சந்தனி பெர்னாண்டோ
சந்தனி பெர்னாண்டோ | |
|---|---|
| සඳනි ප්රනාන්දු | |
| தாய்மொழியில் பெயர் | සඳනි ප්රනාන්දු |
| பிறப்பு | வர்ணகுலசூரிய சந்தனி மால்சா பெர்னாண்டோ செப்டம்பர் 7, 1998 |
| கல்வி | நீர்கொழும்பு தெற்கு சர்வதேச பாடசாலை |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2017 முதல் தற்போது வரை |
| தாய் | ஜோகான் ஹேமாலி பெர்னாண்டோ |
| உறவினர்கள் | திலின பெர்னாண்டோ (சகோதரி) |
சந்தனி பெர்னாண்டோ (Sandani Fernando, பிறப்பு: 7 செப்டம்பர் 1998), இலங்கைத் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சியில் நடிகை ஆவார்.[1] ஒரு வடிவழகியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சந்தானி, பின்னர் பிரபலமான தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவரானார். 'ராசுமி' பாத்திரத்தின் மூலமும்[2] மற்றும் அக்னி பியபத் தொடரில் 'மாதவி' பாத்திரத்தின் மூலமும்[3]பிரபலமான தொலைக்காட்சி தொடரான காரா கோட்டியாவில் நடித்துள்ளாா்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சந்தனி தனது கல்வியை நீர்கொழும்பு தெற்கு சர்வதேசப் பள்ளியில் முடித்து, ஏ/எல் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.[4][5][6]
தொழில் வாழ்க்கை
[தொகு]காரா கோட்டியா தொலைக்காட்சித் தொடர் தொடங்கி சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, இவர் 'இம்பாசு நடிப்பு மற்றும் நிகழ்த்து கலைகள்' நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சி பெறச் சென்றார். 2018ஆம் ஆண்டில், சிரசா சூப்பர்ஸ்டார் சீசன் 6 வெற்றியாளர் பியத் ராஜபக்ச பாடிய பிரியாவீ என்ற பாடலில் இவர் தனது முதல் இசைக் காணொளியில் தோன்றினார்.[6][7] இந்தத் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் 2018ஆம் ஆண்டில் கோட்டிபத்தியோ என்ற தலைப்பில் வெளியான தொடரின் இரண்டாவது சீசனில் ஒரு தொடர் பாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] இதே ஆண்டில், இலங்கையின் முதல் அறிவியல் புனைகதை நகைச்சுவை மெகா தொலைக்காட்சித் தொடரான துத்திரியில் இவர் நடித்தார்.[9][10] இந்தத் தொடரில் "டியா" என்ற வேற்றுக்கிரகவாசியின் துணைப் பாத்திரத்தில் இவர் நடித்தார். இவர் 'கிரு மெகா ஸ்டார்ஸ்' என்ற உண்மை நிலவரப் போட்டியிலும் பங்கேற்றார்.[11]
2017ஆம் ஆண்டில், நிரோஷா விராஜினி பாடிய "யாலி ஹமுவேமு" மற்றும் இராஜ் வீரரத்ன பாடிய "சாவி" ஆகிய பாடல்களின் இசை காணொளிக்களில் இவர் தோன்றினார். 2018ஆம் ஆண்டில், அருணா ஜெயவர்தன இயக்கிய 1970 லவ் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் இவர் தனது முதல் திரைப்பட அறிமுகத்தை மேற்கொண்டார்.[12] இந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 2019ஆம் ஆண்டில், இவர் குற்றச்செயல்பாடுகள் தொடா்பான மற்றும் கிரு அவிடின் ஆகிய இரண்டு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார்.[13] பின்னர் 2020ஆம் ஆண்டில், ஜெயபிரகாசு சிவகுருநாதனால் இயக்கப்பட்டு, சத்தா மங்கள சூரியபண்டாரவால் எழுதப்பட்ட அக்னி பியபத் தொடரின் நடிகர்களுடன் நடித்தார்.[14] இந்தத் தொடரில், சாரங்க திசசேகர மற்றும் சாலனி தாரகா ஆகியோருக்கு ஜோடியாக, மனுரங்கனின் மனைவியான 'மாதவி' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானி நடித்தார்.[15][16][17] இந்தத் தொடர் பின்னர் பிரபலமடைந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. 2019ஆம் ஆண்டில் இவர் தனித் சிறீயின் பண்டமா பாடலில் நடித்தார். இந்தக் காணொளி பின்னர் சுமதி விருதுகளில் சிறந்த இசை காணொளிக்கான விருதை வென்றது.[18]
நடிப்பைத் தவிர, இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் உள்ளார், தற்போது சுவர்ணவாகினியில் ஒளிபரப்பப்படும் கண்டா ராடி பேயா என்ற இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sandani Ferndno's way of thinking about fashion ... My Fashion". Divaina. Retrieved 2021-01-10.
- ↑ "Chat with Sandani Fernando". sinhala.lakvahini. Retrieved 2021-01-11.
- ↑ "I do not like to show-off: Sandani Fernando". Aruna. Retrieved 2021-02-09.
- ↑ "Before coming to the field I was a girlfriend. Evil is an advantage to me: Sandani Fernando". Sarasaviya. Retrieved 2021-01-11.
- ↑ "When I was a child, I used to struggle - Sandani". ceylonnewsgraph. Retrieved 2021-01-11. [தொடர்பிழந்த இணைப்பு]
- 1 2 "Looking at Iraj's past work, I was scared at first while talking to the song: Sandani Fernando". webgossip. Retrieved 2021-01-11.
- ↑ "Where Sandani's mind runs as soon as she gets a chance. - Sandani Fernando". starfriends. Retrieved 2021-01-11.
- ↑ "The fan accepts different things". Dinamina. Archived from the original on 2018-08-15. Retrieved 2021-01-11.
- ↑ ""Thuththiri" New Sinhala Mega Teledrama To Make Way To Small Screen Soon". Asianmirror. 24 Nov 2017. Archived from the original on 1 December 2017. Retrieved 24 Nov 2017.
- ↑ "A family that is aligned to be one family". Sarasaviya (in Sinhala). 5 Oct 2017. Retrieved 5 Oct 2017.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Sandani in Mega Stars". saaravita. Retrieved 2021-01-11.
- ↑ "1970 Love Story to the present". channely. Retrieved 2021-01-11.
- ↑ "Crime scene on TV". Sarasaviya. Retrieved 2021-01-11.
- ↑ "I don't write characters for actors, I do create characters for actors: Saddha Mangala". Mawbima. Retrieved 2021-02-09.
- ↑ "Love story started secretly by Sandani Fernando". mawratanews. Archived from the original on 2020-09-27. Retrieved 2021-02-09.
- ↑ "Agni Piyapth at a new time". Sarasaviya. Retrieved 2021-01-11.
- ↑ "Agni Piyapath". IMDb. Retrieved 2021-02-09.
- ↑ "Now I'm a mother: Sandani speaks about Agni Piyapath". Mawbima. Retrieved 2021-02-09.
- ↑ "I'm not innocent - an honest character who doesn't talk much: Sandani Fernando". naifmvlog. Retrieved 2021-01-10. [தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சந்தனி பெர்னாண்டோ
- Sandani Fernando on YouTube
- Sandani Fernando on Instagram
- Sandani Fernando on Twitter
- Sandani Fernando on Facebook