சத்ரியமண்டலா அருங்காட்சியகம், தெற்கு ஜகார்த்தா
நிறுவப்பட்டது | 5 அக்டோபர் 1972 |
---|---|
அமைவிடம் | தெற்கு ஜகார்த்தா, இந்தோனேசியா |
வகை | ராணுவ அருங்காட்சியகம் |
வருனர்களின் எண்ணிக்கை | சராசரியாக 48,000 பார்வையாளர்கள் |
சத்ரியமண்டலா அருங்காட்சியகம் (Satriamandala Museum), இந்தோனேசிய ஆயுதப் படைகளுக்கான முக்கிய அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் இந்தோனேசியாவில் தெற்கு ஜகார்த்தாவில் 5.6 எக்டேர்கள் (14 ஏக்கர்கள்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 5 அக்டோபர் 1972 ஆம் நாளன்று திறக்கப்பட்டதாகும். இங்கு ஏராளமான கலைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் சத்ரியா மண்டலா அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது,
விளக்கம்
[தொகு]இந்த அருங்காட்சியகம் தெற்கு ஜகார்த்தாவின் மாம்பாங்கில் மேற்கு குனிங்கனில் உள்ள கட்டோட் சோப்ரோடோ தெருவில் 5.6 எக்டேர்கள் (14 ஏக்கர்கள்) நிலப் பரப்பில் அமைந்துள்ளது; [1] [2] [3] இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் மூன்று கட்டிடங்கள் மற்றும் மைதானம் ஆகிய இடங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. [4] இது இந்தோனேசியாவின் முக்கிய இராணுவ அருங்காட்சியகமாகும். [2] சத்ரியா மண்டலா என்ற பெயர் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது ஆகும். இது "மாவீரர்களுக்கு ஒரு புனித இடம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [2] இந்த அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் வரலாற்றை ஆய்வு செய்யும் நபர்களுக்கான ஆவணக் காப்பகங்களைக் கொண்டு இது அமைந்துள்ளது. [1]
வரலாறு
[தொகு]1968 ஆம் ஆண்டிற்குப் பிறகு, [5] இந்தோனேசிய ஆயுதப் படைகளின் வரலாற்றுக் கிளையின் தலைவரான நுக்ரோஹோ நோடோசுசாண்டோ, இந்தோனேசியாவின் வளர்ச்சியில் இராணுவத்தின் பங்கைக் காட்டுவதற்காக ஒரு நவீன அருங்காட்சியகத்தை உருவாக்கினார். யோகியாகர்த்த போர் அருங்காட்சியகம் உள்ளிட்ட அப்போது இருந்த அருங்காட்சியகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தன. மேலும் சரியான அறிக்கையிலான இலக்குகளைக் கொண்டு அமைந்திருக்கவில்லை.[4] [6] இராணுவத்தின் ஒன்றுபட்ட பங்கினை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் அப்போது இல்லை. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அருங்காட்சியகங்கள் மட்டுமே இயங்கிவந்தன. [5] கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய போர் நினைவுச்சின்னம் மற்றும் மெக்ஸிகோ நகரில் உள்ள மியூசியோ நேஷனல் டி ஹிஸ்டோரியா ஆகிய அருங்காட்சியகங்களின் பாணியில் அவற்றையொட்டி இந்த அருங்காட்சியகத்தை நோட்டோசுசாண்டோ வடிவமைத்தார். [4]
முதலில், இராணுவமானது போகோரில் உள்ள ஜனாதிபதி மாளிகையைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி சுஹார்ட்டோவிடம் கேட்டுக் கொண்டது. இந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக 1960 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சுகர்னோவின் ஜப்பானிய மனைவி ரத்னா தேவி சாரிக்கு ஒரு வீடாக கட்டப்பட்ட விஸ்மா யாசோவைப் பயன்படுத்தும்படி அவர்களிடம் கூறப்பட்டது; [4] இந்த கட்டிடம் ஜப்பானிய பாணியைக் கொண்டிருந்தது . [5] அந்த வீடானது பின்னர் 15 நவம்பர் 1971 ஆம் நாள் முதல் அருங்காட்சியக வடிவத்தினைப் பெற ஆரம்பித்தது. 1979 ஆம் ஆண்டு வரை வளர்ச்சி இருந்தபோதிலும் இந்த அருங்காட்சியகம் 5 அக்டோபர் 1972 ஆம் நாளான, இராணுவ நாளில், முறையாக ஜனாதிபதி சுஹார்டோ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. [2] [4] அது திறந்து வைக்கப்பட்ட நாளன்று அந்த அருங்காட்சியகத்தில் 20 டியோராமாக்கள் எனப்படுகின்ற ஒருவகையான காட்சிப்பேழைகள் இருந்தன. [5]
ஒரு கூடுதல் அருங்காட்சியகமாக வாஸ்பாடா புர்பாவிசேசா( "நித்திய கண்காணிப்புத்துறை அருங்காட்சியகம்") என்ற அருங்காட்சியகம் [7] 1987 ஆம் ஆண்டில் அவ்விடத்தில் கட்டப்பட்டது. [8]
