சந்திர சேகர் பெம்மசானி
சந்திர சேகர் பெம்மசானி | |
|---|---|
| 28ஆவது தொலைதொடர்பு துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 11 சூன் 2024 | |
| குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா |
| முன்னையவர் | தேவுசிங் சௌகான் |
| 28ஆவது ஊரக வளர்ச்சி அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 11 சூன் 2024 (serving along with கமலேசு பசுவான்) | |
| குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | சிவராஜ் சிங் சௌகான் |
| முன்னையவர் | பக்கன் சிங் குலாஸ்தே |
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | கல்லா ஜெயதேவ் |
| தொகுதி | குண்டூர் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 மார்ச்சு 1976 புரிபாலம், குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| துணைவர் | இரத்ன கோனேரு (தி. 2001) [1] |
| பிள்ளைகள் | 2 |
| பெற்றோர் |
|
| வாழிடம் | வீ. எண். 5-1/2, கல்யாண மண்டபம் அருகில், புரிபாலம் கிராமம், தென்னாலி மண்டலம், குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், அஞ்சல் குறியீடு - 522301[2] |
| முன்னாள் மாணவர் | உள்ளக மருத்துவ பயிற்சியாளர் (கீசிங்கர் மருத்துவ மையம்) இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் (உசுமானியா மருத்துவக் கல்லூரி) |
| பணி | மருத்துவர், அரசியல்வாதி, தலைமை நிர்வாக அதிகாரி-யு வேர்ல்டு |
| இணையத்தளம் | www |
சந்திர சேகர் பெம்மசானி (Chandra Sekhar Pemmasani)(பிறப்பு 7 மார்ச் 1976) ஒரு மருத்துவரும் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தற்போது சூன் 2024 முதல் கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல்தொடர்புகளுக்கான 28ஆவது இணை அமைச்சராக இந்திய அரசில் பணியாற்றுகிறார்.[3] ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 18ஆவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2024 இந்திய பொதுத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார்.[4][5]
இளமை
[தொகு]சந்திர சேகர் பெம்மாசனி 1976 மார்ச் 7 அன்று இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் உள்ள புரிபாலெமில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பெம்மாசணி சம்பசிவ ராவ் மற்றும் சுவர்சலா இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[6][7] இவருக்கு இரவிசங்கர் பெம்மாசனி என்ற சகோதரர் உள்ளார். இவர் புரிபாலெத்தில் பிறந்தார் என்றாலும், தனது தந்தையின் உணவக வணிகத்தின் காரணமாக தனது குழந்தைப் பருவத்தில் நரசராபேட்டையில் சிறிது நேரம் கழித்தார்.[8] இவர் தனது 10ஆம் வகுப்பை 1991ஆம் ஆண்டிலும், இடைநிலைக் கல்வியினை 1993ஆம் ஆண்டிலும் முடித்தார். மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் ஐதராபாத்து உள்ள உஸ்மானியா மருத்துவக் கல்லூரி ஒரு இடத்தைப் பெற்றார்.[9]
பென்சில்வேனியாவின் டேன்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் உள் மருத்துவத்தில் முதுநிலை பயிற்சியை முடித்தார். தனது முதுநிலை பயிற்சியின் போது, தேசிய மருத்துவ அறிவு போட்டியில் பென்சில்வேனியாவின் பிரதிநிதியாக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், சினாய் மருத்துவமனையில் சுமார் ஐந்து ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியதுடன் முதுநிலை, இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவம் கற்பித்தார்.[10]
பெம்மசானி சோதனை பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான யு வேர்ல்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.[11]
சமூக செயல்பாடுகள்
[தொகு]ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்திற்குள் உள்ள பால்நாடு பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு இலவச குடிநீர் வழங்க பெம்மசானி பங்களித்தார். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான கல்வி ஆதரவுக்காக இவர் நிதி வழங்கினார். மேலும் உள்ளூர் சமூக நிறுவனங்களுக்கு தொண்டு பங்களிப்பு செய்துள்ளார்.[12]
அரசியல் வாழ்க்கை
