சந்தன் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தன் குமார்
பிறப்புசந்தன் குமார்
11 செப்டம்பர் 1985 (1985-09-11) (அகவை 38).[1]
மைசூர்
மற்ற பெயர்கள்சந்த்ரு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது வரை

' சந்தன்' என்று அறியப்படும் சந்தன் குமார் (Chandan Kumar) என்பவர் கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஒரு நடிகர் ஆவார். தொலைக்காட்சித் தொடரான ராதா கல்யாணா, லட்சுமி பரம்மா ஆகியவற்றில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார். அந்த நேரத்தில், இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன, அதற்காக இவர் தொடரிலிருந்து இடையில் வெளியேற வேண்டியிருந்தது.[2] இவரது முதல் படம் 2014 ஆம் ஆண்டில் வெளியான பரினாயா ஆகும். அது தயாரிப்பில் இருந்து வெளியாக இரண்டு ஆண்டுகள் ஆனது. அதைத் தொடர்ந்து, இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய பல நாயகர்கள் நடித்த படமான லவ் யு ஆலியா (2015) வரை சில குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு இவர் ஸ்டார் ஸ்வர்னா தொலைக்காட்சியில் நெடுந் தொடரான சர்வமங்கலா மங்கலே தொடரில் மகாசங்கரரின் வழியை தீவிரமாக பின்பற்றுபவராகவும், சிவபெருமானின் பக்தராகவும் நடிக்கிறார்.

தொடர்கள், படங்களைத் தவிர, உண்மை நிலை நிகழ்ச்சிகளான பியேட் மண்டி கதிகே பந்துரு, "டான்சிங் ஸ்டார்ஸ் பருவம் 1" மற்றும் பிக் பாஸ் கன்னடம் 3 போன்றவற்றில் சந்தன் போட்டியாளராக போட்டியிட்டுள்ளார்.[3]

திரைப்படவியல்[தொகு]

குறியீடு
Films that have not yet been released இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள் மேற்கோள்கள்
2011 லைஃபு இஷ்டேன் சந்தன் கன்னடம் துணை வேடம்
2014 பரிணயா பிரீதம் முன்னணி பாத்திரத்தில் அறிமுகம்
2015 கட்டே சாண்டு
2015 எரடோண்ட்லா மூரு பிரேம்
2015 லவ் யு ஆலியா கிரண் கன்னடம் / இந்தி / தெலுங்கு
2015 பெங்களூர் 560023 சாண்டு கன்னடம்
2018 பிரேமா பராஹா சஞ்சய் கன்னடம்
சொல்லிவிடவா தமிழ்

குறிப்புகள்[தொகு]

  1. https://timesofindia.indiatimes.com/topic/Chandan-Kumar
  2. "Who will replace Chandan in Lakshmi Baramma?". The Times of India. 16 December 2014.
  3. "Chandan Kumar Bigg Boss Kannada 3 Contestant". Youngster Choice.com. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 30 October 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன்_குமார்&oldid=3505920" இலிருந்து மீள்விக்கப்பட்டது