உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரநாத் பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரநாத் பாசு
பிறப்பு(1844-08-31)31 ஆகத்து 1844
கைகலா, ஹூக்ளி மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா[1][2]
இறப்பு20 சூன் 1910(1910-06-20) (அகவை 65)
படித்த கல்வி நிறுவனங்கள்மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
தந்தைசீதாநாத் பாசு
உறவினர்கள்காசிநாத் பாசு (தாத்தா)

சந்திரநாத் பாசு (Chandranath Basu (1844–1910)[3]இந்திய இலக்கியவாதியும்[4][5][6], உறுதியான இந்துவும் ஆவார்.[7]சந்திரநாத் பாசு இந்துத்துவா எனும் சொல்லை முதலில் அறிமுகப்படுத்திவர்.[8][9] [a] மேலும் வங்காளத்தில் பொருளாதாரம் மற்றும் இந்திய தேசியவாதத்தின் முன்னோடியாக சந்திரநாத் கருதப்படுகிறார்.[3]

இளமை & கல்வி

[தொகு]

வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கைகலா கிராமத்தில் 31 ஆகஸ்டு 1844 அன்று சீதாநாத் பாசு என்பவருக்கு சந்திரநாத் பாசு பிறந்தார்.[2] பள்ளிக் கல்வியை முடித்த சந்திரநாத் பாசு கொல்கத்தா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பை (1862–1865) முடித்தார். 1866ல் வரலாறு பாடத்தில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, பின் இளநிலை சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

தொழில்

[தொகு]

டாக்காவில் துணை நீதிபதியாக பணியாற்றிய சந்திரநாத் பாசு, பின் நிரந்தரமாக கொல்கத்தாவில் வங்காள நூலகத்தில் நூலகராக பணியாற்றினார். [3]1877ல் வங்காள மாகாண அரசில் அதிகாரப்பூர்வமாக மொழிபெயர்ப்பாளராக பணியில் சேர்ந்து, அதே பணியில் 1904ல் பணி ஓய்வு பெற்றார். பின்னர் சில ஆண்டுகள் ஜெய்பூர் கல்வியியல் கல்லூரியின் முதல்வராகவும், வங்காள சாகித்திய பரிஷத்தின் தற்காலிகத் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

செயல்பாடுகள்

[தொகு]

துவக்காலப் படைப்புகள்

[தொகு]

1857 சிப்பாய் கிளர்ச்சி குறித்து புகழ் பெற்ற புரட்சி (Glorious Revolution) எனும் தலைப்பில் ஆங்கில மொழியில் நூல் எழுதினார்.

பசுபதி சம்வாதம்

[தொகு]

பசுபதி சம்வாதம் எனும் நூலை எழுதி வெளியிட்ட பிறகு சந்திரநாத் பாசு இந்து சமூகத்தில் நன்கு அறியப்பட்டார். இவர் கிறிஸ்தவ மற்றும் பிரம்ம சமாஜம் அறிஞர்களுடன் இறையியல் விவாதங்களை தொடங்கினார். மேலும் இந்துக்கள் சமய சாஸ்திரங்களை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

சாகுந்தல தத்துவம்

[தொகு]

மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட அபிஞான சாகுந்தலம் எனும் நாடக நூலை ஒற்றி சந்திரநாத் பாசுவின் பெரிய படைப்பான சாகுந்தல தத்துவம் எனும் ஒப்பீட்டு ஆய்வு நூல், இந்துத்துவா விழுமியங்களைக் கண்டறிய முயன்று மகத்தான வெற்றியைப் பெற்றது.

இந்துத்துவா:இந்துக்களின் பழைமையான வரலாறு

[தொகு]

சந்திரநாத் பாசுவின் முக்கியமான படைப்புகளில், 1892ல் எழுதிய இந்துத்துவா:இந்துக்களின் பழைமையான வரலாறு ( Hindutva--Hindur Prakrita Itihas) எனும் நூல் எளிய மக்களிடையே அத்வைத கோட்பாட்டை நிலைநிறுத்துவதாகும்.

குறிப்புகள்

[தொகு]
  1. விநாயக் தாமோதர் சாவர்க்கர் முன்வைத்த அரசியல் சித்தாந்தத்திற்கு மாறாக, பாசுவின் இந்த இந்துத்துவா சொல்லின் பயன்பாடு பாரம்பரிய இந்துப் பண்பாட்டின் பார்வையை சித்தரிப்பதாக இருந்தது என்று அறிஞர் அமியா சென் குறிப்பிடுகிறார்.[10] மற்ற அறிஞர்களும் இக்கருத்தை பகிர்ந்து கொண்டனர்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), (1976), Samsad Bangali Charitabhidhan (Biographical dictionary), (in Bengali), p 146
  2. 2.0 2.1 Akhter, Shamima. "Basu, Chandranath". Banglapedia. Retrieved 13 May 2019.
  3. 3.0 3.1 3.2 Sen, Amiya P. (2001-02-28). "Their Finest Hour: Hindu Revivalism and Aggressive Propaganda Through the Press and Platform (c. 1880–1904)". Hindu Revivalism in Bengal c.1872-1905: Some Essays in Interpretation (in அமெரிக்க ஆங்கிலம்). Oxford University Press. doi:10.1093/acprof:oso/9780195655391.001.0001. ISBN 9780199080625.
  4. Bagchi, Jasodhara (1997). "Female sexuality and community in Jyotirmoyee Devi's Epar Ganga Opar Ganga". In Thapan, Meenakshi (ed.). Embodiment : Essays on Gender and Identity. New Delhi: Oxford University Press. p. 85.
  5. Sarkar, Sumit (1997). Writing social history (in ஆங்கிலம்). New York. p. 375. ISBN 9780195646337.
  6. Mukherjee, Sujit (1998). A Dictionary of Indian Literature: Beginnings-1850 (in ஆங்கிலம்). Vol. 1. New Delhi]pages=70–71: Orient Blackswan. ISBN 9788125014539.{{cite book}}: CS1 maint: location (link)
  7. Nagendra (1976). Literary Criticism in India (in ஆங்கிலம்). Sarita Prakashan. p. 18.
  8. "Will its Hindu revivalist past haunt West Bengal's future?". Open The Magazine. 2019-03-28. Retrieved 2019-10-29.
  9. Gopal, Sangita (2003-07-01). "Hindu Buying/Hindu Being: Hindutva Online and the Commodity Logic of Cultural Nationalism". South Asian Review 24 (1): 161–179. doi:10.1080/02759527.2003.11978304. பன்னாட்டுத் தர தொடர் எண்:0275-9527. 
  10. Sen, Amiya P. (2014-05-22). Discourses, Public Addresses, and Informal Talks (in அமெரிக்க ஆங்கிலம்). Oxford University Press. doi:10.1093/acprof:oso/9780198098966.001.0001. ISBN 9780199083015.
  11. Bhatt, Chetan (2004). "'Majority ethnic' claims and authoritarian nationalism: the case of Hindutva". In Kaufmann, Eric P. (ed.). Rethinking Ethnicity : Majority Groups and Dominant Minorities. London: Routledge. doi:10.4324/9780203563397. ISBN 9780203563397.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரநாத்_பாசு&oldid=4194295" இலிருந்து மீள்விக்கப்பட்டது