சந்திரவதியின் பரமாரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரவதியில் காணப்படும் இந்து கோவிலின் இடிபாடுகள்

சந்திரவதியின் பரமாரர்கள் (Paramaras of Chandravati) 10-13 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் உள்ள அர்புடா மலையை (இன்றைய அபு மலை ) சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்தனர். இவர்களின் தலைநகரம் சந்திரவதியில் அமைந்திருந்தது. மேலும் இவர்களின் பிரதேசத்தில் இன்றைய தெற்கு இராஜஸ்தான் மற்றும் வடக்கு குசராத்து ஆகிய பகுதிகள் அடங்கும். வம்சத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆட்சியாளராக தாராவர்ஷா என்பவர் அறியப் படுகிறார். அவர் 1178 இல் கசக்கிரடா போரில் கோரி படையெடுப்பை முறியடிக்க தனது சோலங்கிய மேலாதிக்கங்களுக்கு உதவினார்.

சந்திரவதியின் பரமாரர்கள் அர்புடா மலையைச் சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் பிரதேசம், அர்புடா (அல்லது ஒரு கல்வெட்டில் அர்வ்வுடா [1] ) என அழைக்கப்படும், இன்றைய தெற்கு இராஜஸ்தான் மற்றும் வடக்கு குசராத்து முழுவதும் பரவியிருந்தது. சந்திரவதி (கல்வெட்டுகளில் சந்திரபாளையம் அல்லது சந்திரபள்ளி என்றும் அழைக்கப்படுகிறது [1] ), மலையின் அடிவாரத்தில் உள்ள நகரம் அவர்களின் தலைநகராக இருந்தது. [2]

மதம்[தொகு]

பொ.ச.1161 தேதியிட்ட இரணசிம்மனின் கல்வெட்டு சிவனை அழைப்பதில் தொடங்குகிறது. அவரை உலக படைப்பின் "மேடை இயக்குனர்" என்று விவரிக்கிறது. மேலும் பிரம்மா , விஷ்ணு ஆகியோரை அவரது உதவியாளர்களாக பெயரிடுகிறது. [3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Dániel Balogh 2012, ப. 97.
  2. Dániel Balogh 2012, ப. 93.
  3. Dániel Balogh 2012, ப. 101.

உசாத்துணை[தொகு]