சந்தர்கோட்
சந்தர்கோட் | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 33°11′20″N 75°18′09″E / 33.1889°N 75.3024°E | |
| நாடு | |
| மாவட்டம் | இராம்பன் மாவட்டம் |
| மொழிகள் | |
| அஞ்சல் சுட்டு எண் | 182148 |
| இணையதளம் | ramban |
சந்தர்கோட் (Chanderkot), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள இராம்பன் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி ஆகும். சந்தர்கோட் கிராமம் இராம்பன் மாவட்டத் தலைமையிடமான இராம்நகரத்திற்கு தென்கிழக்கே 42.6 கிலோமீட்டர் தொலைவிலும், ஜம்முவிற்கு வடகிழக்கே 110 கிலோமீட்டர் தொலைவிலும்; சிறிநகருக்கு தென்கிழக்கே 137 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
புவியியல்
[தொகு]பிர் பாஞ்சல் மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 1,156 மீட்டர் உயரத்தில் சந்தர்கோட் கிராமம் உள்ளது. இது செனாப் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 255 குடியிருப்புகள் கொண்ட சந்தர்கோட் கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 1501 ஆகும். அதில் 872 ஆண்கள் மற்றும் 629 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.46% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 721 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.08% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முறையே 65 மற்றும் 307 ஆக உள்ளனர்.[3]
கல்வி
[தொகு]- அரசு உயர்நிலைப் பள்ளி, சந்தர்கோட்
- அரசு மேனிலைப் பள்ளி[4]
- அரசு கஸ்துரிபாய் காந்தி மகளிர் வித்தியாலயம்
இதனையும் காண்க
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]சந்தர்கோட் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 இராம்பன், சிறிநகர் மற்றும் ஜம்மு நகரங்களை இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. Retrieved 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ Chander Kote Population - Ramban, Jammu and Kashmir
- ↑ "Govt. HS Chanderkote - Chanderkote, District Ramban (Jammu And Kashmir)". schools.org.in (in ஆங்கிலம்). Retrieved 2022-01-22.