சந்திரசேகரன் நாயர் விளையாட்டரங்கம்
காவல்துறை விளையாட்டரங்கம் | |
சந்திரசேகரன் நாயர் விளையாட்டரங்கம் | |
அமைவிடம் | திருவனந்தபுரம், கேரளம் |
---|---|
உரிமையாளர் | கேரளக் காவல் விளையாட்டு & இளைஞர் நலச் சங்கம் |
இயக்குநர் | கேரளக் காவல் விளையாட்டு & இளைஞர் நலச்சங்கம் |
தரைப் பரப்பு | புல்தளம் |
திறக்கப்பட்டது | 1956 |
சந்திரசேகரன் நாயர் விளையாட்டரங்கம் (Chandrasekharan Nair Stadium) என்பது இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய கால்பந்து மைதானம் ஆகும். இந்த விளையாட்டரங்கம் காவல்துறை விளையாட்டரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரங்கம் கேரளாவின் முதல் காவல் ஆய்வாளர் ஜெனரல் என். சந்திரசேகரன் நினைவாக 1956 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. [1] விளையாட்டரங்கம் , வடிகால்களை வாருதல் மற்றும் மறுசீரமைத்தல், புதிய 6 வழிச்சாலையான செயற்கைத் தடத்திற்கு இடமளிக்கும் வகையில் விளையாட்டு அரங்கை மறுசீரமைத்தல், தேவைக்கேற்ப பார்வையாளர்களின் படிகளை அகற்றுவது மற்றும் புதுப்பித்தல், பாதையில் புதிய சங்கிலி இணைப்பு வேலி அமைத்தல், 35 ஆவது தேசிய விளையாட்டுக்கான புள்ளிகள் அறிவிப்புப் பலகையை அமைத்தல் மற்றும் கட்டமைத்தல் ஆகிய பணிகளுடன் அதன் தற்போதைய கால்பந்து மைதானமானது புதுப்பிக்கப்பட்டது. [2] [3] [4] [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2018/oct/02/now-swim-chlorine-free-at-chandrasekharan-nair-stadium-complex-1879715.html
- ↑ http://www.etrivandrum.com/2012/01/chandrasekharan-nair-stadium-in-palayam.html
- ↑ http://www.niyamasabha.org/codes/14kla/session_14/ans/u00181-280119-397000000000-14-14.pdf
- ↑ https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/chlorine-free-swimming-pool-to-be-opened/articleshow/66020278.cms
- ↑ https://tv.mathrubhumi.com/en/news/kerala/intl-swimming-pool-1.4369