உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திபஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்திப்பஸ்சின் பெயர் எழுதப்பட்டுள்ள ஆஸ்ட்ராகான் (கிமு 484)

சந்திப்பஸ் (Xanthippus, கிரேக்கம் : கிரேக்கம்: Ξάνθιππος‎, c. கிமு 525-475) என்பவர் கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த ஒரு பணக்கார ஏதெனிய அரசியல்வாதி மற்றும் தளபதி ஆவார். இவரது பெயருக்கு "மஞ்சள் குதிரை" என்று பொருளாகும். [1] இவர் அரிஃப்ரோனின் மகன் மற்றும் பெரிகிள்சின் தந்தையாவார். [2] இவர் பெரும்பாலும் அல்க்மேயோனட் குலத்துடன் தொடர்புடையவர். இவர் அல்க்மேயோனிடேக்கு பிறக்கவில்லை என்றாலும், இவர் கிளீசுத்தீசின் மருமகள் அகாரிஸ்ட்டை மணந்து அவர் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். மேலும் அரசு நிர்வாகத்தில் அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் ஏதெனியன் அரசியல் அரங்கில் பிரபுத்துவச் சார்பை ஆதரித்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். தெமிஸ்டோக்கிள்ளீசுடனான இவரது போட்டி இவரை ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்துதல்) செய்ய வழிவகுத்தது. பாரசீகர்கள் கிரேக்கத்தை ஆக்கிரமித்தபோது நாடுகடத்தப்பட்டதிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார். கிரேக்க பாரசீகப் போர்களின் போது கிரேக்கர்களின் வெற்றிக்கும் ஏதெனியப் பேரரசின் அடுத்தடுத்த எழுச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து இவர் புகழ்பெற்றார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Sacks, Murray (2009) Encyclopedia of the Ancient Greek World, Infobase Publishing, p.370
  2. Smith, Dictionary of Greek and Roman Biography and Mythology, v. 3, page 191

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திபஸ்&oldid=3404248" இலிருந்து மீள்விக்கப்பட்டது