சந்திரா நாயுடு
சந்திரா நாயுடு | |
|---|---|
| பிறப்பு | 1933 இந்தூர், இந்தூர் அரசு, பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 4 ஏப்ரல் 2021 (88 வயது) இந்தூர், மத்திய பிரதேசம், இந்தியா |
| பணி | விளையாட்டு வர்ணனையாளர், துடுப்பாட்ட வீரர், பேராசிரியர் |
சந்திரா நாயுடு (Chandra Nayudu) 1933 ஆம் ஆண்டு பிறந்த இந்திய துடுப்பாட்ட வர்ணனையாளர், துடுப்பாட்ட வீராங்கனை, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர். இவர் இந்தியாவின் முதல் பெண் துடுப்பாட்ட வர்ணனையாளராகவும், இந்தியாவின் ஆரம்பகால பெண் துடுப்பாட்ட வீராங்கனைகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.2021 ஏப்ரல் 4 அன்று அவர் மரணமடைந்தார்.
குடும்ப வாழ்க்கை
[தொகு]சந்திரா நாயுடு 1933 ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் காப்பு குடும்பத்தில் பிறந்தார். [1][2][3][4] இவரது தந்தை சி. கே. நாயுடு பிரபல துடுப்பாட்ட வீரரும் இந்தியாவின் முதல் டெஸ்ட் துடுப்பாட்ட அணியின் கேப்டனும் ஆவார். [5][6] இவர் சி. கே. நாயுடுவின் முதல் மனைவிக்கு பிறந்த மூன்று மகள்களில் இளையவர் ஆவார்.[7] இவரது மாமா சி. எஸ். நாயுடுவும் இந்தியாவிற்காக துடுப்பாட்டம் விளையாடியுள்ளார். இவரது மருமகன் விஜய் நாயுடு முதல் தர துடுப்பாட்ட வீரராக இருந்தார். இவரது முன்னோர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினம் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.[8][9]
தொழில் வாழ்க்கை
[தொகு]சந்திரா நாயுடு ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார்.இவர் குறுகிய காலத்திற்கு உள்நாட்டு மகளிர் துடுப்பாட்டத்தில் விளையாடினார். முதல் உத்தரப் பிரதேச மகளிர் துடுப்பாட்ட அணியை வழிநடத்தியதுடன், தனது கல்லூரிக்காகவும் துடுப்பாட்டம் விளையாடினார். [10] பின்னர் 1970களில் துடுப்பாட்ட வர்ணனையாளராக பணியைத் தொடங்கினார்.இவர் இந்தியாவின் முதல் பெண் துடுப்பாட்ட வர்ணனையாளராக அறியப்படுகிறார்.[11] 1976–77 காலகட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த மேரிலெபோன் துடுப்பாட்ட கழகம் மற்றும் பம்பாய் அணிகளுக்கிடையேயான போட்டியில் தனது வர்ணனை வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் உள்நாட்டு ,சர்வதேச போட்டிகளுக்கு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வர்ணனை வழங்கினார்.[12]
1979–1980 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணி இந்தியா வந்த சுற்றுப்பயணத்தின் போது அகில இந்திய வானொலிக்காகவும் வர்ணனையாளராக பணியாற்றினார். [13] பின்னர் தனது துடுப்பாட்ட வர்ணனை அனுபவங்களை துடுப்பாட்ட வரலாற்றாசிரியர் டேவிட் ரேவர்ன் ஆலனுடன் பகிர்ந்தார்.[14] சந்திரா நாயுடுவின் கூற்றுப்படி, ஆஸ்திரேலிய பெண் வர்ணனையாளருக்கு முன்னரே சர்வதேச துடுப்பாட்ட வர்ணனை செய்த முதல் பெண் இவரே ஆவார். தனது தந்தையின் துடுப்பாட்ட சாதனைகளை கௌரவிக்கும் நோக்கில் துடுப்பாட்ட வர்ணனையில் ஆர்வம் ஏற்பட்டதாக இவர் கூறியுள்ளார்.1982 ஆம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான பொற்கொடி விழா டெஸ்ட் போட்டிக்கு இவர் அழைக்கப்பட்டார்.[15][16]
இவர் மத்தியப் பிரதேச துடுப்பாட்ட சங்கத்தின் ஆயுள் உறுப்பினராக இருந்தார். மகளிர் துடுப்பாட்டத்தை ஊக்குவிக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளை ஏற்படுத்துவதும் அடங்கும்.இவரது மருமகன் விஜய் நாயுடுவின் கூற்றுப்படி, தனது பெற்றோரின் நினைவாக பல துடுப்பாட்ட கோப்பைகளை நிறுவினார். அதில் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவிற்கு வெள்ளி மட்டை வழங்கியதும், தனது தாயின் நினைவாக கல்லூரி கோப்பை ஒன்றை நிறுவியதும் அடங்கும்.1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தூரிலுள்ள அரசு மகளிர் முதுநிலை கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு தனது தந்தையைப் பற்றிய சுயசரிதை நூலான சி. கே. நாயுடு: எ டாட்டர் ரிமெம்பர்ஸ் என்ற நூலை வெளியிட்டார்.[17]
இறப்பு
[தொகு]சந்திரா நாயுடு இந்தூரிலுள்ள மனோரமா கஞ்ச் பகுதியில் வசித்து வந்தார். இவரது தந்தை அடிக்கடி விளையாடிய ஹோல்கர் மைதானத்திற்கு அருகிலேயே அவரது வீடு அமைந்திருந்தது.2021 ஏப்ரல் 4 அன்று இந்தூரில் இவர் 88 வயதில் மரணமடைந்தார்.
