சந்தியா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
সন্ধ্যা রায়
சுர்ஜோ சுனான் படத்தில் ராய் (1962)
பிறப்பு11 ஏப்ரல் 1941 (1941-04-11) (அகவை 83)
நவதீப், வங்காள மாகாணம், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அலோர் பிபசா
நிமந்திரன்
புலேஸ்வரி
சன்சார் சிமாண்டே
தாதர் கீர்த்தி
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வாழ்க்கைத்
துணை
தருண் மஜும்தார்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
முன்னையவர்பிரபோத் பாண்டா
பின்னவர்திலீப் கோசு
தொகுதிமேதினிபூர்
மூலம்: [1]

சந்தியா ராய் (Sandhya Roy) என்பவர் இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1][2] இவர் மேற்கு வங்காளத் திரைப்படத்துறையில் இவரின் பணிக்காக அறியப்பட்டவர். இவர் மூன்று முறை பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதைப் பெற்றவர்/[3] கணதேவதாவுக்காக எனும் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதுகள் கிழக்கு சிறந்த நடிகைக்காக வழங்கப்பட்டது.

ராய் ராஜேன் தரஃப்தாரின் அந்தரிக்ஷா (1957) திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2014-ல், ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் மேதினிபூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினரானார்.[5]

திரைப்படவியல்[தொகு]

  • கங்கா (1960)
  • மாயா மிருகா (1960)
  • கத்தின் மாயா (1961)
  • அர்க்யா அ.கா. கடவுளுக்கு பிரசாதம் (1961)
  • சுபா ட்ரிஸ்டி அல்லது கண்களின் புனித கூட்டம் (1962)
  • ரக்தா பலாஷ் (1962)
  • நவ் திகந்தா அல்லது நியூ ஹொரைசன் (1962)
  • தூப் சாயா அல்லது சூரிய ஒளி மற்றும் நிழல் (1962)
  • பந்தன் (1962)
  • அஸ்லி-நக்லி (1962)
  • பலடக் (1963)
  • பிரண்டிபிலாஸ் (1963)
  • பூஜா கே பூல் (1964)
  • சூர்யா தபா அ.கே. சூரியனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் (1965)
  • ஏக் டுகு பாசா (1965)
  • அந்தரல் ஏ.கே. டிஸ்டன்ஸ் (1965)
  • அலோர் பிபாசா (1965)
  • மோனிஹர் (1966)
  • நடுன் ஜிபன் (1966)
  • பிரஸ்டார் ஸ்வக்ஷர் (1967)
  • டின் அத்யாய் (1968)
  • பாகினி (1968)
  • ரஹ்கிர் (1969)
  • தாது (1969)
  • அபராச்சிதா (1969)
  • ஆரோக்கிய நிகேதன் (1969)
  • ரூபாசி (1970)
  • நிமந்திரன் (1971)
  • ஜானே-அஞ்சனே (1971)
  • குஹேலி (1971)
  • சித்தி (1973)
  • ஸ்ரீமான் பிருத்விராஜ் (1973)
  • அமி சிராஜர் பேகம் (1973)
  • அஷானி சங்கேத் தொலைதூர இடி (1973)
  • தகினி (1974)
  • ஜிபன் கஹினி (1974)
  • புலேஸ்வரி (1974)
  • சன்சார் சீமான்டே (1975)
  • பலங்கா (1975)
  • பாபா தாரக்நாத் (1977)
  • கபிதா (1977)
  • கே துமி (1978)
  • தன்ராஜ் தமாங் (1978)
  • கணதேவதா (1979)
  • நாக்பாஷ் (1980)
  • தாதர் கீர்த்தி (1980)
  • ஷஹர் தேகே டூரே (1981)
  • மேக்முக்தி (1981)
  • கானா பராஹா (1981)
  • கேலர் புடுல் (1981)
  • அமர் கீதி (1983)
  • அக்ரதானி (1983)
  • பத்போலா (1986)
  • பாத்-ஓ-பிரசாத் (1991)
  • நபாப் (1991)
  • சத்ய மித்யா (1992)
  • தேபிபக்ஷா (2004)
  • நபாப் நந்தினி (2007)
  • மா அமர் மா (2009)
  • சோட்டோ பௌ (1988)

விருதுகள்[தொகு]

  • 2013-ல் இந்திய திரைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மேற்கு வங்காளத்தில் வழங்கப்படும் "பங்கா பிபூஷன்" என்ற உயரிய விருதை வென்றார்.
  • பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருது - 1969-ல் டின் அதாய்க்கு சிறந்த துணை நடிகைக்கான விருது.
  • பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருது - 1972-ல் நிமந்திரனுக்காக சிறந்த நடிகைக்கான விருது.
  • பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருது - 1976-ல் சன்சார் சிமண்டே படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான விருது.
  • பிலிம்பேர் விருதுகள் கிழக்கு - 1979-ல் கணதேவதா படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான விருது.
  • 1997-ல் பாரத்நிர்மான் விருது .
  • கலகர் விருதுகள் - 2005-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sandhya Roy movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
  2. "Sandhya Roy reveals why she couldn't reject 'Manojder Adbhut Bari'". The Times of India. 26 September 2018. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
  3. "Sandhya Roy Awards, List Of Awards Won By Sandhya Roy". www.gomolo.com. Archived from the original on 4 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Antariksha (1957) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019.
  5. "West Bengal Lok Sabha Election Results 2014, WB Constituency List". indianballot.com. Archived from the original on 29 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_ராய்&oldid=3929552" இலிருந்து மீள்விக்கப்பட்டது