உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரகாந்து சம்பத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகாந்து சம்பத்து
Chandrakant Sampat
பிறப்பு1929 (1929)
குசராத்து, இந்தியா
இறப்பு2015 (அகவை 85–86)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிமுதலீட்டாளர்
அறியப்படுவதுஇந்தியாவில் மதிப்பு முதலீட்டின் தந்தை.

சந்திரகாந்து சம்பத்து (Chandrakant Sampat) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு முதலீட்டாளர் ஆவார்.[1] 1929 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்தார். 1970 ஆம் ஆண்டுகளில் மற்ற முதலீட்டாளர்கள் உண்மையான மதிப்பை உணரும் முன்பே பன்னாட்டு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து தனது செல்வத்தை குவித்தார். மேலும் "இந்தியாவில் மதிப்பு முதலீட்டின் தந்தை" என்று அறியப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

1929 ஆம் ஆண்டு ஒரு குசராத்தி குடும்பத்தில் சந்திரகாந்து சம்பத்து பிறந்தார். 1950 ஆம் ஆண்டுகளில் தனது குடும்பத் தொழிலை விட்டு வெளியேறிய பிறகு, 26 வயதில் இந்திய சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார்.

தொழில்

[தொகு]

1970 ஆம் ஆண்டுகளில் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, மற்ற முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை அவற்றின் உள்ளார்ந்த மதிப்புக்குக் கீழே குறைத்த நிறுவனங்களின் உண்மையான மதிப்பை உணரும் முன்பே, பன்னாட்டு நிறுவனங்களை வாங்கி இவர் பெரும் செல்வத்தை குவித்தார்.[2] "இந்தியாவில் மதிப்பு முதலீட்டின் தந்தை" என்று அழைக்கப்படும் சந்திரகாந்து சம்பத், ஒரு முழு தலைமுறை முதலீட்டாளர்களையும் ஊக்கப்படுத்தினார். உறுதிப்பாடு மற்றும் கடுமையான ஒழுக்கம் கொண்ட மனிதராக இருந்தார். இதனால் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவராக மாறினார்.

டி-மார்ட் சில்லறை விற்பனைச் சங்கிலியின் நிறுவனர் மற்றும் உரிமையாளரும் மதிப்பு முதலீட்டாளருமான இராதாகிசன் தமானி உட்பட பல இந்திய முதலீட்டாளர்களை இவர் ஊக்கப்படுத்தி வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.[3] வெற்றிகரமான முதலீட்டு உத்திக்காக இவர் வாரன் பஃபெட்டுடன் ஒப்பிடப்பட்டார்.[4]

இறப்பு

[தொகு]

86 வயதான முதலீட்டாளர் ஒரு சுறுசுறுப்பான, எளிமையான வாழ்க்கையை நடத்தினார். 2015 ஆம் ஆண்டில் தனது 86 வயதில் இறந்தார்.[5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tribute to the Father of Value Investing in India". bltpindia.com/ (in ஆங்கிலம்). Retrieved Mar 5, 2019.
  2. "Meet Chandrakant Sampat". CRED. July 4, 2021.
  3. Patel, Samvit (February 2, 2023). "Chandrakant Sampat". Medium. https://medium.com/@samvitpatel17/chandrakant-sampat-856f7f880b69. 
  4. "Remembering Chandrakant Sampat: India's original value investor". Forbes India. February 2, 2015. https://www.forbesindia.com/article/special/remembering-chandrakant-sampat-indias-original-value-investor/39507/1. 
  5. Nagar, Anupam (5 March 2019). "chandrakant sampat died at 86" (in en). The Economic Times. https://economictimes.indiatimes.com/markets/stocks/news/when-dalal-streets-original-value-investor-prophesied-doom-for-indias-capital-markets/articleshow/68265532.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்து_சம்பத்து&oldid=4407888" இலிருந்து மீள்விக்கப்பட்டது