சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திர சம்செர் பகதூர் ராணா
श्री ३
चन्द्र शमशेर
जङ्गबहादुर राणा
Chandra Shamsher Jang Bahadur Rana.jpg
சந்திர சம்செர் பகதூர் ராணா
13வது [[நேபாள பிரதம அமைச்சர்]] காஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மூன்றாவது மன்னர்
பதவியில்
27 சூன் 1901 – 26 நவம்பர் 1929
அரசர் திரிபுவன்
முன்னவர் தேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா
பின்வந்தவர் பீம் சம்செர் ஜங் பகதூர் ராணா
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 8, 1863(1863-07-08)
இறப்பு 26 நவம்பர் 1929(1929-11-26) (அகவை 66)
பெற்றோர் தீர் சம்செர் ஜங் பகதூர் ராணா - நந்தகுமாரி
பணி நேபாள பிரதம அமைச்சர்
சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா
श्री ३ महाराज चन्द्र शम्शेर जङ्गबहादुर राणा
காஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மூன்றாவது மன்னர்
ஆட்சிக்காலம்27 சூன் 1901 – 26 நவம்பர் 1929
முடிசூட்டுதல்27 சூன் 1901[1]
முன்னையவர்தேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா
பின்னையவர்பீம் சம்செர் ஜங் பகதூர் ராணா
துணைவர்சந்திரலேகா பக்தா
குடும்பம்உறுப்பினர்மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா
வாபேர் சம்செர் ஜங் பகதூர் ராணா
கைசர் சம்செர் ஜங் பகதூர் ராணா
சிங்க சம்செர் ஜங் பகதூர் ராணா
கிருஷ்ண சம்செர் ஜங் பகதூர் ராணா
பெயர்கள்
சந்திர சம்செர் ஜங்க பகதூர் ராணா
அரச மரபுராணா வம்சம்
தந்தைதீர் சம்செர் ஜங் பகதூர் ராணா
தாய்நந்தகுமாரி
மதம்இந்து சமயம்
சந்திர சம்செர் பகதூர் ஜங் ராணா, 1910
சந்திர சம்செர் பகதூர் ராணாவின் குடும்பம்

சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா (Chandra Shumsher Junga Bahadur Rana), (8 சூலை 1863 – 26 நவம்பர் 1929), நேபாள இராச்சியத்தின் 13வது பரம்பரை பிரதம அமைச்சராக 1901 - 1929 முடிய 29 ஆண்டுகள் பதவி வகித்தவர். ராணா வம்சத்தைச் சேர்ந்த இவர், நேபாளத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறல் முறையை ஒழித்தவர். இவருக்குப் பின் இவரது தம்பி பீம் சம்செர் ஜங் பகதூர் ராணாவும், மகன் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணாவும் நேபாள பிரதம அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

பிரதம அமைச்சர் பதவியில்[தொகு]

இவரது அண்ணன்மார்களும், நேபாள பிரதம அமைச்சர்களுமான வீர சம்செர் ஜங் பகதூர் ராணா மற்றும் தேவ் சம்செர் பகதூர் ராணாவின் மறைவிற்குப் பின், நேபாளப் படைத்தலைவராக இருந்த சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா, 1901ல் நேபாள பிரதம அமைச்சரானார்.

நேபாளத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறல் சடங்கை தடை செய்ததுடன், அடிமை முறையையும் ஒழித்தார். நேபாளத்தில் முதல் ஆங்கில வழிக் கல்வி முறைக்கு திரி சந்திரக் கல்லூரியை நிறுவினார். தராய் பகுதியில் வேளாண் நிலங்களுக்கு நீர்பாசான வாய்க்கால்களை நிறுவினார். நேபாளத்தில் நவீன மருத்துவமனைகளை நிறுவினார். நேபாளத்தில் ரக்சல் - அம்லேக்கஞ்ச் வரை முதல் இருப்புப் பாதையை நிறுவி தொடருந்து சேவைகள் அளித்தார்.

ஐக்கிய இராச்சியத்துடன் அரசியல் தொடர்புகளை மேம்படுத்தினார். மேலும் ஐக்கிய இராச்சியத்தில் தங்கி இராணுவப் பயிற்சி பெற்றவர்.

முதல் உலகப் போரின் போது, ஐக்கிய இராச்சியத்திற்கு பொருள் மற்றும் இராணுவப் படைவீரர்களையும் வழங்கி உதவினார்.[2]

இதனால் மகிழ்வுற்ற பிரித்தானியப் பேரரசு , 1923 நேபாள - பிரித்தானிய உடன்படிக்கையின் படி, நேபாளத்தை தன்னாட்சி கொண்ட நாடாக அங்கீகாரம் வழங்கியது. [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lamb6". www.royalark.net.
  2. Joshi, Bhuwan Lal; Rose, Leo E. (17 December 1966). "Democratic Innovations in Nepal: A Case Study of Political Acculturation". University of California Press – Google Books வழியாக.
  3. Hussain, Assad (1970). British India's relation with the Kingdom of Nepal. London: George Allen and Unwin Ltd.. பக். 208.