சந்திரபிரபா அர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரபிரபா அர்சு (Chandraprabha Urs)(1946-2016) என்பவர் இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தினை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் பத்தாவது மக்களவை மற்றும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அர்சு பல்வேறு காலங்களில் ஜனதா கட்சி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசுடன் பயணித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சந்திரபிரபா 1946ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூரில் பிறந்தார்.[1] இவரது தந்தை தேவராஜா அர்சு இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்து, கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்றவர் ஆவார்.[2] இவர் திருமதி வி. எச். டி. மத்திய மனையியல் அறிவியல் நிறுவனத்தில் நூலக அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.[1]

தொழில்[தொகு]

ஜனதா கட்சியின் உறுப்பினராக, சந்திரபிரபா உர்சு 1983 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அன்சூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டேவின் அமைச்சரவையில் சமூக நலம், பட்டு வளர்ப்பு மற்றும் கலால் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3] பின்னர் இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1989 முதல் 1991 வரை இரண்டாவது முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[4] 1991 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்தியத் தேசிய காங்கிரசு இவரை மைசூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார், மைசூர் மகாராஜாவுக்கு எதிராக நிறுத்தியது. உர்சு 2,25, 881 வாக்குகள் பெற்று 16,882 வாக்குகள் வித்தியாசத்தில் உடையாரைத் தோற்கடித்தார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சந்திரபிரபா, எம். சி. மோகன் ராஜ் அர்சை மணந்தார்.[1] உர்சு மைசூர் மருத்துவமனையில் 3 மே 2016 அன்று மாரடைப்பால் இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Members Bioprofile: Urs, Smt. Chandraprabha". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
  2. 2.0 2.1 "Chandraprabha Urs passes away". The Hindu. 3 May 2016. http://www.thehindu.com/news/national/karnataka/chandraprabha-urs-passes-away/article8552163.ece. பார்த்த நாள்: 25 November 2017. 
  3. "Chandraprabha Urs cremated with State honours". The Hindu. 5 May 2016. http://www.thehindu.com/news/national/karnataka/chandraprabha-urs-cremated-with-state-honours/article8559131.ece. பார்த்த நாள்: 25 November 2017. 
  4. "Statistical Report on the General Elections, 1989 to the Legislative Assembly of Karnataka" (PDF). Election Commission of India. p. 142. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
  5. "Statistical Report on General Elections, 1991 to the Tenth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 196. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரபிரபா_அர்சு&oldid=3679021" இலிருந்து மீள்விக்கப்பட்டது