சந்திர தீர்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திர தீர்த்தம் காரைக்காலில் அமைந்துள்ள தெப்பக்குளமாகும். காரைக்காலின் முக்கியக் கோயில்களான காரைக்கால் அம்மையார் கோவில், காரைக்கால் நித்தியக்கல்யான பெருமால் கோவில் மற்றும் காரைக்கால் கைலாசநாதர் திருக்கோவில் ஆகியவற்றின் ஒரே தெப்பக்குளம் சந்திர தீர்த்தமாகும்.[1]

வரலாறு மற்றும் நம்பிக்கைகள்[தொகு]

காரைக்கால் மக்கள் நம்பிக்கையின்படி, இந்த தீர்த்தத்தில் ஒருமுறை குளித்தால் எலும்பு ரீதியான நோய்கள் மற்றும் எலும்பு முறிவுகள் அனைத்தும் குணப்படுத்தப்படும். பல ஆண்டுகளாக சந்திர தீர்த்தம் அசுத்தமாக கிடந்த நிலைடயில் நீண்ட காலமாக சுத்தம் செய்யப்பட்டுவந்தது. 2010 ஆம் ஆண்டில் இவ்வேலை முடிந்தது.

காரைக்கால் தெப்பத் திருவிழா[தொகு]

2010 ஆம் ஆண்டு காரைக்கால் மிதக்கும் திருவிழா 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றது. இது உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.ஏ. எம். எச். நாஜிமின் உதவியின் காரணமாக நடைபெற்றது.[2] 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதால் இது பெரிய முறையில் கொண்டாடப்பட்டது. இதற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தெப்பத் திருவிழா இக்குளத்தில் நடைபெறுகிறது. இக்குளத்தில் கடவுளின் தெப்பம் மூன்று முறை சுற்றிவரும்.இத்தெப்பத் திருவிழா காரைக்கால் நித்தியக்கல்யான பெருமாலுக்கும் காரைக்கால் கைலாசநாதர் திருக்கோயிலுக்கும் இதே குளத்தில் நடைபெறும்.

References[தொகு]

  1. http://indiancolumbus.blogspot.com/2016/04/karaikal.html
  2. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/karaikal-ammaiyar-temple-to-get-facelift/article6513166.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_தீர்த்தம்&oldid=2758985" இலிருந்து மீள்விக்கப்பட்டது