சந்திரகலா (இனிப்பு)
| பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு |
|---|---|
| பகுதி | தமிழ்நாடு |
| ஆக்கியோன் | குருதயாள் சர்மா (பாம்பே ஸ்வீட்சு) |
| கண்டுபிடிப்பு | 1949 |

சந்திரகலா (Chandrakala) என்பது குஜியாவைப் போன்ற தமிழ்நாட்டிலிருந்து வரும் ஒரு இனிப்பு வகை. வெளிப்புற உறை மாவால் ஆனது. இதனைத் தயாரிக்க மைதா மாவு, நெய், உப்பு, தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படும். இதனுள் இடப்படும் உள்ளீடு பாரம்பரியமாகத் திராட்சை, தேங்காய், பாதாம், முந்திரி போன்ற உலர்ந்த பழங்களுடன் கோவா, ரவை, ஏலக்காய், சர்க்கரை மற்றும் பிஸ்தா ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. இனிப்பில்லாத கோவாவினைப் பயன்படுத்தினால் சர்க்கரை சேர்க்க வேண்டும்.[1] சந்திரகலா என்ற பெயர் அந்த வடிவத்திலிருந்து வந்தது. சந்திரகலா என்றால் இந்தியில் நிலவொளி என்று பொருள். ஆனால் இந்த இனிப்பு சந்திர வடிவமானது; எனவே இப்பெயர் பெற்றது. வெளிப்புற உறையானது மாவினால் வட்டமாகத் தயாரிக்கப்பட்டு, பின்னர் மடிக்கப்பட்டுக் கிடைக்கும் வடிவம் சந்திர வடிவம் போன்றது.[2] இதேபோல், சூரியகலா என்ற இனிப்பு வகையும் உள்ளது. இது ஒரே மாதிரியான பொருட்களால் சந்திரகலா போன்றே தயாரிக்கப்படுகிறது. ஆனால் சூரியகலா வட்டமானது. சூர்யா என்றால் சூரியன் என்று பொருள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chandrakala Recipe| Three Peppercorn". www.threepeppercorn.com. Archived from the original on 4 February 2013. Retrieved 27 January 2022.
- ↑ "Suryakala chandrakala sweet".