உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரா முசாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரா முசாபர்
Chandra Muzaffar
மலேசிய சமூக சீர்திருத்தவாதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 10, 1947 (1947-03-10) (அகவை 79)
பீடோங், கெடா
துணைவர்மரியம் அசிம்
பிள்ளைகள்அனிசா முசாபர்

சந்திரா முசாபர் (மலாய்; ஆங்கிலம்: Chandra Muzaffar) (பிறப்பு: 10 மே 1947) என்பவர் மலேசிய அரசியல் அறிஞர், இசுலாமிய சீர்திருத்தவாதி மற்றும் செயற்பாட்டியலாளர் ஆவார்.[1] இவர் பல ஆண்டுகளாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM) மற்றும் மலாயா பல்கலைக்கழகம் (UM) ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[2]

தற்போது பன்னாட்டு நீதி இயக்கத்தின் (International Movement for a Just World) தலைவராக உள்ளார்.[3] இந்த இயக்கம் ஓர் அரசு சாரா அமைப்பாகும். 1971-ஆம் ஆண்டு, மலேசியாவில் நீதி, மனித உரிமை மற்றும் சமூக ஒற்றுமைக்காக அலிரான் எனும் இனச் சீர்திருத்தக் குழுவை உருவாக்கினார். 1991-ஆம் ஆண்டு வரை அந்தக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.[4] 1987-ஆம் ஆண்டில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 52 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.[5]

சமூக நீதி செயல்பாடுகளில் மிகுந்த அக்கறை கொண்ட சந்திரா முசாபர், பல அரசு சாரா பன்னாட்டு நிறுவனங்களிலும்; சமூக நீதி வாரியங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார்.[4]

வாழ்க்கை

[தொகு]

டாக்டர் சந்திரா முசாபர் 1947-ஆம் ஆண்டு மலேசியா, கெடா, பீடோங்கில் ஓர் இந்து குடும்பத்தில், மூன்று சகோதரிகளுடன் ஒரே மகனாகப் பிறந்தார்.[6][2] நான்கு வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டார். அவர் 1977-ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

1999-ஆம் ஆண்டு தொடங்கி சில ஆண்டுகளுக்கு கெடிலான் எனும் மக்கள் நீதிக் கட்சியின் (துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2015-ஆம் ஆண்டில் மலேசிய அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை உருவாக்கின. இந்த மக்கள் நீதிக் கட்சிதான் தற்போது மலேசியாவின் ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக உள்ளது.

1987-ஆம் ஆண்டின் மலேசிய லாலாங் நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட 106 மலேசியர்களில் சந்திரா முசாபர் அவர்களும் ஒருவராவார். இந்தத் கைது நடவடிக்கை 1987 அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி 1987 நவம்பர் 20-ஆம் தேதி வரை நீடித்தது.[7] லாலாங் நடவடிக்கை என்பது மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்; 1960-இன் கீழ் மலேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பரவலான கைது நடவடிக்கையாகும்.[8]

எழுதிய நூல்கள்

[தொகு]

இவர் 32 நூல்களை எழுதியுள்ளார். இவரின் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில நூலக்ள்:[9]

  • பாதுகாவலர் - Protector (1979)
  • இசுலாத்தின் உலகளாவியவாதம் - Universalism of Islam (1979)
  • மலேசியாவில் இசுலாமிய மறுமலர்ச்சி - Islamic Resurgence in Malaysia (1987)
  • மனித உரிமைகள் மற்றும் புதிய உலக ஒழுங்கு - Human Rights and the New World Order (1993)
  • ஆசியாவிற்கான மாற்று அரசியல்: ஒரு பௌத்த-முசுலிம் பார்வை - Alternative Politics for Asia: A Buddhist-Muslim Dialogue (1999)
  • உரிமைகள், மதம் மற்றும் சீர்திருத்தம் - Rights, Religion and Reform (2002)
  • உலகளாவிய நெறிமுறையா அல்லது உலகளாவிய மேலாதிக்கமா? - Global Ethic or Global Hegemony? (2005)
  • மேலாதிக்கம்: நீதி; அமைதி - Hegemony: Justice; Peace (2008)
  • மதம் & நிர்வாகம் - Religion & Governance (2009)
  • ஆசியாவில் அரசியல்: ஒரு பௌத்த-முசுலிம் பார்வை - Politics in Asia: A Buddhist-Muslim Dialogue

தேர்தல்

[தொகு]
மலேசிய மக்களவை[10]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்கு % எதிரணி வாக்கு % வாக்கு பெரும்
பான்மை
%
1999 P112 பண்டார் துன் ரசாக் சந்திரா முசாபர் (நீதிக் கட்சி) 21,049 48.59% தான் சாய் கோ (மசீச) 22,273 51.41% 45,041 1,224 76.10%

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shireen Hunter (2014). Reformist Voices of Islam: Mediating Islam and Modernity. Routledge. p. 217. ISBN 9781317461241. Retrieved 20 June 2015.
  2. 1 2 "Dr. Chandra Muzaffar; Malaysian Muslim political scientist, and an Islamic reformist and activist". MALAYSIANA & ARCHIVES DIVISION (in ஆங்கிலம்). 3 May 2018. Retrieved 6 January 2026.
  3. "Dr. Chandra Muzaffar is the President of the International Movement for a Just World (JUST). He is the author and editor of 32 books". TRT World Forum. Retrieved 6 January 2026.
  4. 1 2 "In 1977 Chandra Muzaffar founded a multiethnic social reform group called Aliran Kesedaran Negara (ALIRAN; National Consciousness Movement), which sought to raise public awareness of issues pertaining to democracy and ethnic relations in Malaysia". charterforcompassion.org (in ஆங்கிலம்). Retrieved 6 January 2026.
  5. admin, Aliran (26 October 2017). "Remembering Operation Lalang 1987". Aliran. Retrieved 6 January 2026.
  6. "CHANDRA MUZAFFAR (1947–)". degruyterbrill (in ஆங்கிலம்). Duke University Press. 6 December 2007. pp. 314–315. doi:10.1515/9780822390169-042/html?lang=en. Retrieved 6 January 2026.
  7. "Chandra Muzaffar was among the 106 people who were detained without trial under the Internal Security Act 1960 in 1987. At the time, he was involved with Persatuan Aliran Kesedaran Negara (Aliran), a civil society movement which he co-founded". Malaysiakini. 28 October 2017. Retrieved 6 January 2026.
  8. "Malaysia's Operasi Lalang: Who is telling the truth?". New Mandala. 15 February 2011. Retrieved 23 February 2022.
  9. "Chandra Muzaffar". TRT World Forum. Retrieved 6 January 2026.
  10. "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. Retrieved 4 February 2017. ercentage figures based on total turnout.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரா_முசாபர்&oldid=4438022" இலிருந்து மீள்விக்கப்பட்டது