சந்தியா ரங்கநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தியா ரங்கநாதன்
Sandhiya Ranganathan
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பிறப்பு20 மே 1996
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகால்பந்தாட்டம்

சந்தியா ரங்கநாதன் (Sandhiya Ranganathan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை காற்பந்தாட்ட வீராங்கனையாவார். 1996 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இவர் பிறந்தார்.

இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணிக்காகவும், இந்திய மகளிர் கூட்டிணைவுப்போட்டிகளில் சேது கால் பந்தாட்ட சங்க அணிக்காவும் நடுக்கள வீராங்கனையாக இவர் விளையாடுகிறார்.

பன்னாட்டு அரங்கில்[தொகு]

  1. 2018 ஆம் ஆண்டு எசுப்பானியாவின் வேலன்சியா நகரில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய கோட்டிப் பெண்கள் கால்பந்து போட்டியில் சந்தியா தனது முதல் கோலை அடித்தார்.[1]
  2. 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17 ஆம் நாள் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தனது இரண்டாவது கோலை சந்தியா அடித்தார்.[2]
  3. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியாவை எதிர்த்து விளையாடிய நேபாள அணிக்கு எதிராக சங்கீதா முக்கியமான ஒரு கோலை அடித்தார்.[3][4]

பன்னாட்டு கோல்கள்[தொகு]

இந்திய அணி புள்ளிகளும் முடிவுகளும் .
எண். நாள் இடம் எதிர் அணி புள்ளிகள் முடிவு போட்டி
1. 17 மார்ச்சு 2019 சாகித் ரங்கசலா, பிரத்நகர், நேபாளம் இலங்கை 2–0 5–0 2019 தெற்காசிய பெண்கள் சாம்பியன்
2. 6 ஏப்ரல் 2019 மண்டலார்த்திரி விளையாட்டரங்கம், மண்டலை, மியான்மர் நேபாளம் 2–1 3–1 ஆசிய பெண்கள் கால்பந்து கூட்டமைப்பு ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள்
3. 9 ஏப்ரல் 2019 மண்டலார்த்திரி விளையாட்டரங்கம், மண்டலை மியான்மர் 1–0 3–3 2020 ஆசிய பெண்கள் கால்பந்து கூட்டமைப்பு ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_ரங்கநாதன்&oldid=3831880" இருந்து மீள்விக்கப்பட்டது