சந்திரா கலுவராச்சி
சந்திரா கலுவராச்சி | |
|---|---|
| பிறப்பு | சந்திரா கங்கனமகே கலுவராச்சி ஏப்ரல் 6, 1943 நரகேன்பிட்டா, இலங்கை |
| இறப்பு | நவம்பர் 1, 2019 (அகவை 76) |
| பணி | திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் மேடை நடிகை |
| வாழ்க்கைத் துணை | லட்சுமன் விஜேசேகரா |
| பிள்ளைகள் | அமா விஜேசேகர (மகள்) விஹங்க விஜேசேகர (மகன்) |
சந்திரா கலுவராச்சி (Chandra Kaluarachchi) (ஏப்ரல் 6, 1943 - நவம்பர் 1, 2019) இலங்கைத் திரைப்படத்துறை, நாடகம் மற்றும் தொலைக்காட்சியில் நடிகை ஆவார்.[1] வெலிக்கதர (1971), இர மதியமா (2003) மற்றும் நிசல கிரா (2007) ஆகிய படங்களில் நடிப்பிற்காக கலுவராச்சி மிகவும் பிரபலமானவர்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சந்திரா கலுவாரச்சி 6 ஏப்ரல் 1943 அன்று பிறந்து கொழும்புக்கு அருகிலுள்ள நாரகேன்பிட்டாவில் வளர்ந்தார்.
இவர் 1 நவம்பர் 2019 அன்று தனது 76 வயதில் காலமானார்.[2] இவர் இசைக்கலைஞரும் நடிகருமான லட்சுமண் விஜேசேகராவை மணந்தார். இவர்களுக்கு ஆமா என்ற ஒரு மகளும், விகங்கா என்ற ஒரு மகனும் இருந்தனர்.[3]
தொழில்
[தொகு]இவா் லமபிட்டியா என்ற நிகழ்ச்சி வானொலியில் நடிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டாா். இவர் கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு, நாடக ஆசிரியர் பிரேமரஞ்சித் திலகரத்ன தயாரித்த வகாலக் நேதி கெயக் போன்ற பல இலங்கை மேடை நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது 1964ஆம் ஆண்டு அரச நாடக விழாவில் அங்கீகாரம் பெற்றது. இங்கு இவர் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.[4] சந்திரா கலுவாரச்சி 1967 இல் எசு. கருணாரத்னவின் எரபடு மல் பொட்டு பிபில நாடகத்தில் ஒரு பாட்டியாக நடித்தார்.[5] தயானந்த குணவர்தனவின் கஜமான் புவத்த, "ஆவண நாடகம்" என்ற வகையின் முதல் நாடகமாகும், இதை இவர் 14 அக்டோபர் 1975 அன்று சிங்களத்தில் அறிமுகப்படுத்தினார்.[6] 1962இல் அர்னால்ட் விக்ரமசூரியாவின் ரத்தரன் புத்த நாடகத்தில் 19 வயது பெண்ணாக அறிமுகமானதில் இருந்து,[7] சந்திரா மேடை, திரைப்படம், வானொலி மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தாய் போன்ற மற்றும் பிற பாத்திரங்களில் நடித்ததற்காக அங்கீகரிக்கப்பட்டார்.[8]
தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள்
[தொகு]- அபி அபி ஊதியம்
- அவிந்து அதுரா
- பெத்தே கெடரா
- திமுத்து முத்து
- டூ தருவோ
- ஏக இத்தக மல்
- கேதுமதி நீயோ
- நிரானந்தயா
- பிதகம் கரையோ
- ஸ்வர்ண திசரவி
- சிறி சிரிமல்
- சீதா நிவன கதா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chandra Kaluarachchi filmography". Sinhala Cinema Database. Retrieved 18 December 2019.
- ↑ "Chandra Kaluarachchi passed away". Hiru News. Retrieved 18 December 2019.
- ↑ "Famous characters in Sri Lanka who are married to older women - www.slsocialmedia.com". www.slsocialmedia.com. Retrieved 2021-12-01.
- ↑ "'The Father' and the 'Ghosts' adopted for the Sinhala stage". sundayobserver (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 2013-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227191540/http://www.sundayobserver.lk/2007/01/21/imp06.asp.
- ↑ "A Critique on the State Sinhala Drama Festival of 1966". dailynews.lk (Sri Lanka). http://archives.dailynews.lk/2007/11/14/art04.asp.
- ↑ "Synthesis of literature and spectacle". island.lk (Sri Lanka). http://www.island.lk/2006/10/28/satmag3.html.
- ↑ "Handahana with Arnold Wickramasuriya". Daily News(Sri Lanka). http://archives.dailynews.lk/2005/10/19/arts02.htm.
- ↑ "R R Samarakone's life comes in a biography". Daily News(Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2013-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227155839/http://www.dailynews.lk/features/r-r-samarakones-life-comes-biography.