சந்தியா தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022-ல் நாரி சக்தி விருது வென்ற பிறகு தர்

சந்தியா தார் (Sandhya Dhar)(பிறப்பு 1980) என்பவர் இந்திய ஊனமுற்றோர் உரிமை இயக்க ஆர்வலர். சிறுவயதிலேயே பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக 2015-ல் ஜம்மு பொதுக் கல்வி மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தை நிறுவினார். தார் 2020-ல் நாரி சக்தி விருது பெற்றார்.

தொழில்[தொகு]

சந்தியா தார் 1980ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகரில் பிறந்தார். சில மாதங்களில் இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இது பக்கவாதத்திற்கு வழிவகுத்தது மற்றும் இவருக்குப் பெருமூளை வாதம் இருப்பது கண்டறியப்பட்டது.[1] இவருடைய பெற்றோர்கள் இவரைக் கவனிப்பதில் முன்னுரிமை அளித்தனர். மேலும் இவர் இரண்டு ஆண்டுகளாக புது தில்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா உடல் ஊனமுற்றோருக்கான நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டார். ஐந்து வயதில், இவர் உள்ளூர் பள்ளிக்குச் சென்றார். பின்னர் இவரது குடும்பம் ஜம்முவுக்கு குடிபெயர்ந்தது. இங்குப் பராமரிப்பு வசதிகள் சிறப்பாக இருந்தன. இவர் ஆதர்ஷ் ஷிக்ஷா நிகேதன் பள்ளியிலும் பின்னர் எம். தாசு பள்ளியிலும் பயின்றார்.[1] இவர் தனது கல்வியை ஜம்மு அரசு பட்டப்படிப்பு கல்லூரி அணிவகுப்பு மைதானத்தில் தொடர்ந்தார், இளங்கலை வணிகவியல், முதுகலை வணிகவியல், கணினி அறிவியலில் பட்டயம் மற்றும் முதுகலை வணிக நிர்வாக ஆகியவற்றைப் படித்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் அரசின் நிதித்துறையில் பணியாற்றினார்.[1] தர் போசியா விளையாடுகிறார். 2022-ல், போசியா தேசிய வாகையாளர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2]

தார் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்.[3] இவர் ஒரு ஊனமுற்றோர் உரிமை இயக்க ஆர்வலரானார். 2015-ல் ஜம்மு பொதுக் கல்வி மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தை நிறுவினார். இது ஊனமுற்றவர்களை ஆதரிக்கிறது மற்றும் ஊனமுற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் பாடங்களை வழங்குகிறது.[4] 2022-ல், இந்த அமைப்பு 400க்கும் மேற்பட்ட ஊனமுற்ற குழந்தைகளுக்கு ஆதரவளித்தது.[5]

விருது[தொகு]

2022ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து 2020ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதைப் பெற்றார்.[4] ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, 2022-ல், தார், நசிரா அக்தர் மற்றும் நசிமான் அசரப் ஆகியோருடன் இணைந்து, இப்பகுதியில் உள்ள பெண்களின் மேம்பாட்டில் உத்வேகம் அளித்ததாகக் கூறினார்.[6]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_தார்&oldid=3708578" இலிருந்து மீள்விக்கப்பட்டது