[தொகு]சந்திர சேகர் பெம்மாசனியின் தந்தை சம்பசிவராவ் என். டி. ராமராவை மிகவும் விரும்பினார். இதன் காரணமாக, இவர் தெலுங்கு தேசம் கட்சி சேர்ந்தார். பின்னர் நரசராவ்பேட்டை நகரின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். தனது தந்தையின் அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்திர சேகரும் அதே கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு நாயுடுவினை இவர் பெரிதும் பாராட்டினார். சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றபோது, சந்திரசேகர் தனது வருகைகளின் போது அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக பங்கேற்றார்.[10] 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சந்திர சேகர் தெலுங்கு தேசம் கட்சி நரசராவ்பேட்டை மக்களவை தொகுதியில் போட்டியிட முயன்றார். இருப்பினும், முன்னாள் இந்திய தேசிய காங்கிரசு தலைவர் இராயபதி சம்பசிவ ராவுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு காரணமாக இவர் கணிசமான காலத்திற்கு பின் விலகினார்.[6]
இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு 3,44,695 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். முன்னாள் உறுப்பினர் கல்லா ஜெயதேவ் சனவரி 2024இல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[13][14][15]
தேர்தல் புள்ளிவிவரங்கள்
[தொகு]| ஆண்டு | பதவி | கட்சி | தொகுதி | எதிர்ப்பாளர் | வாக்குகள் | வித்தியாசம் | முடிவு | |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | 2024 | மக்களவை | தெலுங்கு தேசம் கட்சி | குண்டூர் | கிலாரி வெங்கட ரோசய்யா (ஒய்எஸ்ஆர் காங்கிரசு)[16] | 8,64,948 | 3,44,695 | வெற்றி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Member Detail". sansad.in/ls (in ஆங்கிலம்). Retrieved 2024-07-13.
- ↑ "Candidate Details". affidavit.eci.gov.in (in ஆங்கிலம்). 2024-04-22. Retrieved 2024-05-26.
- ↑ "TDP's Chandra Sekhar Pemmasani, the richest Lok Sabha MP, gets Ministry of Rural Development and Communications". https://www.hindustantimes.com/india-news/tdps-chandra-sekhar-pemmasani-the-richest-lok-sabha-mp-gets-ministry-of-rural-development-and-communications-101717944954458.html.
- ↑ "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024, Parliamentary Constituency 13 - Guntur (Andhra Pradesh)". Election Commission of India (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-04.
- ↑ "Businessmen | In august company". https://www.indiatoday.in/magazine/cover-story/18th-lok-sabha-the-debutants/story/20240722-businessmen-in-august-company-2565840-2024-07-13.
- ↑ 6.0 6.1 "పెమ్మసాని చంద్రశేఖర్: బాల్యం, విద్యాభ్యాసం, వ్యక్తిగత జీవితం, రాజకీయ ప్రస్థానం" [Pemmasani Chandra Sekhar biography]. www.telugu.asianetnews.com (in தெலுங்கு). Retrieved 2024-05-26.
- ↑ "Dr. Chandra Sekhar Pemmasani". One India.
- ↑ "Dr Pemmasani Chandrasekhar: From an NRI to Union MoS". The Hans India.
- ↑ "Meet Pemmasani Chandra Sekhar, NRI Doctor-Turned-Politician And The Richest Candidate In Lok Sabha Elections 2024 With Rs 5,785,00,00,000 Worth Family Assets". www.timesnownews.com (in ஆங்கிலம்). 2024-04-23. Retrieved 2024-05-26.
- ↑ 10.0 10.1 "Meet TDP's Chandra Sekhar Pemmasani, The Richest Lok Sabha Candidate" (in ஆங்கிலம்). 2024-04-26. Retrieved 2024-07-13.
- ↑ "Chandra S. Pemmasani, M.D. Founder & Chief Executive Officer" (in ஆங்கிலம்). 2024-06-09.
- ↑ "NRI Dr Pemmasani Chandra Sekhar gears up to contest Lok Sabha elections from Guntur". Times of India (in ஆங்கிலம்). 2024-02-14. Retrieved 2024-07-13.
- ↑ "Lok Sabha 2024". www.myneta.info (in ஆங்கிலம்). Retrieved 2024-05-26.
- ↑ "Guntur, Andhra Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: Chandra Sekhar Pemmasani Wins by 344695 Votes". India Today. 4 June 2024.
- ↑ "TDP MP Galla Jayadev announces break from full-time politics" (in en-IN). 2024-01-28. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-mp-galla-jayadev-announces-break-from-full-time-politics/article67785997.ece.
- ↑ "Lok Sabha elections: Who is Dr Chandra Sekhar Pemmasani? The richest candidate in fourth phase". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2024-05-07. Retrieved 2024-05-26.