சந்திரபாகா ஆறு, மகாராட்டிரம்
| சந்திரபாகா Chandrabhaga | |
|---|---|
அமராவதி மாவட்டத்தில் சமக் குர்த் என்ற இடத்தில் சந்திரபாகா ஆறு. | |
| Lua error in package.lua at line 80: module 'Module:Infobox_dim/data' not found. | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மண்டலம் | விதர்பா |
| மாவட்டம் | அமராவதி |
| நகரம் | தார்யாபூர் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | சிக்கல்தாரா மலைகள், மகாராட்டிரம், இந்தியா |
| • ஆள்கூறுகள் | 21°23′0″N 77°16′1″E / 21.38333°N 77.26694°E |
| முகத்துவாரம் | |
• அமைவு | பூர்ணா ஆறு |
• ஆள்கூறுகள் | 20°51′20.75″N 77°15′3.3″E / 20.8557639°N 77.250917°E |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • இடது | பூலேசுவரி ஆறு |
சந்திரபாகா ஆறு (Chandrabhaga) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள அமராவதி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் சந்திரபாகா ஆறும் ஒன்றாகும். பூர்ணா ஆற்றின் துணை ஆறாக, தப்தி-பூர்ணா ஆற்று அமைப்பின் ஒரு பகுதியாக சந்திரபாகா ஆறு உள்ளது.
சந்திரபாகா ஆற்றின் பிரதான நீரோடை சிக்கல்தாரா மலைகளில் உள்ள வைரத் பீடபூமியில் இருந்து கீழே பாய்கிறது.[1] சிக்கல்தாரா மற்றும் கவில்கர் பீடபூமிகளின் தெற்கு சரிவுகளில் கிழக்கு நோக்கிச் செல்கிறது.[2] பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் போது ஆற்றின் மீது சந்திரபாகா அணை கட்டப்பட்டுள்ளது. ஆறு அணையிலிருந்து தெற்கு நோக்கித் திரும்பி, தர்யாபூர் நகரம் வழியாகச் சென்று, அமராவதி மற்றும் அகோலா மாவட்டத்தின் எல்லையில் பூர்ணா நதியுடன் கலக்கிறது. புலேசுவரி ஆறு சந்திரபாகா நதியின் ஒரு முக்கிய துணை ஆறாகும். இது தர்யாபூருக்கு முன்பு சந்திரபாகா ஆற்றைச் சந்திக்கிறது. அச்சல்பூர் மற்றும் பரத்வாடா வழியாகப் பாயும் சபன் மற்றும் பிச்சான் ஆறுகள் பிற வளமான நீரோடைகளாகும்.[2] புகழ்பெற்ற விதோபா கோயில் அமைந்துள்ள பந்தர்பூர் வழியாகவும் செல்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khadri, S. F. R. (2011). "Hydro geological investigations of the Chandrabhaga River basin, Chikaldhara Region, Amravati District, MS, India". International Journal of Earth Sciences and Engineering 4 (6): 262–269 இம் மூலத்தில் இருந்து 18 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111218092308/http://www.ace-klu.in/img/020410210.pdf.
- ↑ 2.0 2.1 "Rivers – The Gazetteers Department – Amravati". Retrieved 2012-12-15.