ "Kota South Assembly Rajasthan Election 2023 Results Live: Rajasthan constituency Results, Winner list and vote share | Hindustan Times". Hindustan Times (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 16 December 2023. Retrieved 2025-01-14.
- ↑ "Sandeep Sharma(Bharatiya Janata Party(BJP)):Constituency- KOTA SOUTH : BYE ELECTION 13-09-2014(KOTA) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2025-01-14.
- ↑ "Kota South Election Result 2023 LIVE Updates and Highlights: Sandeep Sharma Of BJP Wins - News18" (in en-US). News18. https://www.news18.com/elections/kota-south-election-result-2023-live-updates-and-highlights-winner-loser-leading-trailing-mla-margin-8686982.html.