ஜனவரி 2010 ஆம் நாளன்று சத்ரியமண்டலா இந்தோனேசியாவின் பண்பாட்டு சொத்தாக அறிவிக்கப்பட்டது. [3] இங்கு 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரைக்கு இடைப்பட்ட நாள்களில் சராசரியாக 48,000 பார்வையாளர்கள் வந்தனர். [9]
காட்சிப்பொருள்கள்
[தொகு]இந்தோனேசியாவின் இராணுவ வரலாறு குறித்த ஏராளமான கலைப்பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [2] [1] அருகிலுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கூர்மையான மூங்கில் குச்சிகள் மற்றும் 1940 கள் மற்றும் அதற்குப் பிறகான பிற ஆயுதங்கள் உள்ளன. [1] அருகில் மாவீரர்களின் மண்டபம் உள்ளது. அங்கு இந்தோனேஷிய நாட்டு மாவீரர்களின் சிலைகள் உள்ளன. [10]
சுதந்திரத்திற்கு முந்தைய கிளர்ச்சிகளை விளக்குகின்ற 75 காட்சிப்பேழைகள் உள்ளன, சுதந்திரம் பிரகடனத்திற்கு வழிவகுத்த முக்கியமான நேரங்கள், தேசிய புரட்சி மற்றும் புரட்சிக்குப் பின்னரான இராணுவ முயற்சிகள் ஆகியவை அங்கு உள்ளன. [3] இந்த டியோராமாக்கள் எனப்படுகின்ற காட்சிப்பேழைகள் யோககர்த்தாவைச் சேர்ந்த கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டன. [4] [1] கட்டிடத்தில் மேலும் புகைப்படங்கள் உள்ளன. [10]
இது பலவிதமான போர் இயந்திரங்கள் உள்ளன. [2] மற்றும் நில இயந்திரங்களான டாங்கிகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் சுதிர்மனுக்கு சொந்தமான வில்லிஸ் எம்பி உள்ளிட்டவை உள்ளன. [11]
வாஸ்படா புர்பாவிசா எனப்படுகின்ற ஐந்து அடுக்கு பென்டகன் வடிவ அருங்காட்சியகத்தில் [1] , பல விதமான டியோராமாக்கள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. [5]
குறிப்பிடத்தக்க காட்சிப்பொருள்கள்
[தொகு]- சுகர்னோவின் கையெழுத்தில் இந்தோனேசிய சுதந்திரப் பிரகடனத்தின் வரைவு [11]
- ஜெனரல் சுதிர்மன் தனது ஏழு மாதங்களில் கொரில்லாவாக எடுத்துச் செல்லப்பட்ட லிட்டர் என்ற பல்லக்கு வாகனம்[1]
- இந்தோனேசிய அரசாங்கத்தின் முதல் ஜனாதிபதி விமானமாக பின்னர் மாற்றம் பெற்ற டக்ளஸ் சி -47 டகோட்டா ஆர்.ஐ.சீலாவா 1
- ஆபரேஷன் திரிகோராவின் போது பயன்படுத்தப்பட்ட சோவியத் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள்
- A-4E ஸ்கைஹாக் TT-0438.[12] சோவியத் தயாரித்த விமானங்களுக்கு மாற்றாக இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- அடிக்குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Dimyati 2010.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Jakarta City Government, Satria Mandala, Museum.
- ↑ 3.0 3.1 3.2 Jakarta City Government, Museum TNI Satria Mandala.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Tempo 2012, Tidak Sekadar Buat Makan.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 McGregor 2007.
- ↑ Adam & Anwar 2005.
- ↑ McGregor 2007, ப. 6–10.
- ↑ McGregor 2007, ப. 182-186.
- ↑ BAPPENAS, Jumlah Pengujung Museum.
- ↑ 10.0 10.1 Kuhnt-Saptodewo, Grabowsky & Großheim 1997.
- ↑ 11.0 11.1 Pertiwi and Asdhiana 2012, Melongok ke Museum.
- ↑ https://aviahistoria.com/2018/04/10/douglas-a-4e-skyhawk-tt-0438-museum-satria-mandala/amp/
- நூற்பட்டியல்
- "Jumlah Pengujung Museum di Indonesia" [Number of Visitors to Museums in Indonesia] (PDF) (in Indonesian). Ministry of Culture, Tourism, Youth, and Sports. Archived from the original (PDF) on 21 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - "Museum TNI Satria Mandala" (in Indonesian). Jakarta City Government. 13 January 2010. Archived from the original on 21 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - "Satria Mandala, Museum". Encyclopedia of Jakarta (in Indonesian). Jakarta City Government. Archived from the original on 21 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)