வெளியீடுகள்
[தொகு]சந்திரா கே. நாயுடு எழுதிய சி. கே. நாயுடு: எ டாட்டர் ரிமெம்பர்ஸ் என்ற நூல் 1995 ஆம் ஆண்டு நியூ டெல்லியில் ரூபா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M. L. Kantha Rao (July 1999), A Study of the Socio-Political Mobility of the Kapu Caste in Modern Andhra. University of Hyderabad. Chapter 6. p. 301–303. hdl:10603/25437
- ↑ A. Vijaya Kumari; Sepuri Bhaskar (1998). Social Change Among Balijas: Majority Community of Andhra Pradesh (in ஆங்கிலம்). M.D. Publications. p. 14. ISBN 978-81-7533-072-6.
- ↑ Singh, Gurdeep (1966). Cricket in Northern India (in ஆங்கிலம்). Cosmo Publications. pp. 61, 62.
- ↑ Mukherji, Raju (2005). Cricket in India: Origin and Heroes (in ஆங்கிலம்). UBS Publishers' Distributors. p. 13. ISBN 978-81-7476-508-6.
- ↑ "C. K. Nayudu Profile". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2021-12-06.
- ↑ TNN (5 April 2021). "India's first female cricket commentator Chandra Nayudu passes away". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 2021-04-05. Retrieved 2021-12-06.
- ↑ "Chandra Nayudu had more knowledge than us players: Edulji". Sify. 6 April 2021. Archived from the original on 26 March 2022. Retrieved 2023-04-14.
- ↑ Nayudu, Chandra (1995). C.K. Nayudu, a Daughter Remembers (in ஆங்கிலம்). Rupa. p. 3. ISBN 978-81-7167-283-7.
- ↑ Naidu, T. Appala (2018-06-29). "Row over C.K. Nayudu's statue" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Vijayawada/row-over-ck-nayudus-statue/article24286482.ece.
- ↑ PTI (4 April 2021). "CK Nayudu's Daughter, Commentator Chandra Nayadu Dies". Outlook India (in ஆங்கிலம்). Archived from the original on 2021-05-08. Retrieved 2021-12-06.
- ↑ Dani, Bipin (5 April 2021). "India's first woman commentator Chandra Nayudu no more". Mid-Day. https://www.mid-day.com/sports/cricket/article/indias-first-woman-commentator-chandra-nayudu-no-more-23166951.
- ↑ Dani, Bipin (2021-04-05). "World's first ever woman commentator Chandra Nayudu no more". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2021-12-06.
- ↑ Ugra, Sharda. "Girls aloud". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2021-12-06.
- ↑ "Chandra Nayudu interviewed by David Rayvern Allen". Lord's Cricket Ground. Retrieved 2021-12-06.
- ↑ "FACE-TO-FACE". static.espncricinfo.com. Retrieved 2021-12-06.
- ↑ "The First Lady of Indian Cricket". Paperclip. (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-01. Retrieved 2023-04-14.
- ↑ "Chandra Nayudu, regarded as India's first female cricket commentator, passes away". ANI News (in ஆங்கிலம்). 4 April 2021. Retrieved 2021-12-06.