சந்தாளி விக்கிப்பீடியா
வலைத்தள வகை | இணையதள கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | சந்தாளி மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | கட்டாயமல்ல |
உள்ளடக்க உரிமம் | பொது உரிமம் |
உரலி | sat |
சந்தாளி விக்கிப்பீடியா (Santali Wikipedia) என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் சந்தாளி மொழி பதிப்பாகும். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சந்தாளி விக்கிப்பீடியா செயல்படுகிறது. இடம் வலமாக எழுதப்படும் சந்தாளி மொழி எழுத்துக்களே சந்தாளி விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படுகின்றன. 7.5 மில்லியன் வரையிலான மக்களால் பேசப்படும் ஓர் ஆசுத்ரோ-ஆசிய மொழியின் முண்டா மொழிகளுள் ஒன்று சந்தாளி மொழியாகும். வங்கதேசம், இந்தியா, பூட்டான், நேபாளம் போன்ற தெற்காசிய மக்களால் இம்மொழி பேசப்படுகிறது.
வரலாறு
[தொகு]சந்தாளி மொழி விக்கிப்பீடியாவை உருவாக்கும் செயல்முறை 2012 ஆம் ஆண்டு தொடங்கியது. [1] இம்மொழி விக்கிப்பீடியாவிற்காக வங்கதேச விக்கிப்பீடியா இவ்வாண்டில் விக்கிப்பீடியா சந்திப்பு மற்றும் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்தது. வங்காளதேசத்தின் தினாச்பூர் மாவட்டத்தில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு இத்திட்டம் வேகம் பெற்றது.[2] சந்தாளி விக்கிப்பீடியாவின் முன்னேற்றம் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுடன் சிலகாலம் தடுமாற்றம் கண்டது.
பின்னர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வங்கதேச விக்கிமீடியா டாக்கா நகரில் மீண்டும் ஒரு சந்தாளி மொழி விக்கிப்பீடியா சமூகத்துடன் மீண்டும் ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. கூட்டத்தில் சந்தாளி மொழி விக்கிப்பீடியாவை தொடங்குவதை விரைவுபடுத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இந்த விவாதத்தைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 அன்று சந்தாளி மொழி சமூகத்திற்காக வங்கதேசத்தின் டாக்கா நகரில் வங்கதேச விக்கிமீடியா ஒரு பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்தது. இந்தியாவில் இருந்தும் சந்தாளி மொழி சமூககத்தினர் நிகழ்நேர கலந்துரையாடல் மூலம் இப்பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சந்தாளி மொழி சமூகத்திற்காக ஒடிசாவில் மேலும் ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. ஒடிய விக்கிமீடியன் பயனர் குழுமத்தின் ஆதரவுடன் 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11 அன்று இப்பட்டறை நடத்தப்பட்டது.
பல மாத வேலைகளுக்குப் பிறகு விக்கிமீடியா மொழிக் குழு 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 அன்று சந்தாளி மொழி விக்கிப்பீடியாவுக்கு ஒப்புதல் அளித்தது. சந்தாளி விக்கிப்பீடியா தளம் இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் இரண்டாம் நாளில் தொடங்கப்பட்டது.
பயனர்களும் தொகுப்பவர்களும்
[தொகு]பயனர் கணக்குகள் | கட்டுரைகள் | கோப்புகள் | நிர்வாகிகள் |
---|---|---|---|
8667 | 11823 | 0 | 3 |
காட்சிக்கூடம்
[தொகு]-
வங்கதேசத்தில் முதல் பயிற்சிப் பட்டறை (2012).
-
வங்கதேசத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தாளி விக்கிப்பீடியா சமூகத்தின் பயிற்சிப் பட்டறை.
-
இந்தியாவில் முதலாவது சந்தாளி மொழி விக்கிப்பீடியா பட்டறை (2018)
-
2020 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற பட்டறை (2020)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tanvi, Patel (10 August 2018). "This Tribal Language Just Became India's First to Have Wikipedia Edition in Own Script!". The Better India.
- ↑ "Santhali becomes India's first tribal language to get own Wikipedia edition". 9 August 2018.