சந்தியா ரே
சந்தியா ரே | |
|---|---|
![]() சந்தியா ரே 2020-ல் | |
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 23 மே 2019 | |
| முன்னையவர் | பகிரத் பிரசாத் |
| தொகுதி | பிந்து மக்களவைத் தொகுதி |
| சட்டப் பேரவை உறுப்பினர், மத்தியப் பிரதேசம் | |
| பதவியில் 2003–2008 | |
| பின்னவர் | சிவ் மங்கள் சிங் தோமர் |
| தொகுதி | திமானி சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 4 சனவரி 1974 முரைனா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | சுமன் ரே (தி. 1984) |
| பிள்ளைகள் | 3 |
| கல்வி | முதுகலை, இளங்கலைச் சட்டம் |
| முன்னாள் மாணவர் | சிவாஜி பல்கலைக்கழகம்; பர்கத்துல்லா விசுவவித்யாலயா, அரசு சட்டக் கல்லூரி, போபால் (முதுகலை, இளங்கலைச் சட்டம்) |
| தொழில் | வழக்குரைஞர், விவாசாயி |
சந்தியா ரே (Sandhya Ray-பிறப்பு சனவரி 4,1974) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2019 முதல் மத்தியப் பிரதேசத்தின் பிந்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 18ஆவது மக்களவையில் தலைவர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[1][2][3][4]
2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில், சந்தியா ரே இந்திய தேசிய காங்கிரசின் பூல் சிங் பரையாவினை 64,840 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ரே, சபாரம் தைங்குரியா (தந்தை) ராம் கட்டோரி பாய் தைங்குரியா (தாய்) இணையோரின் மகளாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள மொரேனா கம்ராவில் பிறந்தார். போபாலில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகம், பர்கத்துல்லா விசுவவித்யாலயா, போபாலில் அமைந்துள்ள அரசு மாநில சட்டக் கல்லூரியில் (முதுகலை கலை, இளநிலைச் சட்டம்) கல்லூரி படிப்பினை முடித்துள்ளார். இவர் சுமன் ரேயை ஏப்ரல் 16,1984 அன்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ரே வழக்கறிஞரும் விவசாய நிபுணரும் ஆவார்.[1][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Members : Lok Sabha". loksabhaph.nic.in. Retrieved 13 September 2020.
- ↑ "Bhind Election Results 2019 Live Updates: Sandhya Ray of BJP Wins". News 18. 23 May 2019. Retrieved 24 May 2019.
- ↑ "Bhind Election Results 2019". Times Now. 23 May 2019. Retrieved 23 August 2019.
- ↑ "17th Lok Sabha 2019: 46 First-Time women MPs among record 78 women MPs in new Lok Sabha". Gorky Bakshi. Jagran Josh. 30 May 2019. Retrieved 23 August 2019.
- ↑ Election Commission of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Bhind" இம் மூலத்தில் இருந்து 6 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240806144420/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S122.htm.
- ↑ "Bhind Constituency Lok Sabha Election Results 2024". Bru Times News (in ஆங்கிலம்).
- ↑ Feminism in India (1 September 2020). "How Sandhya Ray Became The First Female MP From Bhind in Madhya Pradesh" இம் மூலத்தில் இருந்து 6 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240806135156/https://feminisminindia.com/2020/09/02/sandhya-ray-first-female-mp-bhind-madhya-pradesh/.
