சந்தியா மெண்டோன்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தியா மெண்டோன்கா (Sandhya Mendonca) ஓர் இந்திய எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆவார். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் (பெங்களூரு) பிறந்த இவர், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார் மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் பாரதிய வித்யா பவனில் பொது உறவுகளில் பட்டயம் பெற்றுள்ளார். இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

தொழில்[தொகு]

சந்தியா மெண்டோன்கா பத்திரிகையாளராகப் பணியாற்றினார் [1] பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக தனது கணவரும் மூத்த பத்திரிக்கையாளருமான ஆலன் மெண்டோன்கா (1960- 2009), ரைன்ட்ரீ மீடியா, [2] உடன் ஒரு ஊடக நிறுவனத்தை நிறுவுவதில் பங்களித்தார். அதன் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைப் பதிப்பாளராகவும் இருந்தார் .

கருநாடகத்தினைப் பூர்விகமாகக் கொண்ட இவர் , கல்ச்சுரல் ஒடிசி, ராஜ்பவன் பெங்களூர்-துரூ தி ஏஜசு, மார்வலசு ஆஃப் கர்நாடகா அண்ட் மோர் மற்றும் சில புத்தகங்கள் மூலம் கர்நாடக மாநில கலாச்சார வரலாற்றின் ஒரு காலவரிசையாளராகவும் உள்ளார். [3] இவர் 2012 இல் வெளியிடப்பட்ட மார்வெல்ஸ் ஆஃப் மைசூர் & மோரின் இணை ஆசிரியர் ஆவார். இந்த புத்தகத்தை எழுத்தாளர் சசி தேசுபாண்டே, அவுட்லுக்கின் தலைமை ஆசிரியர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் பாராட்டியுள்ளனர். 2015 ஆம் ஆண்டில், மார்வெல்ஸ் ஆஃப் கர்நாடகா & மேலும் [4] கன்னடத்தில் கர்நாடக விஸ்மயகலு (கர்நாடக விஸ்மயங்கள்) என மொழிபெயர்க்கப்பட்டது.

இவருடைய சமீபத்திய புத்தகம் , டிசுரப்ட் அண்ட் கான்குவர்-ஹவ் டிடிகே பிரச்டீஜ் பிகம் அ பில்லியன் டால்ர் கம்பெனி என்பதனை [5] திரு டிடி ஜகன்நாதனுடன் (தலைவர் டி.டி.கே. குழு) இணைந்து எழுதியுள்ளார் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இதனை 2018 ஆம் ஆண்டில் வெளியிட்டது. ரேண்டம் ஹவுஸ் இவரது முந்தைய புத்தகமான ரீவா எலக்ட்ரிக் கார் ரேவா ஈவி - இந்தியாவின் கிரீன் கிஃப்ட் டு தி வேர்ல்ட் (டாக்டர் எஸ்.கே. மைனியுடன் இணைந்து எழுதியது), 2013 இல் வெளியிட்டது. [6]

கலை[தொகு]

மென்டோன்கா ஒரு தொழில்முறைஞர் அல்லாத நடிகர் ஆவார். இவர் சிறுவர் பாலியல் துன்புறுத்தலை அடிப்படையாகக் கொண்ட சேடோசு ஆன் தி வால் மற்றும் விஜய் நாயர் எழுதி இயக்கிய நாடகத்தில் நடித்துள்ளார், மற்றும் பாய்லே செங்குப்தா எழுதிய கோல்ஃப் ஸ்லைஸ்ட் பால்ஸ் பற்றிய நகைச்சுவை நாடகத்திலும் நடித்துள்ளார். பெங்களூரு லிட்டில் தியேட்டரின் மூத்த இயக்குனர் விஜய் படகி இயக்கிய ராபியின் கார்டன் [7] படத்தில் இவர் சமீபத்தில் நடித்தார்.

2009 ஆம் ஆண்டில், மெண்டோன்கா தனது கணவர், அண்டர் தி ரைண்ட்ரீயின் நினைவாக ஒரு முறைசாரா முயற்சியைத் தொடங்கினார், [8] இது நாடக வாசிப்புகள், கலை தொடர்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

சந்தியா மெண்டோன்காவுக்கு நவம்பர் 2015 இல் தரமான பத்திரிகை மற்றும் மனிதாபிமான அக்கறைக்காக இந்தியா வளர்ச்சி அறக்கட்டளையின் "தேச சிநேகி விருது" வழங்கப்பட்டது.

பிப்ரவரி 2016 இல் தேசிய ஒற்றுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த பங்களிப்பிற்காக உலகளாவிய சாதனையாளர் அறக்கட்டளை விருதைப் பெற்றார்.

பொறியியல் நிறுவனம், கர்நாடக மாநில மையம், மார்ச் 2016 இல் சமுதாயத்திற்கான பெண் சேவைக்காக இவரைப் பாராட்டியது. [9]

மே 2016 இல் ISBR, ELCIA & PRCI இலிருந்து தொழில்முறை சிறப்பின் மூலம் வெற்றியை அடைந்ததற்காக ஷ்ரம சாதனா ஷைனிங் ஸ்டார் விருதைப் பெற்றார்.

கார்டன் சிட்டி பல்கலைக்கழகம் 2019 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று இவளை ஊக்கமளிக்கும் பெண்ணாக கவுரவித்தது.

சான்றுகள்[தொகு]

  1. "Checking out election campaigning at Ulsoor Lake -" (10 April 2014).
  2. "Female Entrepreneur: Sandhya Mendonca – MD & Editor in Chief of Raintree Media - WeAreTheCity India - Events, Network, Advice for Women in India" (14 November 2014).
  3. "Snapshots of a Historic State".
  4. "'Marvels of Karnataka' Released".
  5. "Disrupt and Conquer - Buy Disrupt and Conquer Online at Best Prices in India - Flipkart.com" (en).
  6. "Sandhya Mendonca unveils the story of Reva".
  7. "Series of comedies - Bangalore Mirror -". Bangalore Mirror. http://bangaloremirror.indiatimes.com/entertainment/lounge/series-of-comedies/articleshow/60451987.cms. 
  8. "Under the Raintree: Teased by teen taal, held in trance by Bhairavi".
  9. "Archived copy". மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_மெண்டோன்கா&oldid=3287609" இருந்து மீள்விக்கப்பட்டது