சந்திரகலா ஆ. கதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரகலா ஆனந்தராவ் கதே
பிறப்புசந்திரகலா ஜகன்நாத் முர்குத்
1903
இறப்பு1990
கல்விமுதுகலை, முனைவர்.

சந்திரகலா ஆனந்தராவ் கதே (ஆ-தே என்றும் உச்சரிக்கப்படுகிறது) (1903-1990) ( என்கிற முர்குத்) ஓர் எழுத்தாளரும், பெண்ணியவாதியும், சமூக சேவகரும் ஆவார். இவர் இந்தியாவின் மும்பையில் பேராசிரியராக இருந்தார்.

சுயசரிதை[தொகு]

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

சந்திரகலா ஜகன்நாத் முர்குத் 12 செப்டம்பர் 1903 இல் ஜெகன்நத் - லகானிபாய் முர்குத் ஆகியோருக்கு, மும்பையின் தெய்வத்ன பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே கல்வி முக்கிய பங்கு வகித்தது.

தொழில்[தொகு]

இவரது பெரும்பாலான பணிகள் இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலையை ஆய்வு செய்வதையும் மேம்படுத்துவதையும் உள்ளடக்கி இருந்தது. இவர் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். "இந்துப் பெண்ணும் அவளது எதிர்காலமும்" (1948) என்ற ஆய்வறிக்கை எழுதி சமூகவியலில் முனைவர் பெற்றார். அந்த நேரத்தில் மிகவும் முன்னோக்கு சிந்தனையுடன் கருதப்பட்ட இந்த ஆய்வு, பெண்களின் கல்வியை ஆதரிப்பதோடு, பணியிடத்தில் பெண்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் அதிகரித்தது.

குடும்பம்[தொகு]

இவர் ஆனந்தராவ் ராமகிருஷ்ணன் என்பவரை மணந்தார். இவரது கணவர் இவரது தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டார். இவர் மூன்று மகன்களை தனியே வளர்த்தார். சமூகத்தின் பெரும்பகுதியை தான் பார்க்கும் விதத்தில் முக்கிய பங்கு வகித்தார். குருதேவ் ஆர். டி இரனதேவின் போதனைகளிலிருந்து தனது ஆன்மீக ஆதரவைப் பெற்றார்.

இறப்பு[தொகு]

இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்த இவர் 1990இல் மும்பையில் இறந்தார்.

மரபு[தொகு]

இவர் இறந்த சில வருடங்களில், மும்பை நகராட்சி, தெற்கு மும்பையின் கிர்காமில் ஒரு இடத்துக்கு சந்திரகலாபாய் கதே சௌக் என மறுபெயரிட்டது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகலா_ஆ._கதே&oldid=3708863" இலிருந்து மீள்விக்கப்பட்டது