சந்திரசேகர கவிராச பண்டிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரசேகர கவிராசர் (? - 1883[1])கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தில்லையம்பூரில் பிறந்தவர்[1]. இவர் பழமையான நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.[2]

கல்வியும் பணியும்[தொகு]

இவர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் ஆகியோரிடம் கல்வி பயின்றுள்ளார்[1]. சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தாண்டவராய முதலியார், இராமநுச கவிராயர் ஆகியோரிடத்து நெருங்கிப் பழகியவர்[1].

இயற்றிய நூல்கள்[தொகு]

திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீசுப்பிரமணியதேசிகர் மீது மும்மணிக்கோவைப் பாடியுள்ளார். பொன்னுசாமித் தேவர் விருப்பத்தின்படி தனிப்பாடல்கள் பலவற்றைத் திரட்டி தனிப்பாடல் திரட்டு வெளியிட்டுள்ளார்.[3]. வருஷாதிநூற் சித்தாந்த விளக்கமும், அறுபது வருஷ பலனும் எனும் பழைய நூலை ஆராய்ந்து, 1875 இல் அச்சிட்டு வெளியிட்டார். தண்டியலங்கார மூலத்தையும், அதற்குச் சுப்பிரமணியதேசிகரால் செய்யப்பட்ட உரையையும் ஆராய்ந்து வெளியிட்டார்.

பதிப்பித்த நூல்கள்[தொகு]

இவர் பதிப்பித்த நூல்கள் சில:[1]

 • பாலபோத இலக்கணம்
 • நன்னூற் காண்டிகையுரை
 • நன்னூல் விருத்தியுரை
 • ஐந்திலக்கண வினாவிடை
 • யாப்பருங்கலக் காரிகையுரை
 • வெண்பாப் பாட்டியல் உரை
 • பழமொழித் திரட்டு
 • பரத நூல்
 • செய்யுட்கோவை

உசாத்துணை[தொகு]

 1. பூசை சுப்பிரமணியத் தம்பிரான்," குருபரம்பரை விளக்கம்" திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடு.
 2. மயிலை சீனி. வேங்கடசாமி, "19 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்"- மெய்யப்பன் தமிழாய்வகம்-2001.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "சந்திரசேகர கவிராச பண்டிதர்".
 2. தமிழ் மரபு அறக்கட்டளை-சுவடிப் பதிப்பாசிரியர்கள்
 3. சிற்றிலக்கியங்களும் பல்துறை நூல்களும்-பல்துறை நூல்கள்