சந்திரவதனா (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரவதனா என்பது 1998 ஆம் ஆண்டு வெளிவந்த புதினம் ஆகும். இப்புதினம் எஸ்.பாலசுப்ரமணியன் என்பவரால் இயற்ற பட்டுள்ளது. கி. பி பதினேழாம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டுள்ளது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கன் என்னும் மன்னனின் மகளான இளவரசி சந்திரவதனா தேவி இக்கதையின் நாயகி ஆவர். மதுரை நாயக்க வமிச மன்னனான சொக்கநாத நாயக்கன் எனும் மன்னன் கதையின் நாயகன் ஆவர். இது ஒரு வீரம் செறிந்த காதல் கதை ஆகும்.

கதையின் மாந்தர்கள்[தொகு]

  1. சொக்கநாத நாயக்கன்.
  2. சந்திரவதனா
  3. விஜயராகவனாயக்கன் (தஞ்சை மன்னன்)
  4. மன்னர் தாசன் (தஞ்சை இளவரசன்)
  5. ராணி வையம்பிகா(சொக்கநாதனின் தாய்)
  6. முத்துநகை (சொக்கநாதனின் முறைப்பெண்)
  7. கோவிந்த தீட்சிதர்(தஞ்சை மந்திரி)
  8. மதுரவாணி(மந்திரியின் மகள் மன்னர்தாசன் காதலி)
  9. ரங்கப்ப நாயக்கன் (தஞ்சை தளபதி)
  10. அச்சுதப்ப நாயக்கன்(தளபதியின் மகன்)
  11. வேங்கட கிருஷ்ணன் (சொக்கநாதனின் தோழன்)
  12. அக்கிராஜி (மன்னர் தாசனின் தோழன்)
  13. ரங்காஜம்மா ( கணிகையர் குல தலைவி)

இவர்கள் அனைவரும் கதையின் முக்கிய பாத்திரங்கள் ஆவர்

கதையின் மையக் கரு[தொகு]

தஞ்சை நாயக்க மன்னர்கள் காப்பு கவரை பிரிவாகவும் , மதுரை நாயக்கர் மரபினர் காப்பு கம்பளத்தார் பிரிவாகவும் இருந்தனர் . இவர்களுக்குள் யார் பெரிய பிரிவு என்று மோதல்கள் அடிக்கடி வருவதுண்டு . மதுரை நாயக்கர்கள் தஞ்சை நாயக்கர்களை தங்களை விட கீழ் என்றும் தஞ்சை நாயக்கர்கள் மதுரை நாயக்கர்களை கீழ் என்றும் நினைத்து கொள்வர் . இதனால் தஞ்சை நாயக்கர்கள் மதுரை நாயக்கர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் தஞ்சை இளவரசி அச்சுத ரகுநாதம்மாவை மணந்த திருமலை நாயக்கர் அவ்வரசியைக் கொன்றுவிடுகிறார் இதற்குக் காரணம் அவ்வரசி மதுரை நாயக்கர் மகாலைக் கேவலமாகப் பேசுகிறாள். இதனால் இரண்டு வம்சமும் மிகுந்த பகையுடன் உள்ளது இந்நிலையில் திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கனுக்கும் அச்சுதரகுனாதம்மாவின் அண்ணன் பேத்தி இளவரசி சந்திரவதனவிற்கும் காதல் ஏற்படுகிறது. அவளைப் பெண் கேட்டு சொக்கநாதன் வரும் பொது தஞ்சை மன்னனால் அவமானப்படுத்தப்பட்டு சொக்க நாதன் தஞ்சையின் மீது படை எடுக்கிறான். பின்னர் இளவரசி உட்பட தஞ்சை அரச வம்சமே பூண்டோடு அழிகிறது காரணம் விஜயராகவ நாயக்கன் சொக்கநாத நாயக்கன் தன் மகளை மணக்க கூடாதென்று அந்தப் புரத்தை வெடி வைத்து தகர்த்துத் தானும் உயிர் விடுகிறான். இக்கதையில் இளவரசன் மன்ன தாசன் வீரம் பொருந்தியவனாகவும் நாத்திகவாதியாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான். போர் சமயத்தில் போருக்குத் தயாராகாமல் வேள்வி செய்யும் அரசன் (தந்தையை) எதிர்ப்பதால் சிறையிலிடப்படுகிறான். மதுரவாணியுடன் கூடிய அவனது காதல் அத்தியாயமும் சுவையானதாகக் காட்டபடுகிறது. மேலும் கதையின் போக்கிற்கு முக்கியக் காரணமே மதுரவாணியே ஆவாள்.

சிறப்புக் கூறுகள்[தொகு]

  1. அக்காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கதையில் நேரடியாக காட்டியிருப்பதோடு அவற்றுக்கான புத்தகச் சான்றுகளையும் மேற்கோள் காட்டியிருப்பது.
  2. இடையிடையே வரும் வேதங்கள் தொடர்பான தருக்கங்கள்; சாத்திரங்கள் பற்றிய முழுமையான எளிமையான விளக்கம்.
  3. திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது.
  4. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை.
  5. கதையைப் படித்த பின் குறைந்தது ஒரு வாரத்திற்கு கனத்த மனதுடன் இருப்பது.
  6. கதை நடக்கும் காலத்திற்கே சென்று விட்டதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவது.
  7. இதுவரை பதிவு செய்ய படாத பல அரசர் காலத்து விடயங்களைப் பதிவு செய்திருப்பது
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரவதனா_(புதினம்)&oldid=3524074" இலிருந்து மீள்விக்கப்பட்டது