உள்ளடக்கத்துக்குச் செல்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்
छत्रपती शिवाजी महाराज वस्तुसंग्रहालय
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் is located in Mumbai
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்
Location in Mumbai
நிறுவப்பட்டதுசனவரி 10, 1922 (1922-01-10)
அமைவிடம்கோட்டை, மும்பை, இந்தியா
ஆள்கூற்று18°55′36″N 72°49′56″E / 18.926667°N 72.832222°E / 18.926667; 72.832222
சேகரிப்பு அளவுதோராயமாக 50,000 கலைப்பொருள்கள்[1]
இயக்குனர்சப்யசாட்சி முகர்ஜி
வலைத்தளம்Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya, Mumbai

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் (Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya) மன்னர் சிவாஜி அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் மேற்கு இந்தியாவின் வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம் என்று பெயர் சூட்டப்பட்டது, இது மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள முக்கிய அருங்காட்சியகமாகும்.[2] அந்த நேரத்தில் வேல்ஸ் இளவரசராக இருந்த ஐந்தாம் ஜார்ஜ் வருகையை நினைவுகூரும் வகையில், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் மும்பையின் முக்கிய குடிமக்களால், அரசாங்கத்தின் உதவியுடன் நிறுவப்பட்டது. இது தெற்கு மும்பையில் இந்தியாவின் நுழைவாயில் அருகே அமைந்துள்ளது. மராட்டிய பேரரசின் நிறுவனர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் பெயரால் இதற்கு 1998 ஆம் ஆண்டில் என்று மறுபெயர் சூட்டப்பட்டது.

முகலாய, மராத்தா மற்றும் சமண போன்ற கட்டிடக்கலை பாணிகளின் கூறுகளை உள்ளடக்கிய இந்த கட்டிடம் இந்தோ-சரசெனிக் கட்டிடக்கலையில் அமைந்ததாகும். அருங்காட்சியக கட்டிடத்தைச் சுற்றி பனை மரங்கள் மற்றும் அருமையான மலர் படுக்கைகள் கொண்ட ஒரு தோட்டம் அமைந்துள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய இந்திய வரலாற்றினை வெளிப்படுத்துகின்ற சுமார் 50,000 காட்சிப்பொருள்கள் உள்ளன. மேலும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கலைப்பொருட்களும் இங்கு உள்ளன. அவை முதன்மையாக கலை, தொல்லியல் மற்றும் இயற்கை வரலாறு என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிக கலைப்பொருட்கள் மற்றும் பண்டைய இந்தியாவின் அரச மரபினர்களான குப்தாக்கள், மராட்டியர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள் ஆகியோர் தொடர்பான பொருள்களும் உள்ளன.[3]

வரலாறு

[தொகு]
அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் சிவாஜியின் படம்

1904 ஆம் ஆண்டில், பம்பாயைச் சேர்ந்த சில முன்னணி குடிமக்கள் வேல்ஸ் இளவரசர் மற்றும் எதிர்கால மன்னர் ஜார்ஜ் அவர்களின் வருகையை நினைவுகூரும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் 14 ஆகஸ்ட் 1905 ஆம் நாளன்று குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது:

வேல்ஸ் இளவரசரின் சிலை

பெரிய பெருநகரமான பம்பாய் நகரில் பெரிய கட்டடங்களை அமைக்கின்ற சீரிய நோக்கில் பிரித்தானிய அரசானது இந்த கட்டடத்தை மிகவும் ஆடம்பரமாக அமைத்தது. உள்ளூர் கட்டிடக்கலைகளின் சிறந்த பாணியைக் கருத்தில் கொண்டு, பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவற்றில், பம்பாய் உயர்நீதிமன்ற கட்டிடம், பின்னர், இந்தியாவின் நுழைவாயில் ஆக மாற்றம் பெற்ற கட்டிடங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

சிலையின் இரண்டு பக்கங்களிலும் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் போர்க்கைதிகள் அருங்காட்சியகத்தை துவக்கி வைக்கும் காட்சிகள் உள்ளன

1905 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாளன்று வேல்ஸ் இளவரசரால் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது, இந்த அருங்காட்சியகத்திற்கு முறையாக "மேற்கு இந்தியாவின் வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம்" என்று பெயரிடப்பட்டது. 1 மார்ச் 1907 ஆம் நாளன்று, பம்பாய் பிரசிடென்சி அரசாங்கம் அருங்காட்சியகக் குழுவிற்கு "பிறை தளம்" என்று அழைக்கப்படும் ஒரு நிலத்தை வழங்கியது, அங்கு அருங்காட்சியகம் இப்போது உள்ளது. கட்டடத்தை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட திறந்த வடிவமைப்பு போட்டியைத் தொடர்ந்து, 1909 ஆம் ஆண்டில் கட்டிடக் கலைஞர் ஜார்ஜ் விட்டெட் அருங்காட்சியக கட்டிடத்தை வடிவமைக்க நியமிக்கப்பட்டார். விட்டெட் ஏற்கனவே பொது தபால் நிலையத்தின் வடிவமைப்பில் பணியாற்றியவர் ஆவார். மேலும் 1911 ஆம் ஆண்டில் மும்பையின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான இந்தியாவின் நுழைவாயிலை அவர் வடிவமைத்திருந்தார்.[4]

இந்த அருங்காட்சியகத்திற்கு ராயல் வருகை (1905) நினைவு நிதி மூலமாக நிதி கிடைத்தது. கூடுதலாக, அரசாங்கமும் நகராட்சியும் முறையே ரூ.3,00,000 மற்றும் ரூ. 2,50,000 வழங்கின.சர் கரிம்போய் இப்ராஹிம் (முதல் பரோனெட்) ரூ.300,000 வழங்கினார். சர் கோவாஸ்ஜி ஜஹாங்கிர் ரூ. 50,000 வழங்கினார். 1909 ஆம் ஆண்டு பம்பாய் சட்டம் எண் III இன் கீழ் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தற்போது அரசு மற்றும் மும்பை மாநகராட்சியின் வருடாந்திர மானியங்களைக் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியக கட்டிடம் 1915 ஆம் ஆண்டி கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 1920 ஆம் ஆண்டில் கமிட்டியிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், முதல் உலகப் போரின்போது குழந்தைகள் நல மையம் மற்றும் இராணுவ மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டது. பம்பாய் ஆளுநர் ஜார்ஜ் லாயிட்டின் மனைவி லேடி லாயிட் 10 ஜனவரி 1922 ஆம் நாளன்று அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.[5]

அருங்காட்சியக கட்டிடம் நகரத்தின் முதல் தரப் பாரம்பரிய கட்டிடம் என்ற சிறப்பினைப் பெற்றது. மேலும் 1990 ஆம் ஆண்டில் பாரம்பரிய கட்டிட பராமரிப்புக்காக இந்திய பாரம்பரிய சங்கத்தின் பம்பாய் கிளையால்முதல் பரிசு ( நகர பாரம்பரிய விருது ) வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் அருங்காட்சியகம் மராட்டிய பேரரசின் மன்னரும் சிறந்த வீரருமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் பெயரால் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் அழைக்கப்பட்டது .[6] 1995 ஆம் ஆண்டில் காலனித்துவ பெயரான பம்பாய் நகரம் மும்பை எனப் பெயர் மாற்றம் பெற்ற பின்னர் இந்த அருங்காட்சியகம் மறுபெயர் பெற்றது.[7]

படத் தொகுப்பு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Press Information Bureau: Union Ministry of Culture (5 September 2008). "Union Ministry of Culture give Administrative approval for 124.3 million Rupees for Modernization of Chhatrapati Shivaji Maharaj vastu Sangrahalaya, Mumbai". Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "Prince of Wales Museum". Extract from Frommer's India, 4th Edition. The New York Times. Archived from the original on 30 August 2010. பார்க்கப்பட்ட நாள் 3 December 2011.
  3. Desai, Kalpana (2002). Jewels on the Crescent: Masterpieces of Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya (Illustrated ed.). Mapin Publishing. p. 356. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-88204-00-7.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Official site".
  5. Maharashtra state gazetteers, Greater Bombay District. "Places: Prince of Wales Museum". Archived from the original on 14 June 2011.
  6. "Now, you can take museum relics home from Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya". www.dnaindia.com. Diligent Media Corporation Ltd. பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.
  7. "Why Did Bombay Become Mumbai?". www.slate.com. The Slate Group. பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]